HIQMA - Preschool Uyanwatta

HIQMA - Preschool Uyanwatta Nurturing Little Citizens

கடந்த 14ம் திகதி சனிக்கிழமை ஹிக்மா மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகள் நூராணியா விளையாட்டு மைதானத்தில் ...
29/10/2023

கடந்த 14ம் திகதி சனிக்கிழமை ஹிக்மா மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகள் நூராணியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விக்ஷேட மகப்பெற்று வைத்திய நிபுணர் அல்ஹாஜ் A.H.M.மகாரிம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சிற்கு வருகை தந்திருந்த அதிதிகளையும் சில நிகழ்ச்சிகளையும் படத்தில் காணலாம்.

01/10/2023

2024ம் கல்வியாண்டின் HIQMA பாலர் பாடசாலையை அலங்கரிக்க இருக்கும் இள மொட்டுக்களின் பெற்றோர்களுக்கு;
அஸ்ஸலாமு அலைக்கும் வ வ.
💥கல்வி அமைச்சின் வழிகாட்டலின்கீழ்,
ஒழுங்கமைக்கப்பட்ட பாத்திட்டத்தின் கீழ் HIQMA பாலர் பாடசாலை இரண்டு தசாப்த காலமாக பணியாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள்; அல்ஹம்துலில்லாஹ்!!!
💥உடல்,உள,ஆளுமை விருத்திக்கன நடைமுறைச்செயற்பாடுகளுடன் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டலில் (BILINGUAL)இருமொழியூடாக கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெரும்.
💥சிறார்களுக்கான இஸ்லாத்தின் அடிப்படை வழிகாட்டல்கள் நடைமுறை வாழ்க்கையோடு இணைந்ததாக அவர்களுக்கு கற்பிக்கப்படுவதோடு,
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱குறிப்பாக
🌱🌱🌱🌱🌱🌱🌱
ஒழுக்கம்+பண்பாடு உள்ளடங்கியதாக எமது கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது💥Hiqma பாலர் பாடசாலையில் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு
Hiqma குர்ஆன் மத்ரஸாவிற்கான அனுமதிக்கட்டணம் இலவசம்!!
💥 மாணவர்களின் ஆரம்ப கல்வி தொடர்பாக பெற்றோர்களுக்கு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி.
💥ஓடி,ஆடி, விளையாட ஏதுவாக பரந்த வெளி முற்றம்.
💥INDOOR PLAY FACILITIES.
💥MAWANELLA AG OFFICE ஊடாக (அரச அங்கீகாரம்)பெற்ற நிறுவனம்!
💥ஒரு தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த ஒரு நிறுவாக் குளுஊடாக இயங்கும் பாலர் பாடசாலை.
💥அனுமதிக்கட்ணம்,
மாதாந்த கட்டணம்,மற்றும் ஏனைய சகல விடயங்களும் சாதாரணமாக சகலருக்கும் செலுத்தக் கூடிய தொகை.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿உயன்வத்தையில் முதன் முதலாக🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
மாதம் ஒரு முறை 🔹🔹🔹காலை 08.00 முதல் பி.பகல் 1.00வரை

💜கலகலப்பான
💜குதூகலமான
💜பரவசமான
பாதுகாப்பான அரவணைப்புடன் WORKSHOP DAY 🌸🌸🌸🌸🌸
💥பிள்ளைகளின் நுண்ணறிவு ஆற்றல்களை இனம் கண்டு பிள்ளைகளை வழிகாட்டக்கூடிய வழி காட்டல்களும் வழங்கப்படும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
முற்றிலும் அவர்களின்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
திறன்🌱திறமை 🌱ஆளுமை🌱 வளர்ச்சியை நோக்காக கொண்டு இன்னும் பல………
புதிய திட்டமிடலுடன் HIQMA பயணிக்கின்றது…!
உங்களனைவரையும் அன்புடன் வரவேற்றுக் கொள்கிறோம்.
‎أهلا وسهلا ومرحبا
HIQMA PRESCHOOL
ADMINISTRATION &TEACHERS
தொடர்புகளுக்கு
077 939 6096
077 054 8423
(77) 437 2334
🌸விண்ணப்பங்கள் அல் ஹிக்மா பாலர் பாடசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.
🌸 10/15/2024 முன்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்றுக் கொள்ளப்படும் .
‎🌸JAZAKALLAH HAIRAN🌸
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿.

வருடாந்த சுற்றுலா -2023+++++++++++++++++++++எமது முன்பள்ளி மாணவர்கள் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பிற்கு சுற்றுலா சென்றார்க...
25/08/2023

வருடாந்த சுற்றுலா -2023
+++++++++++++++++++++

எமது முன்பள்ளி மாணவர்கள் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பிற்கு சுற்றுலா சென்றார்கள்.

