Islahiyyah Arabic College

Islahiyyah Arabic College Islahiyyah Arabic College – A well-established institution combining Islamic and modern education since 1987. Madampe, Sri Lanka.

A well-established institution combining Islamic and modern education since 1987.

31ம் தொகுதி புதிய மாணவர்களுக்கு நடைபெற்றுவரும் நிகழ்ச்சித் தொடரில் "தற்கால இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களும், அதற்கான த...
21/07/2026

31ம் தொகுதி புதிய மாணவர்களுக்கு நடைபெற்றுவரும் நிகழ்ச்சித் தொடரில் "தற்கால இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களும், அதற்கான தீர்வுகளும்" எனும் தலைப்பில் 31ம் தொகுதி புதிய மாணவர்களுக்கான விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று நேற்று (21.07.2025) திங்கட்கிழமை நடைபெற்றது.

வளவாளராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வளவாளரும், இறக்காமம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரியும் சிரேஷ்ட உளவள ஆலோசகர் அஷ்ஷெய்க் எச். வஹாப் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மாணவர்கள் புரிந்து கொள்ள கூடிய மிக அழகிய மொழிநடையில் செயலமர்வு நடைபெற்ற மையும், மாணவர்கள் நிகழ்வில் இறுதிவரை சுறுசுறுப்பாக கலந்து கொண்டமையும் விஷேட அம்சமாகும்.

31ம் தொகுதி புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு  கல்வியாண்டு 2026/2027மாதம்பை இஸ்லாஹிய்யாவின் 31ம் தொகுதி புதிய மாணவர்களை உள்ளீர...
20/07/2026

31ம் தொகுதி புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு
கல்வியாண்டு 2026/2027

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் 31ம் தொகுதி புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) மாதம்பை இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு நிகழ்வில் வரவேற்புரையை இஸ்லாஹிய்யாவின் முதல்வர் கலாநிதி எம். இஸட். எம். முபீர் (இஸ்லாஹி) அவர்கள் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இஸ்லாஹிய்யாவின் கற்கைநெறி, கல்வி விவகாரப் பகுதியின் அறிமுகத்தை துறைத் தலைவர் அஷ்ஷெய்க். எச்.எம். நிஸாம்தீன் (இஸ்லாஹி) மிகச் சிறப்பாக முன்வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக டொப் ஸ்டீல்ஸ் லங்கா பிறைவெட் லிமிடெட் பணிப்பாளரும், பண்டாரகொஸ்வத்த மன்பஉல் ஹைறாத் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவருமான அஷ்ஷெய்க். எம். எம். இக்ராம் நளீமி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

31ம் தொகுதி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு இஸ்லாஹிய்யாவின் மாணவர் விவகாரப் பகுதியின் செயற்பாடுகள் தொடர்பாக இஸ்லாஹிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். ஏ. எம். ரிஸ்மி (இஸ்லாஹி) மிகச் சிறப்பாக தெளிவு படுத்தினார்.

இஸ்லாஹிய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம் நவ்ஸர் இஸ்லாஹி அவர்களால் பிரதம அதிதிதிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு நிகழ்வில் புதிய மாணவர் தொகுதியினர் மற்றும் அவர்களது பெற்றோர்கள், இஸ்லாஹிய்யா விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இறுதியாக இந் நிகழ்வின் நன்றியுரையை இஸ்லாஹிய்யா முகாமையாளர் கலாநிதி ஏ.ஏ.எம். ஸாதிக் இஸ்லாஹி வழங்கினார்.

இந் நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அஷ்ஷெய்க் இத்ரீஸ் இஸ்லாஹி சிறப்பாக தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

"மரண சிந்தனையும் ஜனாஸாவோடு சார்ந்த கடமைகளும்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிமாதம்பை இஸ்லாஹிய்யா மாணவர்கள்  மற்றும் அலு...
08/07/2026

"மரண சிந்தனையும் ஜனாஸாவோடு சார்ந்த கடமைகளும்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாதம்பை இஸ்லாஹிய்யா மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்காக "மரண சிந்தனையும் ஜனாஸாவோடு சார்ந்த கடமைகளும்" என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 ஜூலை 7 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் 1.15 மணி வரை இஸ்லாஹிய்யா மஸ்ஜிதில் சிறப்பாக நடைபெற்றது.

