08/06/2026
Prefects' Investiture Ceremony 2026
எமது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) மற்றும் பழைய மாணவர் சங்கம் (PPA) பெற்றோர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியில், மாணவத் தலைவர் சின்னம் சூட்டும் நியமன விழா 2026 ஜூன் 03, புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக திருமதி K.A.C. கஸ்தூரி ஆரச்சி (SLEAS) (யடவத்த கோட்டக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும்
கௌரவ விருந்தினராக
திரு. M.Y.A. அகீல் ஹமீத்
(PSI அதிகாரி, ZEO, மாத்தளை. அவர்களும் கலந்துகொண்டனர்.
நேர்முகத் தேர்வுப் புள்ளிகளின் அடிப்படையில்
எம் பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்கள் (Prefects), மாணவர்களின் பன்முகத் திறமைகள் மற்றும் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் முறையான மற்றும் வெளிப்படையான புள்ளிவழங்கல் திட்டத்தின் மூலமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்கள் 6 முக்கிய நியதிகளின் கீழ் மதிப்பிடப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டுத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்:
மேலும் இவ் விழாவில் கடந்த ஆண்டு மாணவத் தலைவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
தெரிவுசெய்யப்பட்ட அனைத்து மாணவத் தலைவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
08/05/2026
ஆசிரியை A.R. மஸீஹா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 🌸
"கல்விப் பணியில் ஒரு சகாப்தம் - கண்ணீரோடு கலந்த வழியனுப்பல்"
1993 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை (33 வருடங்கள் ) அர்ப்பணிப்புடன் ஆசிரியர் பணியாற்றிய மதிப்பிற்குரிய ஆசிரியை A.R. மாஸீஹா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, இன்று (2026.05.07) பாடசாலை வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
✨ நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
பாடசாலைச் சமூகம் சார்பில் ஆசிரியைக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச்சின்னங்கள் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC) மற்றும் பழைய மாணவர் சங்கம் (PPA) ஆகியோரும் நினைவுச் சின்னங்களை வழங்கி சிறப்பித்தனர்.
பெற்றோர்களும் ஒன்றிணைந்து, ஆசிரியையின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி கெளரவித்தனர்.
மாணவர்களின் இதயம் தொடும் கவிதைகள், நெகிழ்ச்சியான பேச்சுகள் மற்றும் ஆசிரியர் புகழ்பாடும் பாடல்கள் அரங்கை உணர்ச்சிவசப்பட வைத்தன.
அத்துடன் இந்நிகழ்வில் எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஓய்வுபெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ஆசிரியையுடனான தமது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 33 ஆண்டுகால நீண்ட நெடிய கல்விப் பயணத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆசிரியை மாஸீஹா அவர்களின் ஓய்வுக்காலம் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
22/04/2026
அலுவலக புனரமைப்பு I
எமது பாடசாலை அலுவலக புனரமைப்பின் முதற்கட்டம் இறைவனின் பெருங்கருணையால் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
இச்செயற்றிட்டம் சுமார் 250,000 செலவில் அலுவலகம் Tile பதிக்கப்பட்டு , paint பூசப்பட்டு புதிய கதவும் போடப்பட்டுள்ளது .
இதற்கு உதவிய எமது ஊரின் YMMA ,நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
09/04/2026
இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி - 2026
கனிஷ்ட பிரிவு கிரிக்கெட் (JUNIOR CRICKET) சுற்றுப்போட்டி (தரம் 5 - 9)
நமது பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக நடைபெற்ற கனிஷ்ட கிரிக்கெட் தொடர் கடந்த 2026.04.02 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு:
வெற்றியாளர் (Champion): சபா (SAFA) இல்லம் 🏆
இரண்டாமிடம் (Runner-up): ஹிரா (HIRA) இல்லம் 🥈
மூன்றாமிடம்: மினா (MINA) இல்லம் 🥉
இந்தக் கிரிக்கெட் தொடர் முழுவதும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடர் ஆட்ட நாயகனாக
YOOSUF SHIYAM
(SAFA HOUSE) தெரிவு செய்யப்பட்டார் .
பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!
பாடசாலை நிர்வாகம் மற்றும் விளையாட்டு குழு
01/04/2026
🎓 வெற்றிச் சிகரம் தொட்ட எமது பாடசாலை முத்துக்களுக்கு வாழ்த்துக்கள்!🎓
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் தோற்றி, 100% சித்தியடைந்து எமது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
குறிப்பாக எமது மாணவி அஸ்மா அஜ்மீர் கலைத் துறையில் மாவட்ட மட்டத்தில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்து மாணவர்களை வழிநடத்தி, அர்ப்பணிப்புடன் உழைத்த அதிபர், ஆசிரியப் பெருந்தகைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்களது உயர்கல்வியிலும் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து, சமூகத்திற்கு சிறந்த சேவையாற்ற எமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!
