Annoor Central College Panagamuwa

Annoor Central College Panagamuwa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Annoor Central College Panagamuwa, School, School Junction, Panagamuwa, Kurunegala.

>>> தூரநோக்கு > பணிக்கூற்று

🌱 ுற்றாடல்_தினத்தை_முன்னிட்டு_சுற்றாடல்_சுத்தப்படுத்தும்_நிகழ்வு 🌱உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் இன்ற...
10/06/2026

🌱 ுற்றாடல்_தினத்தை_முன்னிட்டு_சுற்றாடல்_சுத்தப்படுத்தும்_நிகழ்வு 🌱

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் இன்று சுற்றாடல் சுத்தப்படுத்தும் நிகழ்வு #வெற்றிகரமாக_நடைபெற்றது.

இந்நிகழ்வு A.A.அகீல் ஆசிரியரின் #தலைமையில் பாடசாலை சுற்றாடல் கழகத்தின் #ஒருங்கிணைப்பில் மாணவர்களின் உற்சாகமான #பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தின் #தூய்மையையும்_பசுமையையும்_மேம்படுத்தும்_நோக்கில் மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, #சுற்றாடலைப்_பாதுகாப்பதன் அவசியத்தை நடைமுறையில் வெளிப்படுத்தினர்.

எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் #பொறுப்பாகும் என்பதை உணர்த்தும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே சுற்றாடல் பற்றிய #விழிப்புணர்வையும்_பொறுப்புணர்வையும் மேலும் வலுப்படுத்தியது.

“சுற்றாடலை நேசிப்போம்; எதிர்காலத்தை வளப்படுத்துவோம்!” 🌍♻️

இன்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இரண்...
10/06/2026

இன்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்று, மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை பெருமகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்திய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெற்றோர் கூட்டம்தரம் 10 மற்றும் தரம் 112026.05.19தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டங்கள் இன்று ப...
19/05/2026

பெற்றோர் கூட்டம்
தரம் 10 மற்றும் தரம் 11
2026.05.19

தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டங்கள் இன்று பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றன.

இக்கூட்டங்கள் “விஷேட வேலைத்திட்டம்” எனும் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஒழுக்க மேம்பாடு மற்றும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பான விடயங்களை மையமாகக் கொண்டு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு பிரதி அதிபர் A.S.M. Fahir அவர்கள் தலைமை தாங்கியதுடன், தரம் 10/11 பகுதித் தலைவர் S.M. Ifham அவர்கள் கூட்டங்களை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

மேலும்,
• கூட்ட நிகழ்வுகளை சிறப்பாக வழிநடத்திய உயர்தரப் பிரிவுத் தலைவர் S.R.M. Fasly ஆசிரியர்
• மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான தெளிவுரைகளை வழங்கிய J.A.M. Rifkan ஆசிரியர்
• கூட்டங்களுக்கான தகவல்களை தெளிவாக வழங்கிய வகுப்பாசிரியர்கள்
• ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள்
• பயனுள்ள கருத்துக்களையும் “விஷேட செயற்திட்டம்” தொடர்பான மும்மொழிவுகளையும், தெளிவூட்டல்களையும் வழங்கிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்

அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-- பாடசாலை நிர்வாகம் --

இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட திறப்பு நிகழ்வு.2026.04.30எமது பாடசாலையின் அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட  இரு மாடி வகுப்பற...
01/05/2026

இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட திறப்பு நிகழ்வு.
2026.04.30

எமது பாடசாலையின் அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட இரு மாடி வகுப்பறை கட்டிட திறப்பு நிகழ்வு 2026.04.30 வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட தலைவர் மற்றும் விவசாய பிரதியமைச்சர் திரு.நாமல் கருணாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதியமைச்சர் வைத்தியர் திரு.நாமல் சுதர்ஷன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரிதீகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான திரு.எம்.கே.எம்.அஸ்லம், ரிதீகம பிரதேச சபையின் தவிசாளர் திரு.ஏ.டீ. சுமனதாச உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்ததுடன், கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாணகமுவ வாழ் நலன்விரும்பிகள் பெருமளவில் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.