மனித வாழ்வின் இறுதி நிலையையும், மரணத்தை நினைவுகூர்வதன் அவசியத்தையும், ஜனாஸா தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்களையும் எடுத்துரைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் உஸ்தாத் M.U.M. ரம்ஸி அவர்கள் "மரண சிந்தனையும் மறுமை வாழ்வும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து M.I.M. இத்ரீஸ் (இஸ்லாஹி) அவர்கள் குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுகை, அடக்கம் செய்தல் மற்றும் ஜனாஸா தொடர்பான இஸ்லாமிய வழிமுறைகள் குறித்து செயன்முறை விளக்கமளித்தார். இறுதியாக M.T.M. நிலாம் (இஸ்லாஹி) அவர்கள் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்ததுடன், மரணத்தை நினைவில் கொண்டு மறுமை வாழ்விற்கான தயாரிப்பின் அவசியத்தையும், ஜனாஸா தொடர்பான மார்க்கக் கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் விளங்கிக் கொண்டனர்.

இந் நிகழ்ச்சியின் முக்கியமான ஒருங்கிணைப்பாளராக இஸ்லாஹிய்யா விரிவுரையாளர் அஷ்ஷெய்க். இர்ஸாத் (இஸ்லாஹி) காணப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Congratulations to Ash-Sheikh Al-Hafiz Dr. Mohamed Aslam IslahiWe are pleased to extend our heartfelt congratulations to...
01/07/2026

Congratulations to Ash-Sheikh Al-Hafiz Dr. Mohamed Aslam Islahi

We are pleased to extend our heartfelt congratulations to Ash-Sheikh Al-Hafiz Dr. Mohamed Aslam Islahi on assuming duties as a Lecturer at the South Eastern University of Sri Lanka.

On behalf of Islahiyyah Arabic College, Madampe, and the Alumni Association, we warmly wish him continued success in his academic career. We pray that his knowledge, experience, and commitment will bring valuable contributions to the university, the community, and the nation at large.

Dr. Mohamed Aslam Islahi has built a strong academic journey through dedication, discipline, and continuous learning. He completed his first degree at the Sabaragamuwa University of Sri Lanka, obtained his master’s degree from the University of Peradeniya, and successfully completed his PhD at the International Islamic University Malaysia. He has also contributed to academic scholarship by publishing several research articles, particularly in the field of sociology and related disciplines, in reputed journals.

Hailing from Deltota, Dr. Aslam is known not only for his academic excellence but also for his good character, humility, helpful nature, research-minded approach, and sincere commitment to community development. He has been a valuable contributor, a respected scholar, and a person of noble conduct who continues to inspire students, colleagues, and the wider community.

We also acknowledge with respect his family background and social contribution. He is the son of Al-Haj Mohamed Idrees and the son-in-law of A.C.R. Agar Mohamed, Rector of Jamiah Naleemiah Institute, Sri Lanka.

We pray that Almighty Allah grants him barakah, wisdom, good health, and continued success in his new academic position. May his service at the South Eastern University of Sri Lanka become a source of benefit for students, society, and the nation.

Warm congratulations and best wishes from
Islahiyyah Arabic College, Madampe, and
the Alumni Association

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி - மாதம்பைபுதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை - 2026(LICENTIATE மற்றும் DIPLOMA கற்கை ந...
24/06/2026

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி - மாதம்பை

புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை - 2026
(LICENTIATE மற்றும் DIPLOMA கற்கை நெறிகளுக்கானது)

விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்ய:
https://forms.gle/wH2s1XpNrJnEAZKy5

மேலதிக தொடர்புகளுக்கு
077 734 5367
076 659 3450
076 701 5013

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாதம்பைபுதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை 2026(LICENTIATE மற்றும் DIPLOMA கற்கை நெறிக...
22/06/2026

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி
மாதம்பை

புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை 2026
(LICENTIATE மற்றும் DIPLOMA கற்கை நெறிகளுக்கானது)

நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2026 ஜூன் மாதம் 28 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29 (திங்கட்கிழமை) ஆகிய தினங்களில் காலை 08:00 மணி முதல் மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகத்தில் இடம்பெறும்.

