Ayeshah College of Higher Education
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayeshah College of Higher Education, College & University, P. O Box 14, Mawanella.
ACHE envisions to produce a mother imbued with knowledge and skills to play a catalytic role as a change agent in society, in which the family functions as an incubator in cultivating positive moral values, social, economic, political thoughts and behavi
24/10/2025
21/10/2025
20/08/2025
.மாவனல்லை ஆயிஷா உயர் கல்விக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற "அருள் மிகு குடும்பம் மகிழ்ச்சியான இல்லம்" என்ற கண்காட்சியின் போது ஜாமியா நளீமியாவின் முதல்வர் Ash Shikh A.C.Agar Muhammad அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு.
.......... மதிப்புக்குரிய சகோதரர்களே சகோதரிகளே ஆயிஷா உயர் கல்விக் கல்லூரி தனது 25 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்த சந்தரப்பத்திலே இந்த நிறுவனத்திற்கும் அதன் நிருவாகிகளுக்கும் இதன் போதனாசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நிறுவனம் நிலைக்க வேண்டும் நிலைத்தோங்க வேண்டும் இதன் பணிகள் இன்னும் மேம்பாடடைய வேண்டும் இந்த நிறுவனத்திற்கு ஊடாக சமூகமும் நாடும் பயன்பெற வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே நான் துஆ செய்கின்றேன்.
இந்த நல்ல வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த சந்தர்ப்பத்திலே கண்டிப்பாக நான் நினைவுகூற வேண்டிய ஒரு ஆளுமைதான் இந்த கலாசாலையை நிறுவிய இதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் ஏ.எல்.எம் இப்றாஹிம் ஹஸ்ரத் அவர்கள்.
அவர்களை நினைவுகூறாமல் இந்தக் கொண்டாட்டம் நிறைவுபெற முடியாது. எல்லோரும் நினைவு கூறுவார்கள் நானும் அவரை கண்டிப்பாக நினைவுகூறக் கடமைப்பட்டுள்ளேன். அது என்னுடைய தார்மீகக் கடமையும் கூட.
எனக்கும் அவருக்கும் இடையில் 35 ஆண்டுகள் கடந்த இறுக்கமான நெருக்கமான உறவு இருந்தது. 35 ஆண்டு காலமாக அவர்களது லட்சியப் பயணத்திலே அவரோடு இணைந்து பயணித்தவர்களில் நானும் ஒருவன் மாத்திரமல்ல முக்கியமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.
அவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முதல் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் வரை தனது விரிந்த பரந்த பங்களிப்புக்களை நாட்டுக்கும் சமூகத்திற்கும் நிறைவாக செய்தவர். இடையிலே எத்தினை எத்தினை முன்னோடி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அவர் தலைமைத்துவம் வழங்கினார் அல்லது முன்னோடியாக விளங்கினார் என்பதை நான் சொல்லி நீங்கள் விளங்க வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கின்றேன்.
அவர் வாழும் போது அவருடைய அருமை பெருமை மகிமை பல போது இந்த சமூகத்தால் புரியப்படவில்லை. இது எனது நீண்ட கால ஆதங்கம். அவருக்குரிய இடம் இந்த சமூகத்தில் வழங்கப்படவில்லை.
அவர் வாழும் போதே நான் சொல்லி வந்த ஒரு விஷயம் இது. ஆனால் எப்போதும் ஒருவர் வபாத்தாகிவிட்டால் போதும் ஆரம்பித்துவிடுவார்கள் புகழ் பாட மவ்லூத் மட்டும் ஓதமாட்டார்கள் அவர்களது முகாமைப் பொறுத்து. ஆனால் தமிழில் நிறைய மவ்லூத் ஓதுவார்கள்.