29/03/2026
யடவத்த பிரதேச சபை நடாத்திய பெண்களுக்கான வலைப்பந்து (Netball) சுற்றுப்போட்டி - 2026.03.25
எமது பாடசாலை மாணவிகள் யடவத்த பிரதேச சபை மட்டத்தில் நடைபெற்ற வலைப்பந்துப் போட்டிகளில் பங்குபற்றி,
எமது இரு அணிகளும் சிறந்த
முறையில் விளையாடி
🥇 Senior அணி - முதலாம் இடத்தையும் (Champions)
🥈 Junior அணி - இரண்டாம் இடத்தையும் Runner-up)
பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பாடசாலை நிர்வாகம், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
27/03/2026
எமது பாடசாலை, பாதை புனரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி நிறைவு!🚧🏗️
எமது பிரதேச சபை உறுப்பினரும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான திரு நௌஷாத் பாரூக் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, யடவத்த பிரதேச சபையினால் எமது பாடசாலைக்கு 20 சிமெந்துப் பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இதனைப் பயன்படுத்தி, மின்ஹாஜ் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடனும் ஒத்துழைப்புடனும், எமது பிரதான பாதையின் ஒரு பகுதி கொன்கிரீட் இடப்பட்டு அகலமாக்கப்பட்டுள்ளது.
💰 திட்டத்தின் மொத்தப் பெறுமதி: 110,000 ரூபா.
எமது மாணவர்களின் நலன் கருதி இந்தப் பணியை முன்னெடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🌹
19/02/2026
ஆன்மீக அறிவொளியில் எமது பாடசாலைச் சமூகம்!
எமது பாடசாலை மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் ஆன்மீக மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் 2026.02.13 (வெள்ளிக்கிழமை) பாடசாலை வளாகத்தில் இரண்டு விசேட வழிகாட்டல் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
1. ஆசிரியர்களுக்கான விசேட கலந்துரையாடல்
நிககொல்லை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய மிம்பர் திறப்பு விழாவின் ஒரு அங்கமாக, கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள எமது ஆசிரியர்களுக்கான விசேட அமர்வு இடம்பெற்றது.
சிறப்பு அதிதி: அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்கள்.
இந்நிகழ்வில் மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன:
- எமது ஊரில் கல்வியை எவ்வாறு அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது என்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
- பிள்ளைகளை வெளியூர்களுக்கு அனுப்பாமல், எமது ஊரிலேயே, எமது பாடசாலையிலேயே தங்கி இருந்து எவ்வாறு சிறந்த முறையில் கல்வியைத் தொடரச் செய்வது என்பது பற்றியும், அதற்கான வளங்களை மேம்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
2. மாணவர்களுக்கான ரமழான் விசேட வழிகாட்டல்
புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாகவும், மாணவர்களின் ஆன்மீக விழிப்புணர்விற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சொற்பொழிவு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
சிறப்பு சொற்பொழிவாளர்: J.M. ரிஹாஸ் மௌலவி (இமாம், நூர் ஜும்ஆ மஸ்ஜித், பத்திங்கஸ்கொட்டுவ).
நேரம்: முற்பகல் 8:30 - 9:30 வரை.
இந்த இரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை நிர்வாக சபை, அதிபர், நிககொல்லை ஜும்மா மஸ்ஜித் நிருவாகத்தினர் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
13/02/2026
ரமழான் மாத சிறப்புக் காலைக் கூட்டம்
எமது பாடசாலையின் இந்த வாரக் காலைக் கூட்ட நிகழ்வானது "ரமழான்" எனும் கருப்பொருளில் (Theme), தரம் 8 மாணவர்களினால் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது .
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
அறிமுகம்:
ரமலான் மாதத்தின் மகத்துவம் மற்றும் அதன் நோக்கம் பற்றிய தெளிவான அறிமுகம்.
உரையாடல்:
மாணவர்கள் பங்கேற்ற ரமலான் குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள்.
கலை நிகழ்வுகள்:
ரமலான் மாதத்தின் பெருமையை விளக்கும் இனிமையான பாடல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கவிதைகள்.
சிறப்புரைகள்: *
ரமலான் மாதத்திற்கு எவ்வாறு தயாராவது மற்றும் அதன் ஒழுக்க விழுமியங்கள் குறித்து வகுப்பு ஆசிரியர் மற்றும் காலைக் கூட்ட பொறுப்பாசிரியர் ஆகியோரின் வழிகாட்டல் உரைகள் இடம்பெற்றன.
புனிதமான ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாகவும், மாணவர்களிடையே ஆன்மீக மற்றும் ஒழுக்க விழுமியங்களை வளர்க்கும் விதமாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
"புனித ரமலான் எம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்!"
11/02/2026
பாடசாலை பிரதான மண்டபம் புதுப்பொலிவு பெற்றது!
எமது
பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு (Main Hall) வர்ணம் பூசி, அதனைப் புதுப்பொலிவுடன் அழகுபடுத்தித் தந்த Nikagolla YMMA அமைப்பினருக்கும், அவர்களுக்குப் பக்கபலமாக நின்ற நலன் விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுமார் 150,000 (ஒன்றரை இலட்சம்) ரூபாய் பெறுமதியிலான இந்தச் சீரமைப்புப் பணியானது, எமது பாடசாலைச் சூழலை மெருகூட்டியுள்ளதுடன், மாணவர்களின் கற்றல் மற்றும் கலை நிகழ்வுகளுக்கான ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தமது சமூகப் பொறுப்பினை உணர்ந்து, எமது பாடசாலையின் வளர்ச்சிக்காகத் தாராளமாக உதவிய Nikagolla YMMA அமைப்பினரின் இந்த நற்பணி போற்றுதலுக்குரியது. இவர்களின் கல்விசார் மற்றும் சமூகப் பணிகள் மென்மேலும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"கல்விப் பணிக்கு கைகொடுத்த நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்!"