SAVE Ghafooriyya

SAVE Ghafooriyya

Share

GHAFOORIYYA ARABIC COLLEGE
MAHARAGAMA,
SRI LANKA.

12/05/2025
12/12/2024

கல் எளிய முஸ்லீம் மகளிர் அரபுக் கல்லூரி தனது இருப்பு தொடர்பில் தொடுத்த வழக்கில் முக்கிய திருப்பம்.

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்கள் தொடந்து சூறையாடப்படுவது சம்பந்தமாக அவ்வப்போது பேசிவிட்டு எமது உம்மத் அமைதியாகிவிடுகிறது. ஆனால் ஒருசிலர் தமது சமூகத்தின் மீதான கடமையை தம் தோள்கள் மீது சுமந்து போராடி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டுமாக.

இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியான கல் எளிய முஸ்லீம் மகளிர் அரபுக் கல்லூரிக்கும் அதன் உடமைகளுக்கும் இவ்வாறான ஓர் ஆபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்த அதன் பழைய மாணவிகள், ஒருசிலரது ஒத்துழைப்போடு கல்லூரியையும் அதன் உடமைகளையும் பாதுகாக்க முன்வந்து எடுத்த பல முயற்சிகளில் ஒன்று தற்போது வெற்றியளித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

கல் எளிய முஸ்லீம் மகளிர் அரபுக் கல்லூரி போன்றே மஹரகம கபூரிய்யா அரபுக்க கல்லூரியும் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. மஹரகம கபூரிய்யாவும் அதன் உடமையுமான Grandpas இடமும் இன்று தனியார் உடமைகளாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பழைய மாணவர்களும் கல்லூரி நலன்விரும்பிகளும் உள்ளனர்.

நீண்ட காலமாக இலங்கை வக்பு சபையிலும் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திலும் பதிவு செய்யப்பட்டு, இலங்கை வக்பு சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களும் செலுத்தப்பட்டு, அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வக்பு சபை மத்தியஸ்தம் வழங்கி பாதுகாத்து வந்த இந்த உடமைக்கு எதிராக சமூகத்தில் பிரபல்யம் பெற்ற முஸ்லீம் சட்டத்தரணிகளை களமிறங்கியிருப்பது கவலையளிப்பதாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய வக்புடமையான கபூரிய்யாவும் அதன் உடைமையும் தனியார் உடமைகளாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி வக்பு சபையின் நேரடி கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்படுவதற்கான பழைய மாணவர்களின் முயற்சியோடு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இயற்கைச்சூழலை பேணுவதும் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் கட்டாயமாகும்..! 05/06/2024

https://youtu.be/KQPQaCSXmjo?si=bIyQYgApf1zUxqQS

இயற்கைச்சூழலை பேணுவதும் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் கட்டாயமாகும்..! NEWSNOW | இயற்கைச்சூழலை பேணுவதும் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் கட்டாயமாகும்..!-அஷ்ஷெய்க் ஏ.எம். ஷாஹுல் ஹமீத் (கபூரி)இன...

24/04/2024

எம்மைவிட்டும் மறைந்த எமது மூத்த உறவான மெளலவி ஏ.எல்.எம்.இப்றாஹிம் (கபூரி) رحمه الله அவர்களின் "வாழ்வும், அன்னார் விட்டுச் சென்ற அடிச்சுவடுகளும்" என்ற தொனிப் பொருளிலாளான அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்விற்காக எமது கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட மடல்.

குறித்த நிகழ்வு சென்ற 23-04-2024 அன்று இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாட்டாளர்களுக்கும் நிகழ்வில் பங்குகொண்டவர்களுக்கும் எமது கல்லூரி மற்றும் சங்கத்தின் சார்பாக மீண்டுமொருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கோள்கிறோம்.
جزاكم الله خيرا.

05/04/2024

விடிவெள்ளி 04-04-2024

22/02/2024

விடிவெள்ளி தமிழ் 22-02-2024

22/02/2024

விடிவெள்ளியின் இன்றைய (22-02-2024) ஆசிரியர் தலையங்கத்தில் எமது கல்லூரி பற்றி..

Want your school to be the top-listed School/college in Maharagama?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Pamunuwa Road
Maharagama