எழுத்துப் பரீட்சை இரு தினங்களிலும் மதியம் 02:00 மணிக்கு நடைபெறும்.

அடிப்படைத் தகுதிகள்:
✅2009.01.31 க்கு பின்னர் பிறந்திருத்தல்
✅உடல், உள நலமும், நன்னடத்தையும் உடையவராக இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :
✅க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சை பெறுபேற்றுப் பத்திரம் (O/L Result Sheet)
✅தேசிய அடையாள அட்டை
✅பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
✅ஏனைய சான்றிதழ்கள்

விண்ணப்பிக்கும் முறை:
கீழ்வரும் கூகுள் படிவத்தினூடாக உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்:
https://forms.gle/wH2s1XpNrJnEAZKy5

மேலதிக தொடர்புகளுக்கு
077 734 5367
076 659 3450
076 701 5013

இஸ்லாஹிய்யா
உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்:
https://www.facebook.com/share/1CeGNPrS1J/

அரசாங்கத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் இஸ்லாஹிய்யா மாணவர்கள் பங்கேற்புமாதம்பை பிரதேச சபையினால் கடந்த...
18/06/2026

அரசாங்கத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் இஸ்லாஹிய்யா மாணவர்கள் பங்கேற்பு

மாதம்பை பிரதேச சபையினால் கடந்த 16.06.2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தில், மாதம்பை இஸ்லாஹிய்யா மாணவர்கள் ஆர்வத்துடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

மாதம்பை பிரதான வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், டெங்கு பரவக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டதுடன், பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாணவர்கள் வழங்கிய இப்பங்களிப்பு, பிரதேச மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

මාදම්පේ ප්‍රාදේශීය සභාවේ ඩෙංගු මර්දන වැඩසටහනට ඉස්ලාහියියා අරාබි විදුහල සිසුන්ගේ විශිෂ්ට දායකත්වයක්

මාදම්පේ ප්‍රාදේශීය සභාව විසින් පසුගිය 2026.06.16 වන දින සංවිධානය කරන ලද ඩෙංගු මර්දන පරිසර පවිත්‍රතා වැඩසටහන සඳහා මාදම්පේ ඉස්ලාහියියා සිසුන් මහත් උනන්දුවකින් සහ සමාජ වගකීම් හැඟීමකින් යුතුව සහභාගී වෙමින් විශිෂ්ට දායකත්වයක් ලබා දුන්හ.

මාදම්පේ ප්‍රධාන මාර්ගය සහ ඒ අවට ප්‍රදේශ කේන්ද්‍ර කරගනිමින් ක්‍රියාත්මක වූ මෙම වැඩසටහනේදී ඩෙංගු මදුරුවන් බෝවිය හැකි ස්ථාන විනාශ කිරීමට පියවර ගත් අතර, මහජනතාව අතර සෞඛ්‍ය දැනුවත්භාවය ඇති කිරීමට ද කටයුතු කෙරිණි.

සමාජ සුභසාධනය සහ පරිසර සංරක්ෂණය වෙනුවෙන් සිසුන් දැක්වූ මෙම දායකත්වය ප්‍රදේශවාසීන්ගේ ඉහළ ඇගයීමට ලක්වීම සුවිශේෂී කරුණකි.

