An Nahla Ahadhiyyah School

An Nahla Ahadhiyyah School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from An Nahla Ahadhiyyah School, Education, A/Ihalapuliyankulam, Maradankadawala.

late Update of Annual Ifthar 2025 memories
21/06/2025

late Update of Annual Ifthar 2025 memories

அந்நஹ்லா அஹதிய்யாவில் 6மாணவர்களுக்கு 3A சித்தி.  அஹதிய்யா இடைநிலைச்சான்றிதழ் பரீட்சை 2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற...
21/06/2025

அந்நஹ்லா அஹதிய்யாவில் 6மாணவர்களுக்கு 3A சித்தி.

அஹதிய்யா இடைநிலைச்சான்றிதழ் பரீட்சை 2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது அஹதிய்யா பாடசாலைக்கும் எமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒத்துழைத்த பெற்றோர்களுக்கும் இவ்வெற்றிக்காக அயராதுபாடுபட்ட அஹதிய்யா பாடசாலையின் தலைவர் தேசமான்ய மெளலவி ஜாயிஸ் (உஸ்வி) அவர்களுக்கும், இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் இப்பெறுபேற்றினை பெற்றுக்கொள்வதற்கு எனது நன்றிகள்.

அதிபர்,
தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ்
அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை,
இஹலப்புளியன்குளம்.
21.06.2025

தகவல் அந்நஹ்லா அஹதிய்யா ஊடகப்பிரிவு.

13/03/2025

ரமழான் சிறப்பு மாணவர் மன்றம் 09.03.2025ஆம் திகதி இடம்பெற்றது.

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் பழைய மாணவரும் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான எச்.உசாமா (BSW)...
26/01/2025

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் பழைய மாணவரும் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான எச்.உசாமா (BSW) அவர்களினால் இன்று 26.01.2026ஆம் திகதி அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் தரம் 08,09,10 மற்றும் 11 மாணவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் அமர்வு நடாத்தப்பட்டது.

A leadership mentoring session was conducted today, 26.01.2026, by H. Usama (BSW), an alumnus of Annahla Ahadiyya School and a member of Annahla Ahadiyya School's Old Boys Association, for students of grades 08, 09, 10 and 11 of Annahla Ahadiyya School.

அந்நஹ்லா அஹதிய்யாவின் பரிசளிப்பு அனுராதபுர மாவட்ட இஹலப்புளியன்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு அண...
16/01/2025

அந்நஹ்லா அஹதிய்யாவின் பரிசளிப்பு

அனுராதபுர மாவட்ட இஹலப்புளியன்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு அண்மையில் அந்நஹ்லா கல்வி மத்திய நிலையத்தில் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் அஹதிய்யா தலைவர் தேசமான்ய பீ.ஜாயிஸ் (உஸ்வி) ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இஹலப்புளியன்குளம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.தாரிக், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.கெளஸ், அனுராதபுர செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிபான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அஹதிய்யா இறுதிச்சான்றிதழ் பரீட்சை - 2023 சித்தியடைந்த மாணவர்கள், அஹதிய்யா தேசிய சான்றிதழ் பரீட்சை 2024இல் சித்தியடைந்த மாணவர்களுக்கும், அஹதிய்யா இறுதிச்சான்றிதழ் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கபப்பட்டதாக அதிபர் எம்.ஆர்.எம்.ரனீஸ் தெரிவித்தார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தரம் 05 மாணவர்களுக்கு அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன் அஹதிய்யா பாடசாலையில் தொடர்ச்சியாக சேவையாற்றிய ஆசிரியைகளான ஏ.ருக்ஸானா, ஏ.சாமிலா பானு, எம்.எப்.எப்.சஹ்னாஸ், ஏ.சீ.சானாஸ் பேகம், எம்.ஏ.ரம்சத் பேகம், எம்.ஏ.சானாஸ், எஸ்.சனுரா, ஜே.ஹஸ்னா பானு, கே.ரிகாஸா, யு.உமைமா,
வை.சஸ்னா ஆகியோருக்கும் தொடர்ச்சியாக 16 வருடங்கள் அதிபராக கடமையாற்றும் அதிபர் தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் தலைவராக சேவையாற்றும் தேசமான்ய பீ.ஜாயிஸ் அவர்களுக்கும் அந்நஹ்லா அஹதிய்யாவின் பழைய மாணவர் சங்கத்தினால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை சார்பாக பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 2025ஆம் அஹதிய்யா கல்வி ஆண்டுக்கான தரம் 01 மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

