Mu/Yogapuram MV - Old Students Society

Mu/Yogapuram MV - Old Students Society We want all old students of our School for develop our Yogapuram M.V . Do it together

யோகபுரம் மகாவித்தியால பழைய மாணவன் பா.பாரதிராஜன் (கனடா) அவர்களின் நிதிப்பங்களிப்பிலும் பழைய மாணவர் சங்க ஒழுங்கமைப்பிலும் ...
02/09/2023

யோகபுரம் மகாவித்தியால பழைய மாணவன் பா.பாரதிராஜன் (கனடா) அவர்களின் நிதிப்பங்களிப்பிலும் பழைய மாணவர் சங்க ஒழுங்கமைப்பிலும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் Prof.T. வேல்நம்பி அவர்களின் தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களான Dr.N. பிரதீபராஜா, Mr.C. உமகாந், விரிவுரையாளர் Mr.A. அஜந்தகுமார், கணக்கீட்டு ஆசிரியர் திரு. ரமணன் ஆகியோரின் பங்குபற்றுதல்களுடன் துணுக்காய் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை உள்ளடகிய க. பொ. த(உ / த) கலை,வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான செயலமர்வு எமது பாடசாலை மு/யோகபுரம் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எமது சங்கத்தின் ஒழுங்கமைப்பிலும், எமது வித்தியாலய பழைய மாணவன் திரு.பா.பாரதிராஜன்(கனடா) அவர்களின் நிதி அனுசரனையிலும், அனு...
31/08/2023

எமது சங்கத்தின் ஒழுங்கமைப்பிலும், எமது வித்தியாலய பழைய மாணவன் திரு.பா.பாரதிராஜன்(கனடா) அவர்களின் நிதி அனுசரனையிலும், அனுபவமிக்க யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களை வளவாளர்களாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த உயர்தர கலை, வர்த்தக பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலாமர்வு எமது பாடசாலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2,3 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இன்றைய(09.08.2023) தினம் எமது பாடசாலையில் 🔸பாடசாலை தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரை கடமையாற்றிய அதிபர்களின் புகைப்பட வி...
09/08/2023

இன்றைய(09.08.2023) தினம் எமது பாடசாலையில்

🔸பாடசாலை தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரை கடமையாற்றிய அதிபர்களின் புகைப்பட விபரம் திறந்துவைத்தல்.

🔸பழைய மாணவர் சங்க அலுவலகம் திறந்துவைத்தல்.

🔸பாடசாலைக்கான இணையத்தளம் ஆரம்பித்துவைத்தல்.

🔸பழைய மாணவர் சங்க அங்கத்துவ அட்டை வழங்கிவைத்தல்.

போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்புற நடைபெற்றன.

எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சி மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதன் ஒரு அங்...
16/06/2023

எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சி மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இதன் ஒரு அங்கமாக பழைய மாணவர் அங்கத்துவப் படிவங்கள் நிர்வாகத்தினரால் பூர்த்தி செய்யும் செயற்றிட்டம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
எமது பாடசாலை பழைய மாணவர்கள் ஆர்வத்துடன் இணைவதும் அவதானிக்கப்படுகிறது.

அங்கத்தவராக இணைய விரும்புபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

📞 +94760616759
📧 [email protected]

எமது யோகபுர அன்னையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைவோம்.

💙💛

நேற்றைய தினம் (01.03.2023) நடைபெற்ற எமது பாடசாலை வைரவிழா நிகழ்விற்கு பல வழிகளில் எமக்கு உதவிபுரிந்த பழைய மாணவர்கள் அனைவர...
02/03/2023

நேற்றைய தினம் (01.03.2023) நடைபெற்ற எமது பாடசாலை வைரவிழா நிகழ்விற்கு பல வழிகளில் எமக்கு உதவிபுரிந்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
"நன்றி "
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்.

எமது வித்தியாலயத்தின் வைரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நடைபவனியானது மாணவர்களின் உற்சாகத்தின் மத்தியில் மல்லாவி நகரை சிறப்பா...
24/02/2023

எமது வித்தியாலயத்தின் வைரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நடைபவனியானது மாணவர்களின் உற்சாகத்தின் மத்தியில் மல்லாவி நகரை சிறப்பாக வலம்வந்தது மீண்டும் எமது பாடசாலையை வந்தடைந்தது.

(இந்நிகழ்வின் பதிவுகள் சில)

எமது பாடசாலையில் நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (22.02.2033) பாடசால...
22/02/2023

எமது பாடசாலையில் நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (22.02.2033) பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

(இந்நிகழ்வின் சில பதிவுகள்)

இன்று (22.02.2023) எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானமானது பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்  மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழ...
22/02/2023

இன்று (22.02.2023) எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானமானது பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து முடிந்தது.

இப்பணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 🙏🏼

எமது யோகபுரத்தாயின் 60வது அகவையை சிறப்பிக்க அனைவரையும் அன்பாக அழைக்கின்றோம்.👉 01.03.2023 👈
19/02/2023

எமது யோகபுரத்தாயின் 60வது அகவையை சிறப்பிக்க அனைவரையும் அன்பாக அழைக்கின்றோம்.
👉 01.03.2023 👈

T-Shirt Available 👍.இப்போது பெற்றுக்கொள்ளுங்கள்.
06/02/2023

T-Shirt Available 👍.
இப்போது பெற்றுக்கொள்ளுங்கள்.

எமது பாடசாலையின் வைரவிழாவை முன்னிட்டு T-SHIRT வெளியீட்டு நிகழ்வானது இன்றைய தினம் எமது பாடசாலை மண்டபத்தில் மிகச்சிறப்பாக ...
06/02/2023

எமது பாடசாலையின் வைரவிழாவை முன்னிட்டு T-SHIRT வெளியீட்டு நிகழ்வானது இன்றைய தினம் எமது பாடசாலை மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிகழ்வானது வித்தியாலய முதல்வர் திரு.த. பிறேமச்சந்த்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு, விழாவின் பிரதம விருந்தினராக துணுக்காய் வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.சா.பிரதீவானந் அவர்களும், சிறப்பு விருந்தினராக துணுக்காய் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.த.யோகனந்தராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.

அத்தோடு முதன்மை T-SHIRT களை திரு.சு.சிவனடியார் (சமூக ஆர்வலர்), திரு.கு.ஜெகதீஸ்வரன் (முன்னாள் அதிபர்), திருமதி.பு.பாலசுப்பிரமணியம்(முன்னாள் பிரதி அதிபர்), திரு.பு.கேதீஸ்வரன் (மு/தேறாங்கண்டல் GTMS அதிபர்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாது, இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை ஊழியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வருகைதந்த அனைவருக்கும் பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼.

எமது பாடசாலையின் வைரவிழாவை முன்னிட்டு T-SHIRT 👕 வெளியீட்டு விழாவானது 06.02.2023 (திங்கள்) அன்று நடைபெறவுள்ளதால், அனைவரைய...
04/02/2023

எமது பாடசாலையின் வைரவிழாவை முன்னிட்டு T-SHIRT 👕 வெளியீட்டு விழாவானது 06.02.2023 (திங்கள்) அன்று நடைபெறவுள்ளதால், அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 🙏🏼

Address

Barathinagar, Yogapuram
Mullaitivu
42000

Telephone

+94760616759

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mu/Yogapuram MV - Old Students Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mu/Yogapuram MV - Old Students Society:

Shortcuts

Share

Category