31/07/2024
வாழ்த்துகிறோம்
THIS PAGE SOLEMNLY FOR KM/AL MANAR C.C.RELEVANT ACTIVITIES OF THE SCHOOL , PPA & SDEC ARE COVERED
31/07/2024
வாழ்த்துகிறோம்
24/02/2024
பழைய மாணவர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதம் கையளிப்பு
மேற்படி அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தில் இதுவரை இணையாத 2016-2020 வரையான பழைய மாணவர்களை பழைய மாணவர்கள் சங்கத்தில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று 24.02.2024 பாடசாலையின் அதிபர் I.உபைதுள்ளாஹ் தலைமையில் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ஐயூப் நியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் 2016-2020 வரையான பழைய மாணவர்களின் வகுப்பு பிரதிநிதிகள் பங்குகொண்டு அவர்களுக்கான உத்தியோக பூர்வ கடிதங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு பழைய மாணவர்கள் சங்கத்தினதும் பாடசாலையினதைம் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் சம்பந்தமாக பாடசாலையின் அதிபர் மற்றும் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் விளக்கியதோடு புதிய உறுப்பினர்களையும் எமது பழைய மாணவர்கள் குடும்பத்தில் அன்போடு வரவேற்றனர்.
மேலும் இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினரும் பாடசாலை அதிவிருத்திச்சங்க உறுப்பினருமான ஆஷிப் முஸ்தபா கலந்து ஆலோசனைகளையும் வழங்கினார். மேற்படி நிகழ்வை பழைய மாணவர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் m. S.லிஸாம் ஸாலி மற்றும் KM.றினோஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
10/02/2024
வாழ்த்துகிறோம்
எமது அல்மனார் மத்திய கல்லூரியின் (தே.பா ) பழைய மாணவன் ஸஹதுல் ஹலீம் இஸ்மி அஹமத் தனது Bsc (hons)in agriculture resource management and technology கற்கை நெறியினை university of ruhunu , srilanka பல்கலைகழகத்தில் பூர்த்தி செய்துள்ளதை இட்டு அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இவர் ஓய்வு பெற்ற மாவட்ட புள்ளிவிபரவியல் தினைக்கள பணிப்பாளர் m.s. ஸஹதுல் ஹலீம் மற்றும் எமது பாடசாலை சிரெஷ்ட ஆசிரியை (ஓய்வு பெற்ற) சீனத்து முனவ்வரா ஆகியோரின் மகன் ஆவார்.
பழைய மாணவர்கள் சங்கம்,
கமு/அல்-மனார் மத்திய கல்லூரி (தே.பா ),
மருதமுனை.
10/02/2024
வாழ்த்துகிறோம்
எமது அல்மனார் மத்திய கல்லூரியின் (தே.பா ) பழைய மாணவன் முஹம்மது ஜெமீல் ஜெனிப் ஹஸ்மத் BBA (Hons) University of Colombo அவர்கள் தனது CIMA ( Chartered Institute of Management Accountants) கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளதை இட்டு அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இவர் முன்னாள் மேல்நீதிமன்ற ஆணையாளர் முஹம்மது ஜெமில் (சிரேஷ்ட சட்டதரணி ) அவர்களின் 3வது மகன் ஆவார்.
பழைய மாணவர்கள் சங்கம்,
கமு/ அல்-மனார் மத்திய கல்லூரி (தே.பா ), மருதமுனை.
27/01/2024
வாழ்த்துகிறோம்
எமது மருதமுனை கமு/கமு/அல் மனார் ம.க (தேசிய பாடசாலை )இன் பழைய மாணவரான யூசுப் அப்துல் பாசித் அவர்கள் அண்மையில் வெளியிட பட்ட attorney பரிட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்ய உள்ளார்கள்.
இலங்கை சப்ரகமுவ பல்கலைகழக பட்டதாரியான இவர் மருதமுனையை சேர்ந்த முகம்மது ஹனிபா யூசுப் மற்றும் நூருல் ஐன் ஆகியோரின் மகனாவார்.
