Ash shaik Althaf - Meezani

Ash shaik Althaf - Meezani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ash shaik Althaf - Meezani, Tutor/Teacher, Matale.

09/01/2026
உலக அரபு மொழி தினம் 2025எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி பல நூற்றாண்டுகளா...
17/12/2025

உலக அரபு மொழி தினம் 2025

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும் தினம் இன்றாகும். அரபு மொழியானது மொழிச் செழுமையும் கட்டமைப்பில் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட ஒரு பண்டைய வரலாற்று மொழி மட்டுமல்ல, மாறாக காலத்தின் மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட உயிரோட்டமான மொழியாகும்.

அரபு மொழி அதன் நாகரிக முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரபூர்வ மற்றும் நிறுவன மட்டங்களில் அதிகரிக்கும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதிலும், சுதேச உணர்வை உறுதிப்படுத்துவதிலும், கல்வி, அறிவு மற்றும் புத்தாக்க துறைகளுக்கு ஆதரவளிப்பதிலும் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகும். இதனடிப்படையில், சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டம், கல்வி, ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியின் பாவனையை வலுப்படுத்துவதன் மூலம், அரபு மொழியின் உள்வாங்களை மேம்படுத்தி, மொழியை கலாச்சார மற்றும் அறிவு மேம்பாட்டு திட்டங்களுடன் இணைப்பதன் மூலம், தனிநபர் கட்டமைப்பிலும் சமூக வளர்ச்சியிலும் அரபு மொழி ஒரு அடிப்படை கூறாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரபு மொழிக்கான மன்னர் சல்மான் உலகளாவிய அகாடமி, அரபு மொழிக்குச் சேவை செய்யும் ஒரு முன்னேற்றமான நிறுவனமாக திகழ்கிறது. மொழிசார் திட்டமிடல், அகராதிகள் மற்றும் மொழித் தரவுத்தொகுப்புகள் உருவாக்கம், அறிவியல் ஆய்வுகளுக்கு ஆதரவு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியின் பயன்பாட்டை ஊக்குவித்தல், மேலும் சர்வதேச கூட்டாண்மைகள் உருவாக்கி திறமைகளை உருவாக்குதல் போன்ற சிறப்பு அறிவியல் பங்குகளை அது மேற்கொள்கிறது. இதன் மூலம், அரபு மொழியின் செயல்திறனை உயர்த்தி, அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்துகிறது.

உலக அரபு மொழி தினத்தை கொண்டாடுவது, அதன் நாகரிக மதிப்பு கலாச்சார வளர்ச்சியில் அதன் பங்களிப்பும் குறித்த அதிகரிக்கும் விழிப்புணர்வை உறுதிப்படுத்துவதோடு, இன்றைய உலகின் வேகமான மாற்றங்களுடன் ஒத்திசைவதற்காக அரபு மொழியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உள்ள உறுதிப்பாட்டை புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

இறுதியாக, அரபு மொழியானது புதுப்பித்தலும் பங்களிப்பும் செய்யக்கூடிய ஒரு உயிருள்ள மொழியாகத் தொடர்ந்து திகழ்கிறது; மேலும், அதிக தொடர்பாடலும் படைப்பாற்றலும் நிறைந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் அதன் கலாச்சார மற்றும் அறிவுப் பங்கு தெளிவாக வெளிப்படுகிறது.

04/11/2025

#عندما ينتظر الدارسون حصتك، فاعلم أنك قد نجحت🌹

#عندما يحب الدارسون حصتك، فاعلم أنك قد نجحت🌹

#عندما لا ينظر الدارسون في الساعة، فاعلم أنك قد نجحت🌹

#عندما ينفذ الدارسون ما تكلفهم به من مهام بحماسة، فاعلم أنك نجحت
🌹

#عندما يشعر الدارسون بمرور وقت حصتك بسرعة، فاعلم أنك قد نجحت🌹

அன்பின் ஆசிரியரே!

*மாணவர்கள் உங்கள் பாடவேளையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் ஓர் ஆசிரியராக வெற்றி பெற்று விட்டீர்கள்.

*உங்கள் பாடத்தை அவர்கள் விரும்புகின்றார்கள் எனில் நீங்கள் நீங்கள் ஓர் சிறந்த ஆசிரியர்.

*நீங்கள் கற்பிக்கும் வேளை கடிகாரத்தை அடிக்கடி பார்க்காமல் இருந்தால் நீங்கள் ஓர் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்.

*உங்களிடம் கல்விகற்பவர்கள் நீங்கள் பணிக்கும் வேலைகளை மிகுந்த அக்கறையுடன் செய்தால் நீங்கள் ஓர் சிறந்த ஆசிரியர்.

*உங்கள் பாடவேளை அவசரமாக முடிவடைகின்றதே என்ற ஏக்கம் மாணவர்களுக்கு ஏற்படுமானால் நீங்கள் ஓர் வினைத்திறன் மிக்க ஆசிரியர்.

24/09/2025

நேற்றைய தினம் வபாத்தான சவூதி அரேபியாவின் முப்தி கெளரவ அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷெய்ஹ் அவர்கள் பற்றிய ஓர் சிறு குறிப்பு.

*1943 இல் மக்காவில் பிறந்தார்.

*தனது 10 வயதில் அல்குர்ஆனை மனனம் செய்தார்.

*1965 இல் ரியாத் நகரிலுள்ள ( معهد إمام الدعوة ) வில் ஆசிரியராக இணைந்து கொண்டார்.

*1987 இல் மூத்த அறிஞர்கள் சபை ( هيئة كبار العلماء ) உறுப்பினரானார்.

*1999 இல் அறிஞர்களின் சபையின் தலைவராகவும் முப்தியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

*தனது 20 வயதளவில் கண் பார்வையை இழந்தார்.

*1964 இல் ரியாத் பல்கலைகழகத்தில் ஷரீஆ பீடத்தில் பட்டம் பெற்றார்.

*1982 இல் அறபா மைதானத்தில் உள்ள மஸ்ஜித் நமிராவில் கதீபாகவும் இமாமாகவும் செயற்பட்டார்.

*1995 ஆம் ஆண்டு முழு சவூதிக்குமான பொதுவான முப்தியாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.

*சவூதி வரலாற்றில் மூன்றாவது முப்தியாக தனது பெயரை பதிவு செய்தார்.

Address

Matale

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ash shaik Althaf - Meezani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ash shaik Althaf - Meezani:

Shortcuts

Share

Category