St.Anne's College Vankalai

St.Anne's College Vankalai ᴇɴᴛᴇʀ ᴛᴏ ʟᴇᴀʀɴ ʟᴇᴀᴠᴇ ᴛᴏ ꜱᴇʀᴠᴇ. This institute is located at Vankalai, Mannar. This institute's Education level is Prov. It offers classes from G6-13.

It is in the Mannar district under Northern Province. Its education Zone is Mannar under Nanattan Educational Division.

🎓 தலைமைத்துவப் பாதையில் எமது புதிய மாணவ தலைவர்கள்!எமது பாடசாலையில் புதிய மாணவ தலைவர்களாகத் (Prefects) தெரிவு செய்யப்பட்ட...
05/07/2026

🎓 தலைமைத்துவப் பாதையில் எமது புதிய மாணவ தலைவர்கள்!

எமது பாடசாலையில் புதிய மாணவ தலைவர்களாகத் (Prefects) தெரிவு செய்யப்பட்டுள்ள எங்களின் திறமைகளை மெருகூட்ட இன்று ஒரு சிறப்பான தலைமைத்துவத் திட்டம் (Leadership Programme) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு முழு அனுமதி வழங்கி எங்களை வழிநடத்திய எமது அதிபர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மேலும், தங்களின் அறிவுரைகளாலும், அனுபவங்களாலும் எங்களை ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்கள்:
● திரு. ஸ்டான்லி டெமல்** (மாவட்ட சாரணர் ஆணையர்)
● மதிப்பிற்குரிய வங்காலை உதவி பங்குத்தந்தை

ஆகிய இருவருக்கும் எங்களின் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வழிகாட்டுதல் எங்களைச் சிறந்த தலைவர்களாக மாற்ற உதவும் என்பதில் ஐயமில்லை. 💼

சாதனைப் படைத்த எமது கல்லூரி சிங்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 🌟🏆🏃‍♂️🏃‍♀️வடமாகாண கல்வித் திணைக்களத்தி...
30/06/2026

சாதனைப் படைத்த எமது கல்லூரி சிங்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 🌟🏆🏃‍♂️🏃‍♀️

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் (Northern Province Schools Track & Field Championship - 2026), எமது மன்னார் புனித ஆனாள் கல்லூரி (St. Anne's College, Mannar) மாணவ, மாணவிகள் தங்களின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி, பல பதக்கங்களை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்! 🎉🥇🥈🥉

வெற்றி விபரங்கள் பின்வருமாறு:
🏃‍♀️ Under 14 Girls (14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு)
J. Anne Royancy
60m – வெள்ளிப் பதக்கம் (Silver Medal) 🥈
100m – 4-ஆம் இடம் (4th Place)
4 × 100m அஞ்சலோட்டம் (Relay) –வெள்ளிப் பதக்கம் (Silver Medal) 🥈
(J. Anne Royancy, J. Sharona Reval, V. Angelina, E. Liyanstina)

🏃‍♂️ Under 14 Boys (14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு)
J. Meryshan Lambert
100m தடைதாண்டல் (Hurdles) – வெள்ளிப் பதக்கம் (Silver Medal) 🥈
4 × 400m அஞ்சலோட்டம் (Relay) – 4-ஆம் இடம் (4th Place)
(J. Meryshan Lambert, A. Jeyaln Reval, A. Daylan Reval, B. Jamesan)

🏃‍♂️ Under 18 Boys (18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு)
4 × 400m அஞ்சலோட்டம் (Relay) – வெண்கலப் பதக்கம் (Bronze Medal) 🥉
(A. Romexon Lambert, V. Stefan Lambert, A. Santhoah Culas, S. Danusan Croos, L. Danu Maclon Peries)

🏃‍♂️ Under 12 Boys (12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு)
Dominic Croos
நீளம் பாய்தல் (Long Jump) – 4-ஆம் இடம் (4th Place)

மாகாண மட்டத்தில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் எமது கல்லூரி நாமத்தை ஓங்கி ஒலிக்கச் செய்த தடகள வீர, வீராங்கனைகளுக்கும், அவர்களை இத்தகு சாதனையாளர்களாக செதுக்கிய உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உறுதுணையாய் நின்ற அதிபர், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! 🙏❤️

உங்களது இந்த வெற்றிக்கொடி தேசிய மட்டத்திலும் பறக்க வாழ்த்துகிறோம்! 🚀✨

🏆

எம் கல்லூரி மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!🌟🏆🏃‍♀️வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண...
30/06/2026

எம் கல்லூரி மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!🌟🏆🏃‍♀️

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் (Northern Province Schools Track & Field Championship - 2026), 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் (Girls Under 14) எமது மன்னார் புனித ஆனாள் கல்லூரி (St. Anne's College, Mannar) மாணவிகள் மாகாண மட்டத்தில் 3-ஆம் இடத்தைப் (Rank 3) பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்! 🎉🥈🥉

மாகாணத்தின் பல முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு, தங்களின் அசாத்திய திறமையாலும், ஓயாத உழைப்பாலும் எமது கல்லூரிக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள எமது சிங்கப் பெண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💥👏