இது எமது சமூகத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிடத்தக்க பிழை, கோளாறு என்றால் அது பிழையாக இருக்கமாட்டாது. வாழும் போதே மனிதர்களை மதிக்கவும் அவர்களுக்கு நன்றி சொல்லவும் நானும் நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டப்பட வேண்டியவரை பாராட்ட வேண்டிய அளவுக்கு பாராட்டுவதென்பது உயர்ந்த மனிதப் பண்பு. இஸ்லாம் வலியுறுத்துகின்ற பண்பு. ரஸூல் (ஸல்) அவர்களுடைய சுன்னா மாத்திரமல்ல இஹ்லாஸினுடைய, தூய்மையினுடை வெளிப்பாடு.
ஆனால் யாரையும் பாராட்டப்படக்கூடாது என்று பிழையான மனப்பதிவு பரவலாக இருந்து வருகின்றது. பாராட்டை எதிர்பார்த்து செயற்படக் கூடாது கருமமாற்றக் கூடாது. பாராட்டப்பட வேண்டியவரை பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு தூய்மையாக பாராட்டுவது என்பது மிக முக்கியமான மனிதப் பண்பு. நமது மார்க்கம் வலியுறுத்துகின்ற பண்பு. ஆனால் வாழும் போது யாரையும் நாம் வாழ்துவதுமில்லை பாராட்டுவதுமில்லை.
அண்மைக் காலமாக கொஞ்சம் அளவுக்கதிகமாக சமூகம் இதனை கழாச் செய்து வருவதனையும் நான் காண்கிறேன். நானும் அந்த அலையில் மாட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகின்றது. எங்கு பாத்தாலும் புகழாரம் பாட்டு. நம் சமூகம் கழாச் செய்வதில் பக்கா ஈடுபாடுள்ள ஒரு சமூகம். எப்படியோ அதை கொஞ்சம் அடக்கமாக செய்துகொள்வது நல்லம் என்பதனையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
மதிப்புக்குரிய சகோதரர்களே... சகோதரிகளே... தாய்மார்களே... இப்றாஹிம் ஹஸ்ரத் என்ற ஆளுமை இந்த நாடு இந்த சமூகம் கண்ட ஒரு அரிதான ஆளுமை இவரைப் பற்றி தனியாகப் பேச வேண்டும் ஏலவே பேசியும் இருக்கின்றேன். எழுதியும் இருக்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் எனக்கு ஆயுளிலே இன்னும் சிறிது காலம் வாழும் சந்தர்ப்பத்தைத் தந்தால் அவரைப் பற்றிய ஒரு நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ் அந்த நினைவுப் பேருரையை நானே நடத்த வேண்டும். யாரும் அந்த விஷயத்தில் போட்டி போட வரமாட்டார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ் பிஇதினில்லாஹ்.
அந்த பண்முக ஆளுமையைப் பற்றி நிறையவே பேச வேண்டி இருக்கின்றது. எனக்கும் உங்களுக்கும் அவரது வாழ்க்கை முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதற்காகவே அல்லாமல் அவரது புகழைப் பாடுவதற்கல்ல.
அவர் எத்தனை எத்தனை வேலைத் திட்டங்களுக்கு தன்னை அர்ப்பணித்தார். எத்தனை எத்தனை முற்போக்கான, புரட்சிகரமான, காத்திரமான, சமூகத்திற்குத் தேவையான வேலைத் திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
பொதுவாக நம் சமூகத்தில் அதிகமானவர்கள் React பண்ணுவார்கள் Proactiveவாக சிந்திப்பவர்கள் நம் சமூகத்தில் மிக மிகக் குறைவு அதுவும் அந்தக் காலத்தில் மிகவும் குறைவு மூன்று நான்கு தசாப்த காலத்திற்கு முன்னால் Proactive சிந்தனையே நம் சமூகத் தலைமைகளிடம் இருக்கவில்லை.
ஆனால் அன்றே மிகவும் தூர நோக்கோடு நிறைய விஷயங்களை அவர் செய்தார். முன்னெச்சரிக்கைகளை விடுத்தார். பலர் அவர் சொன்ன விஷயங்களை காதில் வாங்கிக்கொள்ளவில்லை கேட்கவில்லை. அதைப் பற்றி எல்லாம் எனக்கு நிறையவே தெரியும் பேசலாம்.
