அறிவு விருட்சம்

அறிவு விருட்சம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அறிவு விருட்சம், Education, Hospital Road, Maskeliya.

காலையில் ஆமையாகவும் ,  மாலையில் முயலாகவும்  நடப்பவர்கள் தவிர்ந்த கட்டிய சேலையும்பூசிய CREAM உம்அச்சு மாறாமல்கற்பிப்பவர்க...
06/10/2025

காலையில் ஆமையாகவும் ,
மாலையில் முயலாகவும்
நடப்பவர்கள் தவிர்ந்த

கட்டிய சேலையும்
பூசிய CREAM உம்
அச்சு மாறாமல்
கற்பிப்பவர்கள்
தவிர்ந்த

கையில் CHALK
படாமல்
கற்பிப்பவர்கள்
தவிர்ந்த

மாணவரிருப்பதால்தான்
நாம் ... என்பதை
மறந்து வகுப்பறையில்
கற்பித்தலில்
ஈடுபடாமல் தன்
கற்றலை மேம்மபடுத்துபவர்கள்
தவிர்ந்த

கையொப்பமிடவும் ,
கதை பேசவும்
செல்பவர்கள்
தவிர்ந்த

ஏனைய அனைத்து
நல் ஆசிரியர்களுக்கும்
மனமகிழ்
ஆசிரியர் தின
நல் வாழ்த்துகள்

fans
அறிவு விருட்சம்

14/08/2025

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், குழந்தை சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்கு முறைப்பாடு செய்யும் nursery ஆசிரியர்களுக்குமான பதிவு.

கீழுள்ள படத்தை அவதானியுங்கள்.

6 வயது வரை, அவர்களின் சிறிய கைகள் முழுமையாக உருவாகாமல் வளரும் நிலையிலே உள்ளன . குழந்தைகள் விஷயங்களைப் புரிந்து வைத்திருக்கவும், இறுதியில் அவர்களின் எழுதும் திறனை வளர்க்கவும் அவர்களின் கைகளில் முற்போக்கான வளர்ச்சி தேவைப்படுகிறது . மற்ற தசைகளைப் போலவே, நாம் அவைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அவற்றைப் பலப்படுத்த வேண்டும், மேலும் வலுவடைய தொடர் பயிற்சி செய்ய வேண்டும்

எனவே இதை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

விளையாட்டு... மணல் மண்ணில் நன்கு விளையாட விடுதல் , வண்ணம் தீட்டுதல், கடுதாசிகளை கிழித்தல், மணி அடித்தல், பருத்தி பந்துகளை எடுத்தல், சுத்தம் செய்தல், துடைத்தல், பிடித்தல், பிடுங்குதல், வெட்டுதல், நடுதல், தோண்டுதல் போன்றவை.

இந்த வகையான செயல்பாடுகள் உங்களுக்கு கல்வி போல் இல்லாமல் இருப்பதாக உணரலாம் , ஆனால் அவை வரவிருப்பவற்றின் அடித்தளமாகும். நாம் அவர்களை அவரசரப்படுத்தினால் அதன் முடிவுகள் நீண்டகால பேரழிவையே நமக்குத் தரும்.

குழந்தைகள் எழுதத் தயாராகும்போது, ​​அவர்கள் எழுதுவார்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை, அவர்கள் தயாராக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குக் எழுதிக் காண்பிப்பார்கள். உங்களுடைய அவசரத்தினால் அவர்கள் வாழ்க்கையை அழிவுக்குள்ளாக்காதீர்கள்.

Grade 01அறிவு விருட்சம் அறிவு விருட்சம் போட்டிப் பரீட்சை வழி காட்டி ( அறிவு விருட்சம் ) Shanmugaraj satheeshkumar
14/08/2025

Grade 01
அறிவு விருட்சம் அறிவு விருட்சம் போட்டிப் பரீட்சை வழி காட்டி ( அறிவு விருட்சம் ) Shanmugaraj satheeshkumar

இலகு தமிழ் செயலட்டைமெல்ல கற்கும் மாணவர்களுக்காக
03/08/2025

இலகு தமிழ் செயலட்டை
மெல்ல கற்கும் மாணவர்களுக்காக

29/06/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/11/2024

ஒரு நாய் குரைத்தால் ஊர் நாய் குரைக்கும்..

17/09/2024

🚘கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்... தேசிய நெடுஞ்சாலையில்...!

நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது... பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது! ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள். ஒரு விலையுயர்ந்த காரில்... இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!

அது உங்களுக்குப் பிடிக்கவில்லை! வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள். அவரும் உயர்த்தியிருப்பார் போல...! இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...! சளைத்தவரா நீங்கள்...? வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள். அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.

நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள். இப்படியே போனால்..... முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை! இந்நிலையில்.... உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!! இப்போது..... உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!

நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி... பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்... இப்போதோ... ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்... கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! காரணம்.... வேறு யாரோ.. எவரோ..?

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்! தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி... அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து... தங்க" ள் இலக்கைக் கோட்டை விடுவதோடு... பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!

உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்! நாமே ஓட்ட வேண்டும்! வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்! அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை... நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது... நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை... எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!

03/09/2024

பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது.

Address

Hospital Road
Maskeliya
22070

Website

Alerts

Be the first to know and let us send you an email when அறிவு விருட்சம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category