2025.01.16 Oruvan news paper
16/01/2025

2025.01.16 Oruvan news paper

In Thinaharan News Paper on 10.01.2025தினகரன் தேசிய நாளேட்டில். 10.01.2025
10/01/2025

In Thinaharan News Paper on 10.01.2025

தினகரன் தேசிய நாளேட்டில். 10.01.2025

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் 2024ஆம் ஆண்டுக்கான ஆண்டிறுதிப்பரீட்சைகள் 2024.12.21ஆம் 22ஆம் திகதிகளில் அந்நஹ்லா கல்வி மத்...
10/01/2025

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் 2024ஆம் ஆண்டுக்கான ஆண்டிறுதிப்பரீட்சைகள் 2024.12.21ஆம் 22ஆம் திகதிகளில் அந்நஹ்லா கல்வி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

Annahla Ahadhiyah School's final examinations for the year 2024 were held on 21.12.2024 at Annahla Education Center.

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் நூலகத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்வி மேம்பாட்டு நிதியத்தினால்   அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை...
01/12/2024

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் நூலகத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்வி மேம்பாட்டு நிதியத்தினால் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் நூலகத்திற்காக வழங்கப்பட்ட நூல்கள் இன்றைய தினம் (01.12.2024) அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் தலைவர் மெளலவி பீ.ஜாயிஸ் உஸ்வி அவர்களிடம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது எம்.ஆர்.ராயித் மற்றும் எம்.ஆர். ரஹ்மா ஆகியோரினாலும் நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

In order to improve the library of Annahla An Nahla Ahadhiyyah School , the books given by Education Development Fund for the library of Annahla Ahadhiyyah School were handed over today (01.12.2024) to the President of Annahla Aashiyyah School Moulavi B. Jais Usvi by Annahla Ahadhiyyah School Principal MRM Ranees. During this event M.R. Rayidh and M.R. Rahma also donated books to the library.

27.09.2024ஆம் திகதி தினகரன் பத்திரிகையில்...........in Thinaharan News paper news about An Nahla Ahadhiyyah School 's ac...
04/10/2024

27.09.2024ஆம் திகதி தினகரன் பத்திரிகையில்...........

in Thinaharan News paper news about An Nahla Ahadhiyyah School 's achivement

அஹதிய்யா இடைநிலைச் சான்றிதழ் பரீட்சை 2024 அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் 100%  சித்தியடைந்துள்ளதுடன் 6 மாணவர்கள் சக...
26/09/2024

அஹதிய்யா இடைநிலைச் சான்றிதழ் பரீட்சை 2024 அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் 100% சித்தியடைந்துள்ளதுடன் 6 மாணவர்கள் சகல பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்வதற்கு உழைத்த அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் தலைவர் அவர்களுக்கும், மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்திய பாட ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிபர்
எம்.ஆர்.எம்.ரனீஸ்

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாபெரும் இறுதிக்கருத்தரங்கு 30.08.2024ஆம் திகதி அந...
26/09/2024

அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாபெரும் இறுதிக்கருத்தரங்கு 30.08.2024ஆம் திகதி அந்நஹ்லா கல்வி மத்திய நிலையத்தில் அந்நஹ்லா அஹதியா பாடசாலையின் தலைவர் மௌலவி ஜாயிஸ் (உஸ்வி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக்கருத்தரங்கில் சுமார் 90 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். இக்கருத்தரங்கில் வளவாளராக புலமை வழிகாட்டி ஆசிரியரும் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் அதிபருமான தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Address

A/Ihalapuliyankulam
Maradankadawala
50080

Alerts

Be the first to know and let us send you an email when An Nahla Ahadhiyyah School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category