பெற்றோர்கள்,ஆசிரியர்கள் அவர்களுடன் துணைக்கு சென்றனர்.

Water world, சிறுவர் பூங்கா,இரத்மலான விமானநிலையம், கொழும்பு,போர்ட் சிட்டி என்பன அவர்கள் சென்று வந்த இடங்களாகும்.கொழும்பு போர்ட் சிட்டி என்பது இலங்கையின் துடிப்பான வர்த்தக தலைநகரான கொழும்பின் மத்தியில் விரிவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட புத்தம் புதிய நகர வளர்ச்சியாகும்.

வாழ்வின் முதல்தடவையாக சில விதிகளுக்கு கட்டுப்பட்டு ஊருக்கு வெளியே போய்வந்த ஒரு கல்விச்சுற்றுலா.
இப்பிள்ளைகள் நற்பிரஜைகளாக வாழ வாழ்த்துவோம்.

கூட்டான் சோறும் வாழை இலை பந்தியும்-----------------------------------------------------------------------------நேற்றைய த...
02/08/2023

கூட்டான் சோறும் வாழை இலை பந்தியும்
-----------------------------------------------------------------------------

நேற்றைய தினம் (01-08-2023) போயா தினம்.
எமது ஹிக்மா மாணவர்கள் ‘குஞ்சு வீடு’ கட்டி, ‘கூட்டான் சோறு’ சமைத்து உண்டு மகிந்த தருணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை படத்தில் காணலாம்.

வாழை மரம் அதன் வாழ்நாளில் 40 இலைகளை பிரசவிக்கும்.

தமிழ் மக்கள் வாழை இலையில் தொன்று தொட்டு சாப்பிடும் வழமையைக்கொண்டிருக்கின்றார்கள்.சைவ உணவுக்கடைகளில் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள். இந்துக்களில் திருமணவைபவங்களிலும் ‘பந்தியில்’ வாழை இலையில் உணவு பரிமாறும் வழக்கம் உண்டு.

வாழை இலையில் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக கூறுகின்றனர். இளநரையை தடுத்து தலைமுடியை கருப்பாக வைத்திருக்கும் என்றும் வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும் என்றும் கூறுகின்றார்கள்.

Lunch Box – லஞ்ச் பொக்ஸ்- அறிமுகமாவதற்கு முன்னர் வாழை இலையை தணலில்வாட்டி அதில் சோறு கறிகளை இட்டுக்கட்டுவார்கள். சுற்றுலா,நீண்ட தூரப்பயணங்களின் போது இந்த ‘கட்டுச்சாதம்’ ஐ எடுத்துச்செல்லும் வழமை இருந்தது, இன்னும் இருக்கின்றது. வாழை இலையில் கட்டிய உணவின் சுவையும் அதன் மணமும் அலாதியானது!

சிறு பிள்ளைகள் குச்சிகளால் வீடு கட்டி, வாப்பா,உம்மா,தம்பி,தங்கை என ஒருவரையொருவர் என கற்பனையில் குடும்பம் அமைத்து சிறு சட்டிகளில் உணவு சமைத்து உண்டு மகிழ்வார்கள். அந்த ‘வேசன்’ ஐ விட, சற்று ‘அட்வான்சான’ ‘வேசன்’ தான் இது.

Painting
24/07/2023

Painting

2022 வருட ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களின் பட்டமளிப்பு விழா   கடுகஹவத்த 'GRAND SAPHIRE BENQUET HALL' இல்  கடந்த 11/03/20...
24/07/2023

2022 வருட ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களின் பட்டமளிப்பு விழா கடுகஹவத்த 'GRAND SAPHIRE BENQUET HALL' இல் கடந்த 11/03/2023 இல் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அதிதிகளையும் பெற்றோர்களின் ஒரு சாராரையும் காணலாம்.

அதிதிகளாக நூராணியாவின் தற்போதைய அதிபர் M.R.M.அக்ரம்,மஸ்ஜிதுன் நூர் 'பேஷ் இமாம் மெளலவி ஹசன் சஹ்ரி ஆகியோரையும் கலாநிதி அஷ்ஷேஹ் அல்ஹாபிழ்
ஹபீஸ் ஷரீப் ஸஹ்ரி அவர்களையும் மற்றும் ஹம்சா ஆசிரியர்,சுல்பிகார் ஆசிரியர் ஆகியோரையும் காணலாம்.

கடந்த வியாழனன்று (20/7/2023) ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்கள் தாம் கல்வி பயில இருக்கும் பாடசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர...
24/07/2023

கடந்த வியாழனன்று (20/7/2023) ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்கள் தாம் கல்வி பயில இருக்கும் பாடசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அவ்வினிய பொழுதில் பாடசாலையின்கெளரவ அதிபர் M.R.M.அக்ரம் அவர்களோடும் பெளசுல் ஹசன் ஆசிரியரோடும் எடுத்துக்கொண்ட படத்தைக்காணலாம்.