இக்கட்டிடத்தை எமது பாடசாலைக்கு பெற்றுத் தருவதில் முழுமூச்சாக ஈடுபட்ட குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.கே.எம் அஸ்லம் அவர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாணகமுவ வட்டார அமைப்பாளரும் எமது பழைய மாணவர் சங்க உறுப்பினருமான திரு ஆர்.அஸ்வர் ஆசிரியர் அவர்களும் விஷேட நன்றிக்குறியவர்கள்.அத்துடன் இதற்காக பாடுபட்ட பழைய மாணவர் சங்க உப தலைவர் ,செயலாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த புதிய கட்டிடம் மாணவர்களின் தொடரான கல்வித் தர மேம்பாட்டில் முக்கிய மைல்கல்லாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

-- தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி --2026இவ்வருடம் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று, சர்வதேச...
30/04/2026

-- தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி --
2026

இவ்வருடம் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று, சர்வதேச பயிற்சிக் குழுமத்திற்கு தெரிவாகியுள்ள தரம் 10 மாணவன் N.M. யாசீர் (Category III) அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்மாணவனின் எதிர்காலப் பயணத்திலும் தொடர்ந்து வெற்றிகள் கிடைக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 #கணித_ஒலிம்பியாட்_போட்டி_2026எமது  #பாடசாலை_சார்பாக,  #தேசிய_மட்ட கணித ஒலிம்பியாட்  போட்டிக்கு நான்கு மாணவர்கள் தெரிவு ...
28/03/2026

#கணித_ஒலிம்பியாட்_போட்டி_2026

எமது #பாடசாலை_சார்பாக, #தேசிய_மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு நான்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Category II
1. M.I.AANIQ (GRADE 07)

Category III
1. M.N.YASIR (GRADE 10)
2. S.HAMDHI (GRADE 11)
3. N.M.NASHAD (GRADE 11)

இம்மாணவர்களுக்கு #பாடசாலை_சமூகம்_சார்பாக வாழ்த்துவதுடன்,

#எதிர்வரும்_தேசிய_மட்ட_பரீட்சையிலும்_சிறந்த_அடைவுகளைப்_பெற_பிரார்திக்கின்றோம்.

🏆 #கணித_ஒலிம்பியாட்_போட்டி🏆                               2026.02.19எமது பாடசாலையின் 5 மாணவர்கள், கணித ஒலிம்பியாட்  #மாக...
19/02/2026

🏆 #கணித_ஒலிம்பியாட்_போட்டி🏆
2026.02.19

எமது பாடசாலையின் 5 மாணவர்கள், கணித ஒலிம்பியாட் #மாகாண_மட்டப்_பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை பெருமைக்குரிய #சாதனையாகும்

🔹
தரம் 07
1️⃣ M.I.Aaniq

🔹
தரம் 09
1️⃣ M.P.Fikra
தரம் 10
2️⃣ M.N.Yasir
தரம் 11
3️⃣ S.Hamdhi
4️⃣ N.M.Nashad

ஆகிய மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களின் இச்சிறப்பான சாதனைக்கு #வாழ்த்துக்களையும்_ #பாராட்டுகளையும்_ தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்கள் எதிர்வரும் மாகாண மட்டப் பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்க்க #எல்லாம்_வல்ல_இறைவன்_அருள்_புரிவானாக

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
17/02/2026

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

32 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் மகத்தான நிறைவு — MA. நசூர்தீன் அதிபர் அவர்களுக்கு மாண்பான கெளரவிப்பு32 ஆண்டுகள் சிறப்புமிக்க ...
14/02/2026

32 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் மகத்தான நிறைவு — MA. நசூர்தீன் அதிபர் அவர்களுக்கு மாண்பான கெளரவிப்பு

32 ஆண்டுகள் சிறப்புமிக்க சேவை அனுபவத்துடன் கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய MA. நசூர்தீன் அதிபர் அவர்களின் பாடசாலை இறுதி நாள், மரியாதையும் நன்றியும் நிரம்பிய நினைவுநாளாக அமைந்தது.