இவரை எமது பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
27/01/2024
வாழ்த்துகிறோம்
எமது பாடசாலை கமு /கமு /அல் மனார் ம. க (தேசிய பாடசாலை )இன் பழைய மாணவர் செயினுதீன் முஹம்மத் ரியாஸ் அவர்கள் அண்மையில் வெளியிடப்பட்ட attorney பரீட்சையில் சித்தி அடைந்து சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்ய உள்ளார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை பட்டதாரியான இவர் தற்போது கிழக்கு மாகாண காணி நிர்வாக பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் முஹம்மட் ரியாஸ் அவர்கள் மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் செயினுதீன், ஹதீஜா உம்மா ஆகியோரின் மகனும் ஆவார்.
இவரை எமது பழைய மாணவர்கள் அமைப்பு சார்பாக வாழ்த்துகிறோம்.
11/01/2024
அல்-மனாரின் மகுடம்சூடி வாழ்த்துகிறோம்...
இந்தியாவின், கைதரபாத் இல் இடம்பெறும் 43வது அனைத்து இந்தியா 21வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான rajiv Gandhi trophy T20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியில் பங்குகொள்ள 12.01.2024 (நாளை) பயணமாக உள்ள எமது அல் மனார் மத்திய கல்லூரியின் (தே. பா ) உயர்தர பிரிவு மாணவன் ஹிபத்துல்கரீம் அன்பஸ் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் அகம் மகிழ்கிறோம்.
இவர் இலங்கையை பிரதிநிதிதுவ படுத்தும் முதல்தர பந்து வீச்சாளர் ஆவார் என்பதோடு அன்பஸ் எமது பாடசாலைக்காக தேசிய ரீதியில் பரிதிவட்டம் வீசுதல்,குண்டு போடுதல், ஈட்டி ஏறிதல், உதை பத்தாட்டம் போன்றவற்றில் தன் நாமம் பதித்தவர் என்பதும் குறிப்பிட தக்கது.
இவரது பயணம் சிறப்படைய அல் மனாரின் பழைய மாணவர்கள் சங்கம் வாழ்த்துகிறது.
08/12/2023
#வாழ்த்துகிறோம்
எமது பாடசாலையின் பழைய மாணவர் சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் இன்று 08.12.2023 சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மருதமுனை Al-Manar Central College-National School, Maruthamunai பழைய மாணவரான இவர் அபுல்கலாம், சம்சுன் நிசா தம்பதிகளின் மூத்த புதல்வனாவார், இவர் 2016 ம் ஆண்டு உயர்தர கல்வியை KM/KM/Al-Manar Central College பாடசாலையில் கற்று யாழ் பல்கலைகழகம் தேர்வானார். யாழ் பல்கலைகழகத்தில் 2017-2021 சட்ட இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்து 2023 ம் ஆண்டு Attorney பரீட்சையிலும் தோற்றியிருந்தார். தற்போது கொழும்பு பல்கலைகழகத்தில் சென்று சட்ட முதுமானி பட்டப்படிப்பினையும் தொடர்கிறார் நஜாத்.
இவரின் கல்விசார் அடைவில் பெருமை கொண்டு எதிர்காலம் சிறப்புற வாழ்த்துகிறது அல்மனார் பழைய மாணவர்கள் சங்கம்.
07/12/2023
#வாழ்த்துகிறோம்
எமது பாடசாலையின் பழைய மாணவர் K. Mohamed Nusail வர்த்தக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தினை (MBA) University of Cyberjaya, Malaysia பல்கலைக்கழகத்தில் 25.11.2023 அன்று பெற்றுக் கொண்டார்.
மருதமுனை Al-Manar Central College-National School, Maruthamunai பழைய மாணவரான இவர் ஐ கமறுடீன், நஜிமுன்னிசா தம்பதிகளின் புதல்வராவார்,
இவர் வர்த்தக இளமானி மற்றும் AAT பூர்த்தி செய்துள்ளதுடன் அமானா வங்கியில் தொடர்பாடல் முகாமையாளராகவும் கடமை புரிகிறார்.
இவரின் கல்விசார் அடைவில் பெருமை கொண்டு எதிர்காலம் சிறப்புற வாழ்த்துகிறது அல்மனார் பழைய மாணவர்கள் சங்கம்.