இப்பிள்ளைகளின் கல்விப்பயணம் இனிதாகட்டும்.

ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களை கடந்த செவ்வாயன்று,18/07/2023,மஸ்ஜிதுன் நூர் பெரிய பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோ...
24/07/2023

ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களை கடந்த செவ்வாயன்று,18/07/2023,மஸ்ஜிதுன் நூர் பெரிய பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை.

மாணவர்களுக்கு பள்ளிவாசலின் உற்புற அமைப்பு,தொழுகை பற்றிய எளிமையான விளக்கம் வழங்கப்பட்டது.

இறைவா! இறை அச்சம் உள்ளவர்களாக இப்பிள்ளைகள் வளர்வதற்கு வழிகாட்டுவாயாக.

New Admission
13/07/2023

New Admission

நீல நிறம்.....பாடம் 🥣🥣🥣நீல நிறத்தில் மிதக்கும் சிறார்கள்...🌈🌈🌈🌈
16/02/2021

நீல நிறம்.....பாடம் 🥣🥣🥣

நீல நிறத்தில் மிதக்கும் சிறார்கள்...🌈🌈🌈🌈

2020 – வருட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம்13-02-2021,சணிக்கிழமைஹிக்மா பாலர் பாடசாலையின் 2020 ம் கல்வியாண்டில் எம்மிடம்...
15/02/2021

2020 – வருட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம்

13-02-2021,சணிக்கிழமை

ஹிக்மா பாலர் பாடசாலையின் 2020 ம் கல்வியாண்டில் எம்மிடம் கல்வி பயின்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த சணிக்கிழமை ஹிக்மா மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த 2020 ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான வெளிக்கள கல்வி நடவடிக்கைகள் மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா என்பன இடம்பெருவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளை எமது ஆசிரியைகள் தங்கு தடையின்றி மாற்றுவழிகளினூடாக செய்தனர் என்பதனை இங்கு குறிப்பிடல் வேண்டும்.

அன்றைய தினம் நாம் மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தோம். அவர்களுடைய சான்றிதழ்கள் மற்றும் அவர்களுக்கான பரிசில்களையும் வழங்கினோம். பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளையும் வழங்கி கெளரவித்தனர்.

பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளையும் மட்டும் வைபவத்திற்கு அழைத்து நடாத்தப்பட்ட இவ்வைபவம் அழகாக இடம்பெற்றது.

பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெரவில்லை, காலமும் சூழ்நிலையும் அதற்கு இடம்தரவில்லை.

ஆசிரியைகள் குழந்தைகளுக்கான சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினர். பெற்றோர்கள் அவரவரின் பிள்ளைக்கு பதக்கத்தை அணிவித்தனர்.

பதக்கம் அணிவிக்கும் பொழுதுகள் மறக்கமுடியாதவைகளாக அமைந்தது. சிலர் துஆ ச்செய்து பதக்கத்தை அணிவித்தனர், அநேகர் அன்போடு முத்தமிட்டு உச்சாகப்படுத்துவதனையும் காணமுடிந்தது.

பரிசு பெருவதற்கும் பதக்கம் அணிவிக்கப்படுவதற்கும் பெற்றாரைவிடவும் யார்தான் தகுதி பெரமுடியும்?

மஸ்ஜிதுன்நூர் பள்ளிவாசலின் பேக்ஷ் இமாம் ஹசன் சஹ்ரி அவர்களின் இனிய கிறாத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி அவரின் துஆவுடன் வைபவம் நிறைவடைந்தது.

உங்களின் பிராத்தனைகளில் இவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுதந்திரதினம்சுதந்திரதினம் பற்றிய அறிமுகம், தேசிய கீதம் பற்றிய அறிமுகம், தேசியகொடி பற்றிய அறிமுகம், எவ்வாறு தேசியகீதம் இ...
11/02/2021

சுதந்திரதினம்

சுதந்திரதினம் பற்றிய அறிமுகம், தேசிய கீதம் பற்றிய அறிமுகம், தேசியகொடி பற்றிய அறிமுகம், எவ்வாறு தேசியகீதம் இயற்றும்போது மரியாதை செய்யவேண்டும் என்ற அனுபவம் மாணவர்களுக்கு சொன்னபோது....🥰🥰

Address

UYANWATTA
Mawanella
71527

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00

Telephone

+94777934826

Alerts

Be the first to know and let us send you an email when HIQMA - Preschool Uyanwatta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HIQMA - Preschool Uyanwatta:

Shortcuts

Share

Category