Certificate Awarding Ceremony| LMS 2026
24/05/2026

Certificate Awarding Ceremony| LMS 2026

வருடாந்த விருது வழங்கும் விழா 2026மாதம்பை இஸ்லாஹிய்யாவின் வருடாந்த விருது வழங்கும் விழா (Annual Awarding Ceremony) கடந்த...
22/05/2026

வருடாந்த விருது வழங்கும் விழா 2026

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் வருடாந்த விருது வழங்கும் விழா (Annual Awarding Ceremony) கடந்த 21.05.2026 அன்று இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இஸ்லாஹிய்யாவில் கற்றல் செயற்பாடுகள் (Academic Activities), மாணவர் நிர்வாகம் (Students Administration), ஆளுமைத் திறன் (Personality Development) மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் (Extra-Curricular) திறமைகளையும், சாதனைகளையும் வெளிப்படுத்திய மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து, கெளரவிக்கும் முகமாக இவ்விழா நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இஸ்லாஹிய்யாவின் முதல்வர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.இசட்.எம். முபீர் இஸ்லாஹி (Ph.D), தலைமையில் ஆரம்பமான இவ்விழா முகாமையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ஏ.ஏ.எம். சாதிக் இஸ்லாஹி (Ph.D), மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.இசட்.எம். நௌஸர் இஸ்லாஹி (MA), கல்வித் துறைத் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். நிஸாம்தீன் இஸ்லாஹி (MA, Makki) ஆகியோரின் நெறிப்படுத்தலில் மிக நேர்த்தியாக அரங்கேறியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் (DMRCA) உதவிப் பணிப்பாளர் ஏ. அப்ரோஸ் அஹ்மத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவருடன், அத்திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் அரபுக் கல்லூரிகள் பிரிவுக்குப் பொறுப்பானவருமான அஷ்ஷெய்க்
ஏ. ஏ.எம். ஹாரிஸ் அவர்களும் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், மாதம்பை அல்ஃபரியா ஜும்மா பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஃப்.எம். அரபாத் மற்றும் இஸ்லாஹிய்யா நிர்வாக சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.சி.எம். அஜ்வர்ட் ஆகியோரும் சமூகமளித்து விழாவைச் சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் இஸ்லாஹிய்யாவில் கல்வி கற்று பல்வேறு துறைகளிலும் தங்களது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பதக்கங்கள்,சான்றிதழ்கள் வழங்கி விழாவின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இந் நிகழ்வில் விஷேட ஒரு நிகழ்வாக இஸ்லாஹிய்யாவில் முன்னாள் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து விடைபெற்றுச் சென்ற ஆசிரியர்களான
அஷ்ஷெய்க். எம்.எஸ்.எம். இர்ஃபான் (இஸ்லாஹி) (அரபு மொழித் துறை), ஆசிரியர் எஸ். எம். பஹ்மான்
(வர்த்தக பிரிவு) ஆகியோருக்கு தங்களது மகத்தான சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அத்துடன், இவ்விழாவானது மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்திருந்ததோடு இவ்விழாவில் இஸ்லாஹிய்யா விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், LMS மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ்விழாவை இறுதிவரை இஸ்லாஹிய்யா விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.எஸ். ரிஸ்கான் இஸ்லாஹி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.


வருடாந்தப் பரிசளிப்பு விழா – 2026(ANNUAL AWARDING CEREMONY – 2026)இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் 2025 ஆம் கல்வியாண்டில் ...
16/05/2026

வருடாந்தப் பரிசளிப்பு விழா – 2026
(ANNUAL AWARDING CEREMONY – 2026)

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் 2025 ஆம் கல்வியாண்டில் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஆளுமை விருத்தி ஆகிய துறைகளில் சிறப்பான அடைவு மட்டங்களை வெளிப்படுத்திய மாணவர்களைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் நடாத்தப்படும் வருடாந்தப் பரிசளிப்பு விழா எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை இஸ்லாஹிய்யா வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் மாணவர்களுக்கு கல்விசார் சாதனைகள் (Academic Excellence),ஒழுக்க முன்னேற்றங்கள் (Character & Discipline), சிறந்த வருகை (Best Attendance), இணைப்பாடச் செயற்பாடுகள் மற்றும் பன்முகத் திறமைகள்
(Co-curricular Activities) போன்றவற்றுக்காக விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளன.

கல்லூரியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முன்னாள் விரிவுரையாளர்களும் இவ்விழாவின் போது நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இஸ்லாஹிய்யா சமூகத்தினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நிர்வாகம்,
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி
மாதம்பை.

Address

Old Town
Madampe
61010

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Islahiyyah Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category