07/12/2023
#வாழ்த்துகிறோம்
எமது பாடசாலையின் பழைய மாணவர் NGM.Nafiu (Gani Muhammad )வணிக மேலாண்மைத் துறையில் முதுகலை மானி (MBA) பட்டப் படிப்பை பூர்த்தி செய்து அதற்கான (மாஸ்டர்) பட்டத்தின் பெற்றுக் கொண்டார்.
மலேசியாவில் உள்ள University of Cyberjaya பல்கலைக்கழகத்தில் கடந்த 25.11.2023ம் திகதி இந்த பட்டத்தினை பெற்றுள்ளார்.
மருதமுனை சேர்ந்த நாகூர்கனி -சுலைஹா உம்மா தம்பதியினரின் புதல்வர் கல்முனை அமானா வங்கியின் உதவி முகாமையாளருமாவார்.
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வங்கி துறையில் பணியாற்றி வரும் இவர் University of Cyberjaya "பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில்உயர் படிப்பை பூர்த்தி செய்துள்ளமையானது" பாராட்டுக்குரியதாகும் கல்வியில் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறது பழைய மாணவர்கள் சங்கம்.
06/12/2023
#வாழ்த்துகிறோம்
எமது பாடசாலையின் பழைய மாணவர் MR. Mohamed Atheer சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் இன்று 06.12.2023 சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மருதமுனை Al-Manar Central College-National School, Maruthamunai பழைய மாணவரான MRM.அதீர்
முகம்மது ராபீ, சித்தி ஆபியா தம்பதிகளின் மூத்த புதல்வனாவார்,
அதீர் 2015ம் ஆண்டு உயர்தர கல்வியை KM/KM/Al-Manar Central College, பாடசாலையில் கற்று யாழ் பல்கலைகழகம் தேர்வானார். யாழ் பல்கலைகழகத்தில் 2017-2021 சட்ட இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்து 2021ம் ஆண்டு Attorney பரீட்சையிலும் தோற்றியிருந்தார்.
2022இல் சட்ட முதுமானி படிப்பிற்காக இளவயதிலேயே பங்களாதேஷ் பல்கலைகழகத்திற்கு சென்று சட்ட முதுமானி பட்டப்படிப்பினையும் தொடர்கிறார் முகம்மது அதீர்.
இவரின் கல்விசார் அடைவில் பெருமை கொண்டு எதிர்காலம் சிறப்புற வாழ்த்துகிறது அல்மனார் பழைய மாணவர்கள் சங்கம்.
27/11/2023
கடந்த வாரம் manarian pearls அமைப்பினர் எமது பாடசாலையின் அதிபர் ஐ. உபைதுள்ளாஹ் அவர்களுக்கு எமது பாடசாலையிலே நிரந்தர அதிபர் நியமனம் கிடைக்கப்பெற்றதையிட்டு வாழ்த்தி கெளரவிப்பதற்காக வருகை தந்த சமயம் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட "பாடசாலை உள்ளக அழகுபடுத்தல்" செயற்திட்டத்தில் ஓர் அங்கமாக ஒரு பகுதி பூந்தோட்டம் அமைத்து தருமாறு விடுக்க பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக அப்பணியை (சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் )ஆரம்பித்து வேலைதிட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இன்னும் ஓரிரு நாட்களில் வேலை பூரணப்படுத்தப்பட்டு பாடசாலைக்கு அவ் அமைப்பினரால் கையளிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் அதிபர் ஐ. உபைத்துள்ளஹ், பிரதி அதிபர் M.c அப்துல் நசார், பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள் மற்றும் manarian pearls இன் தலைவர் பைசூல் ஹை, பழைய மாணவர்கள் சங்க இணைச் செயலாளர் M.S.M. லிசாம் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் A.M. சில்பான்,அமைப்பின் செயலாளர், பொருளாளர், ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்கள் manarian pearls அமைப்பினருக்கு.
பழைய மாணவர்கள் சங்கம், அல் மனார் ம. க (தேசிய பாடசாலை )
2023/11/27.