எனவே அத்தகையதொரு மனிதரைப் கொண்டாடாமல் நாம் யாரையும் கொண்டாட முடியாது. அவருடைய சிந்தனைகளை நாம் சுமக்காமல் யாருடைய சிந்தனைகளைச் சுமப்பது? அவருடைய சிந்தனைகளை சமூகமயப்படுத்தாமல் யாருடைய சிந்தனைகளை சமூகமயப்படுத்துவது என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன்.
அவருடைய ஒவ்வொரு வேலைத் திட்டமும் காலத்தின் தேவையை சரியாக அடையாளங் கண்டு சரியாக முன்னெடுத்த வேலைத்திட்டம். அது ஆயிஷாவாக இருக்கலாம் தன்வீர் அகடமியாக இருக்கலாம் இஸ்லாஹிய்யாவுக்கு அவர் செய்த பங்களிப்பாக இருக்கலாம். இந்த நாட்டினுடைய பொதுக் கல்விக்கு அவர் செய்த பங்களிப்பாக இருக்கலாம்.
இஸ்லாம் பாடத்திற்கு அவர் செய்த பங்களிப்பா இருக்கலாம். தஃவா களத்துக்கு செய்த பங்களிப்பாக இருக்கலாம். தப்ஹீமுல் குர்ஆனை சிங்கள மொழியிலே கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய அந்த ஈடுபாடாக இருக்கலாம்.
ப்ரபோதைய என்று சிங்களத்தில் ஒரு சஞ்சிகை வர வேண்டும் என்பதில் அவர் எவ்வாறு செயற்பட்டார் என்ற விஷயமாக இருக்கலாம். அல்ஹஸனாத்துடைய ஆசிரியராக இருந்து அல்ஹஸனாத்துக்கூடாக சில சிந்தனைகளை சமூகமயப்படுத்துவதிலே அவர் காட்டிய ஈடுபாடாக இருக்கலாம்.
அரபு மொழியிலே தெரிவுசெய்யப்பட்ட நூல்களை எடுத்து அதனை தமிழாக்கம் செய்வதில் காட்டிய அந்த முனைப்பாக இருக்கலாம். இப்புடி அடிக்கொண்டே போகலாம்.
இந்த ஆயிஷா சித்தீகாவில் அவர் காட்டிய முனைப்பு என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. அந்த அளவுக்கு இதில் அவர் ஈடுபாடு காட்டினார். எவ்வாறு இன்று பேசப்படுகின்ற women empowerment, பெண்களை வலுவூட்ட வேண்டும் என்ற எண்ணக்கருவை கனவாகக் கண்டு சமூகத்தின் சமாபாதியா சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும்.
அவர்கள் வலுவூட்டப்படுவதற்கு வழியாக இருப்பது கல்வியே என்ற அந்த உண்iமையைப் புரிந்து பரந்த விரிந்த அறிவை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தில்தான் இந்த கலாபீடம் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் அவருடைய எண்ணத்தின் படி நோக்கத்தின் படி இது பயனித்து வருவதனைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். அது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விஷயம். ....................
யாஅல்லாஹ்! அன்னாருடைய முயற்சியை கபூல் செய்வாயாக! அன்னாருடைய பாவங்களை மன்னிப்பாயாக! அவருக்கு அருள் செய்வாயாக! அவருக்கு ஆபியத்தை நல்குவாயாக! அவரை பொறுத்தருள்வாயாக! நாளை மறுமையில் இத்தகைய மனிதர்களோடு எம்மையும் சுவன வாழ்வில் இணைத்தருள்வாயாக!
தொகுப்பு : Sajeer Muhaideen
19/08/2025
A Message by Ash-Sheikh A.C. Agar Muhammed Rector of Jamiah Naleemiah – Beruwala Sharing his valuable thoughts during his visit to our Grand Exhibition 2025.
Ayeshah College - Mawanella 25th Anniversary
Stay tuned! We’ll be going live shortly with our special guest speaker the founder of Zam Zam foundation Asheikh. Yoosuf M***i.
09/08/2025
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
P. O Box 14
Mawanella