09/10/2025
குளி/பூவல்ல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராகத் திறம்படச் சேவையாற்றி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மதிப்பிற்குரிய அதிபர் M.L.M அன்வர் அவர்கள் 2025.09.24 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கின்றோம்.
அதிபர் அன்வர் அவர்கள், சுமார் மூன்று ஆண்டுகளாக எமது பாடசாலையின் பௌதீக வளர்ச்சிக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்கு அளப்பரியது.
அவரது அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் மாணவர்களின் நலனில் கொண்ட அக்கறை என்பன எமது பாடசாலைக்கு என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
அவரது வழிகாட்டலில் எமது பாடசாலை பல சாதனைகளைப் படைத்துள்ளதுடன், எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய உன்னத சேவை என்றும் நினைவு கூரப்படும்.
அதிபர் M.L.M அன்வர் அவர்களின் ஓய்வுக் கால வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைய எமது பாடசாலைச் சமூகம் சார்பாக
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
உங்கள் சேவைக்கு நன்றி, அதிபர் அவர்களே!
#குளிபூவல்லமுஸ்லிம்கனிஷ்டவித்தியாலயம் #ஓய்வு #கல்விச்சேவை #நன்றி
10/09/2025
2025 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்,
எமது பாடசாலை மாணவர்கள் மிகச்சிறந்த அடைவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்
சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும்,
இப்பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் அவர்களுக்கும்,
முழுமையாக தியாகத்துடன் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றிய வகுப்பாசிரியை M.A.L.S நஸீமா ஆசிரியைக்கும்,
அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள் உட்பட அனைத்து கல்வி சாரா ஊழியர்களுக்கும்,
ஒத்துழைப்பு வழங்கிய பெற்றார்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினருக்கும்,
எமது நன்றிகளும், வாழ்த்துக்களும்.
26/12/2023
அஸ்ஸலாமு அலைக்கும் || வணக்கம்
கடந்த வியாழக்கிழமை (2023.12.21) எமது பாடசாலையில் வருடாந்த - (2023) பரிசளிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எமது பாடசாலையில் சேவையாற்றி விட்டு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்ற அதிபர்,ஆசிரியர்கள், தரம் ஜந்நு புலமைப்பரீட்சையில் (2023) சித்தியடைந்த மற்றும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும், க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் (2022) சித்தியடைந்த மற்றும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும், (தரம் ஒன்று தொடக்கம் சாதாரண தர வகுப்பு வரை) கடந்த தவணைப்பரீட்சையில் முதல் மூன்று நிலைகளை அடைந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு, அன்றைய தினம் பாடசாலை மாணவர்களின் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
எனவே,எமது பாடசாலையில் சேவையாற்றி விட்டு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எமது பாடசாலைக்கு பரீட்சைகளின் மூலம் பெறுமையை பெற்றுத்தந்த மாணவச்செல்வங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!
ஏற்பாடு :
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர்கள், அஸ்ஸலாமா நலன்புரிச்சங்கம், பெற்றோர்கள், ஊர் நலன்விரும்பிகள்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில......
Photography Credit by : DR Photography ©️
01/12/2023
வாழ்த்துக்கள் || Congratulations
க.பொ.த (சாதாரன) தர பரீட்சை 2022 (2023) எழுதிய எம் மாணவச்செல்வங்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .
உங்களின் கடின உழைப்புக்கு இறுதியில் கிடைத்த பெறுபேறுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
க.பொ.த (சாதாரண) தர பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பித்த,உதவிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்கள் அனைவருக்கும்
பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உட்பட அஸ்ஸலாமா நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.....
நன்றி...
~ DR Photography
30/11/2023
வாழ்த்துக்கள் || Congratulations
ஐந்தாம் தர புலமை பரீட்சை (2023) எழுதிய எம் மாணவச்செல்வங்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .
உங்களின் கடின உழைப்புக்கு இறுதியில் கிடைத்த பெறுபேறுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பித்த,உதவிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்கள் அனைவருக்கும்
பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உட்பட அஸ்ஸலாமா நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.....
நன்றி...
~ DR Photography
15/05/2023
சுமார் 14+ வருட காலமாக (2008-2023) (ஆசிரியராக-10 வருடம், அதிபராக - 05 வருடம்) எமது பாடசாலையில் சேவையாற்றி விட்டு எம்மையும் எமது பாடசாலையையும் விட்டு பிரிந்து வேறு ஓர் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்/அதிபர் A.K.M FAWSAN ( Mohamed Fawzan ) ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பாடசாலை பழைய மாணவர் சங்கம்,அஸ்ஸலாமா நலன்புரிச்சங்கம் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்....
அதேபோன்று இன்று (2023/05/15) அவரை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பரிசளிப்பு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வின் போது எடுத்த ஓரிரு புகைப்படங்கள்....
Pics Own By : DR Photography | Dãrk Ridër
25/04/2023
இன்றைய தினம் (2023.04.25) எமது பாடசாலையில் இடம்பெற்ற, (2023) வருடத்திற்கான தரம் 01 புதிய மாணவர் அனுமதியின் போது எடுத்த ஓரிரு புகைப்படங்கள்.....
Pics Own By : DR Photography | Dãrk Ridër
07/01/2023
Congratulations | வாழ்த்துக்கள்
கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட கலாசாரப்போட்டி நிகழ்சியின் அகில இலங்கை மட்டத்திலான போட்டி நிகழ்சிகள் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது பாடசாலை மாணவர்கள் 300ற்கு குறைவான மாணவர்களுக்கான மஸ்அலா கர்நாடக சங்கீதப்போட்டி நிகழ்ச்சியில் பங்குகேற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
அம்மாணவர்களுக்கு பாடசாலை சார்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர் உட்பட ஏனைய ஆசிரியர்கள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அல்ஹம்துலில்லாஹ்