Shams Central College, Maruthamunai

Shams Central College, Maruthamunai Maruthamunai

2026 ம் ஆண்டுக்கான கல்முனை வலயம் மற்றும் கிழக்கு மாகாண காற்பந்து சம்பியன்களாக கமு/கமு ஷம்ஸ் ம.க மருதமுனையின் 16 வயது & 2...
27/07/2026

2026 ம் ஆண்டுக்கான கல்முனை வலயம் மற்றும் கிழக்கு மாகாண காற்பந்து சம்பியன்களாக கமு/கமு ஷம்ஸ் ம.க மருதமுனையின் 16 வயது & 20 வயது அணிகள் முடி சூடின.

ஒரே தடவையில் இரண்டு தங்கப் பதக்கங்களை (மாகாண மட்டம் - காற்பந்து) இக்கல்லூரி பெற்றுக்கொள்வது இதுவே முதற் தடவையாகும்.

இன்றைய காலை ஆராதனையில் பாடசாலை முதல்வர் அல்ஹாஜ் எம்.பி.ஏ.றாஜி அவர்களின் தலைமையில் வெற்றியீட்டிய வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களான M.J தாரிக்,MA.அப்ராஸ் விளையாட்டு பயிற்றுவிப்பாளரான N. ஜெஸாட் பெளலாட், M.A.M.S பஸ்லூன், மற்றும் ஆகியோர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். விசேட அழைப்பின் பேரில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணியாளரும் கல்லூரியின் EPSI Coordinator மான Mr M.L.M.Mutharis sir அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.

மருதமுனை மண்ணின் கால்பந்து பாரம்பரியமும் மற்றும் மருதமுனை  ஸம்ஸ் மத்திய கல்லூரியின் (KM/KM Shams Central College) சமீபத்...
24/07/2026

மருதமுனை மண்ணின் கால்பந்து பாரம்பரியமும் மற்றும் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் (KM/KM Shams Central College) சமீபத்திய மாகாண மட்ட வரலாற்று சாதனையும்.

கிழக்கு மண்ணின் கால்பந்து தடங்களும் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் மீள் வருகையும்!!

கிழக்கு மாகாணத்தின் விளையாட்டு சாதனைப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அதில் கால்பந்து விளையாட்டுக்கு என்று தனியிடம் உண்டு. குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மண், 'கால்பந்தாட்டத்தின் தொட்டில்' என்றும் 'முடிசூடா மன்னன்' என்றும் போற்றப்படும் பாரம்பரியத்தைக் கொண்டது. விளையாட்டுத் துறையில் மாத்திரமன்றி, பாடசாலைகள் மட்டத்திலும் தமக்கென ஒரு தனியடையாளத்தைப் பதித்துவந்த இக்களத்தில், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி (KM/KM Shams Central College) நிகழ்த்தியுள்ள அண்மைய சாதனை, கிழக்கு மண்ணின் கால்பந்து மீள் வருகையை கிழக்கு மண்ணுக்கு உணர்த்தியுள்ளது.

மருதமுனை மண் வெறும் ஒரு கிராமம் அல்ல ஒருகாலத்தில் அது கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தொழிற்சாலை. ஊர் மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் புகழ்பூத்த பல முன்னோடி விளையாட்டுத் தலைமுறைகளையும் கழகங்களையும் இது தன்வசம் கொண்டுள்ளது.

முன்னணி விளையாட்டு கழகங்களாக
(Sports Clubs)
Olympics SC
Gold Mind SC
Eastern Youth SC
Green Max SC
Marutham SC
Everedy SC
Universe SC

இவ்வாறான புகழ்பெற்ற கழகங்கள் ஊடாக உருவான வீரர்கள், பல தசாப்தங்களாக மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விளையாடி, மருதமுனையின் பெயரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் கால்பந்தாட்ட வரலாற்றில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி எப்போதுமே ஒரு பலமிக்க அணியாகவே திகழ்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குக் பின்னர், தற்போது 16 வயதின்கீழ் ஆண்கள் (Under 16) மற்றும் 20 வயதின்கீழ் ஆண்கள் (Under 20) ஆகிய இரு பிரிவுகளிலுமே மாகாண மட்டச் சாம்பியன்களாக (Eastern Provincial Champions) முடிசூடி, தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளமை ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும்.

அர்ப்பணிப்பும் கடின உழைப்பும்..

வீரர்களின் தொடர்ச்சியான பயிற்சி, விவரிக்க முடியாத உடற்கல்வி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் களத்தில் அவர்கள் காட்டிய மனவுறுதி (Determination) என்பன இந்த இரட்டைச் சாதனைக்கு முகாந்திரமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

"One Team • One Dream • One Victory" என்ற தாரக மந்திரத்திற்கேற்ப, களத்தில் வீரர்கள் காட்டிய ஒருமைப்பாடும் உத்தியும் எதிரணிகளைத் திணறடித்தன என்றால் மிகையாகாது.

தலைமைத்துவ வழிகாட்டி!!

கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் MBA. ரஜி (Al-Haj MBA. Raji) அவர்களின் வழிகாட்டலும், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பும் இவ்வெற்றிப் பாதைக்கு உரமாக அமைந்தன என்பதும் இங்கு சுட்டிக் காட்டப் பட வேண்டியது.

மாகாண மட்டத்தைச் சீரான முறையில் தன் வசப்படுத்தியுள்ள ஸம்ஸ் மத்திய கல்லூரி கால்பந்து அணிக்கு, இனிவரும் நாட்களுக்கான ஒரே இலக்கு "தேசிய மட்ட வெற்றி" (National Championship) என்பதாகும்.

இச்சாதனை வெறும் சாம்பியன் பட்டத்தோடு நின்றுவிடாமல், இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு மருதமுனை மண்ணில் இருந்து பல இளம் திறமையாளர்களைத் தாரைவார்க்கும் கதவைத் திறந்துவிட்டுள்ளது எனவே அதில் மருதமுனை மக்கள் நலன் விரும்பிகள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு என்பன கூடிய கவனம் செலுத்த வேண்டும்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த இரட்டை மாகாணச் சாம்பியன் பட்டம், மருதமுனையின் மறைந்துபோன கால்பந்துப் பெருமையை மீண்டும் மீட்டுக்கொடுத்துள்ளது.

"உங்கள் வீரர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒற்றுமை மற்றும் மனவுறுதி வெற்றியின் ரகசியம்!" என்பதற்கேற்ப, மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்திலும் தங்களின் முத்திரையைப் பதித்து, கிழக்கு மண்ணிற்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

"நீங்கள் கிழக்கு மண்ணின் பெருமை!"

தொகுப்பு:-
AMM JIFFRY
Senior teacher
Physical education
BT/BC/Oddamavadi Central College

Champions 🏆
24/07/2026

Champions 🏆

U20 Eastern Province Champion 🏆 மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்ட அணி மாகாண மட்ட Champion ஆக...
24/07/2026

U20 Eastern Province Champion 🏆

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்ட அணி மாகாண மட்ட Champion ஆக வெற்றி பெற்றுள்ளனர் !!

22/06/2026

சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் ஷம்ஸ் மத்திய கல்லூரி 16 வயதுக்குட்பட்ட அணியினரும் ஏறாவூர் அலிகார் கல்லூரி 16 வயதுக்குட்பட்ட அணியினரும் விளையாடி 2:1 கோள்களைப் போட்டு ஷம்ஸ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது

22/06/2026

கலாசார மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்ட பேச்சு போட்டி முடிவுகள்
எமது கல்லூரிக்கு 1st & 3rd

G.C.E O/L Examination- 2025BEST PERFORMANCE
20/06/2026

G.C.E O/L Examination- 2025
BEST PERFORMANCE

2025 ம் ஆண்டு GCE (A/L) பரீட்சையில் கல்முனை வலயம் மாகாண மட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது இம் முன்னேற்றத்துக்காக சம்ஸ்...
16/06/2026

2025 ம் ஆண்டு GCE (A/L) பரீட்சையில் கல்முனை வலயம் மாகாண மட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது இம் முன்னேற்றத்துக்காக சம்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப பிரிவு அதிகூடிய சித்தினை பெற்ற மையினால் நேற்று இடம்பெற்ற அதிபர் கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் MSS.NAJEEM கல்லூரி முதல்வர் MBA Raji அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி வைத்தார் அத்துடன் இன்று காலை ஆராதனை கூட்டத்தில் தொழில்நுட்ப பிரிவுக்கு பொறுப்பாக இருக்கும் பகுதித் தலைவர் RM.SHIYAM அவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர் பாராட்டு சான்றிதழை வழங்கி வைத்தார்

இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்) மதிப்பீட்டு நிகழ்ச்சி - 2025கல்முனை வலய (மட்ட)த்தில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் மாண...
15/06/2026

இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்) மதிப்பீட்டு நிகழ்ச்சி - 2025

கல்முனை வலய (மட்ட)த்தில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் மாணவி AJ Sehar Banu முதலாம் இடத்தையும், மாணவி AF Anuf வாசிப்புப் போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்றமைக்காக Km/Km/Shams CC Maruthamunai கல்விச் சமூகம் வாழ்த்துகிறது.

Department of Arabic Language, Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka Olu...
15/06/2026

Department of Arabic Language, Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka Oluvil இனால் நடாத்தப்பட்ட National Scientific Qur'anic Arabic Calligraphy Competition and Exhibition (NSQACCE) - 2026 போட்டியில் பங்குபற்றி இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகிய மாணவன் MIM Fahad க்கு Km/Km/Shams CC Maruthamunai கல்விச் சமூகத்தின் வாழ்த்துக்கள். 🎊

Address

Maruthamunai

Alerts

Be the first to know and let us send you an email when Shams Central College, Maruthamunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shams Central College, Maruthamunai:

Shortcuts

Share

Category