ஆசிரியர் தொழிலிலிருந்து ஓய்வு பெறும் இந்நெகிழ்ச்சியூட்டும் தருணத்தை முன்னிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து அதிபர் அவர்களை அன்பும் மரியாதையும் கலந்த கெளரவிப்பில் போற்றினர். இது, அவரின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், வழிகாட்டுதல் மற்றும் கல்விக்கான அளப்பரிய பங்களிப்பை நினைவுகூரும் அருமையான தருணமாக அமைந்தது.

மேலும், அண்மைக் காலத்தில் அதிபர் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து கல்விச் சேவையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் பழைய மாணவர் சங்க உபதலைவர் ஆகியோரும் தனித்துவமான முறையில் அதிபர் அவர்களை கெளரவித்து, தங்களது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

MA. நசூர்தீன் அதிபர் அவர்கள் கல்வித் துறையில் விதைத்த அர்ப்பணிப்பின் விதைகள், பல தலைமுறைகளின் எதிர்காலத்தில் நம்பிக்கையின் விளக்காக என்றும் ஒளிரும். அவர்களின் ஓய்வு வாழ்க்கை அமைதி, ஆரோக்கியம் மற்றும் ஆனந்தம் நிறைந்ததாக அமைய எமது இதயபூர்வமான வாழ்த்துகள்.

“ஒரு உண்மையான கல்வியாளர் ஓய்வு பெறலாம்; ஆனால் அவர் உருவாக்கிய மதிப்புகளும் மாணவர்களும் என்றும் வாழ்கின்றனர்.”

 ொ_த_சாத_தர_மாணவர்களின்  #பரீட்சை_அனுமதி_அட்டை_வழங்கும்_நிகழ்வு_2025__2026எமது பாடசாலையின் எதிர்வரும் க.பொ.த (சா/த) பரீட...
12/02/2026

ொ_த_சாத_தர_மாணவர்களின் #பரீட்சை_அனுமதி_அட்டை_வழங்கும்_நிகழ்வு_2025__2026

எமது பாடசாலையின் எதிர்வரும் க.பொ.த (சா/த) பரீட்சையை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டிருக்கும் தரம் 11 மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு, பாடசாலையின் #பிரதான_மண்டபத்தில் அதிபர் A.S.M. இர்ஷாட் அவர்களின் தலைமையிலும், பகுதித்தலைவர் S.M. நிஸ்பர் ஆசிரியர் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டிலும் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வில், எமது பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள 131 #மாணவர்கள், அவர்களது #பெற்றோர்கள், பாடசாலையின் #பழைய_மாணவர்_சங்க உறுப்பினர்கள், #பாடசாலை_அபிவிருத்தி_நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமது மனமார்ந்த #வாழ்த்துக்களையும்_ஊக்குவிப்புகளையும் வழங்கி நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.

இது மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக அமையப்பெற்றதுடன், அவர்களின் கல்விப்பயணத்தின் பலனை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் அமைந்தது. இம்மாணவர்கள் அனைவரும் #சிறந்த_உடல் மற்றும் ோக்கியத்துடன்_தன்னம்பிக்கையுடனும்_உறுதியுடனும் பரீட்சைக்கு முகங்கொடுத்து, #சிறந்த_பெறுபேறுகளைப் பெற்று தமது எதிர்கால இலக்குகளை வெற்றிகரமாக அடைய வேண்டுமென பாடசாலை சமூகம் சார்பாக #பிரார்த்திக்கின்றோம்.

அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த #வாழ்த்துக்கள்

Address

School Junction, Panagamuwa
Kurunegala
60052

Alerts

Be the first to know and let us send you an email when Annoor Central College Panagamuwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category