இம்மாணவிகளின் வெற்றிக்குப் பின்னால் இருந்து, அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து, வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! 🙏❤️
உங்களது இந்த சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்! 🚀✨

🏆

மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 🌟🏆ரோபோ மற்றும் புத்தாக்க வலய மட்டப் போட்டியில் (Robot and Innovation Competition ...
30/06/2026

மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 🌟🏆

ரோபோ மற்றும் புத்தாக்க வலய மட்டப் போட்டியில் (Robot and Innovation Competition 2026) பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், மாகாண மட்டத்திலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி எம்மற்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கும் எமது அன்பு மாணவன் Divekso Lambert க்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 🥳👏

இம்மாணவனின் திறமையை இனங்கண்டு, வழிநடத்தி, சமூகத்திற்கு முக்கியத்துவம் மிக்கதொரு ஆளுமையாக இவனை செதுக்கிய பெருமதிப்பிற்குரிய ஆசிரியர்களான Thushana மற்றும் Abiramy ஆகியோருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! 🙏❤️

உங்களது இந்த கூட்டு முயற்சி இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்! 🚀✨

நடைப்பெற்று முடிந்த க.பொ.த சாதாரண பரீட்சை  முடிவுகளின் அடிப்படையில்  கடந்த 5 வருடங்களின் மன் /புனித ஆனாள் கல்லூரி  பாடசா...
22/06/2026

நடைப்பெற்று முடிந்த க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கடந்த 5 வருடங்களின் மன் /புனித ஆனாள் கல்லூரி பாடசாலையின் அடைவு மட்டம்

அடைவு மட்டம் உயர்வதற்கு உழைத்த அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் கல்விசாராஊழியர்களை எமது பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்துகின்றது

2026.06.09 அன்று எமது பாடசாலையில் நடைபெற்ற சுற்றாடல் தின   விழிப்புணர்வு நிகழ்வுகளின் போது மரநடுகையினை ஊக்குவிக்கும் செய...
11/06/2026

2026.06.09 அன்று எமது பாடசாலையில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகளின் போது மரநடுகையினை ஊக்குவிக்கும் செயட்பாட்டின் சில பதிவுகள்

2026.06.09 அன்று எமது பாடசாலையில் நடைபெற்ற சுற்றாடல் தின   விழிப்புணர்வு நிகழ்வுகளின் சில முக்கிய  பதிவுகள்
11/06/2026

2026.06.09 அன்று எமது பாடசாலையில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வுகளின் சில முக்கிய பதிவுகள்

மாணவர் பாராளுமன்ற தேர்தல்  - 2026 🔴வங்காலை புனித ஆனாள் கல்லூரியில் 2026.06.10   நடைபெற்ற பராளுமன்ற தேர்தலின் முக்கிய சில...
11/06/2026

மாணவர் பாராளுமன்ற தேர்தல் - 2026 🔴

வங்காலை புனித ஆனாள் கல்லூரியில் 2026.06.10 நடைபெற்ற பராளுமன்ற தேர்தலின் முக்கிய சில பதிவுகள் ...................

🏊‍♂️🥈 எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் P.Rajeevan Reval அவர்களுக்கு வாழ்த்துக்கள்! 🥈🏊‍♂️மாகாண மட்டத்தில் பாடசாலைகள...
06/06/2026

🏊‍♂️🥈 எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் P.Rajeevan Reval அவர்களுக்கு வாழ்த்துக்கள்! 🥈🏊‍♂️

மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 50 மீட்டர் Back Stroke நீச்சல் போட்டியில், Under-14 வயது பிரிவில் எமது பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவன் P.Rajeevan Reval என்பவர் சிறப்பாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்த சாதனையின் மூலம் எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் இவரை வழிபடுத்திய உடற்கல்வி ஆசிரியர்,பயிற்றுவிப்பாளர் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்னும் பல உயரங்களை எட்டி, எதிர்காலத்தில் தேசிய மட்டங்களிலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்! 🎉👏

“முயற்சி வெற்றியின் முதல் படி; உங்கள் சாதனை அதற்குச் சிறந்த சான்று.”

🏆🏊‍♂️✨

🏆 வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! 🏆27.04.2026 அன்று நடைபெற்ற மன்னார் வலய பாடசாலைகளுக்கிடையிலான எல்லே போட்டியில் எமது பாடசா...
28/04/2026

🏆 வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! 🏆

27.04.2026 அன்று நடைபெற்ற மன்னார் வலய பாடசாலைகளுக்கிடையிலான எல்லே போட்டியில் எமது பாடசாலை அணியினர் சிறப்பாக விளையாடி 2ஆம் இடத்தைப் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகி உள்ளனர்.

இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த எமது மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 👏

மேலும், மாணவர்களை சிறப்பாகத் தயார்படுத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர், உடற்கல்வி ஆசிரியர், ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் மற்றும் முழு பாடசாலை சமூகத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

🎉 மாகாண மட்டப் போட்டியிலும் எமது அணியினர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்!🏆

Address

South-Coast Road, Vankalai
Mannar
41100

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94232050455

Alerts

Be the first to know and let us send you an email when St.Anne's College Vankalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St.Anne's College Vankalai:

Shortcuts

Share

Category