24/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கௌரவிப்பும் உயர்தர பிரிவு அங்குரார்ப்பணம்
எமது பாடசாலையின் 2024 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பதற்காகவும் 2025- 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர கலை பிரிவிற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் 23.7.2025 ஆம் திகதி காலை 9 மணிக்கு எமது பாடசாலையின் கௌரவ அதிபர் JM. IRFAN (SLPS) தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிரியுல்ல குளியாப்பிட்டிய வலய தமிழ் பிரிவு பிரதிகல்வி பணிப்பாளர் SLM. FAIS அவர்களும் ஏனைய அதிதிகளாக எமது ஊர் ஜம்மியத்தில் உலமா, பள்ளி பரிபாலன சபை தலைவர்களும் , SDEC, OBA அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்
இதில் 9A சித்தியை பெற்ற MN. AMMAR,
N.S NISMA மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தும்
NF. HAMNA. 8A,1B
FF. REEMA. 7A,2B
MRF. ASKA. 6A,2B,1C
MTM.ASMA. 5A,1B, 3C
MIP. ISMA. 4A,2B,2C,1S
MPM.MUFLIH 4A,2B,3C
MPP.HUDHA. 4A,2B,3C
ஆகிய மாணவர்களுக்கு பரிசீல்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்
அத்தோடு எமது பாடசாலையிலே சித்தி பெற்ற சுமார் 25 மாணவர்கள் இப்பாடசாலையிலேயே உயர்தர கலை பிரிவில் கற்க அனுமதி பெற்றனர். அவர்களுக்கும் பரிசில்கள் வளங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இந்த வருடமே எமது பாடசாலையில் உயர்தரம் கற்கும் அதிக மாணவர் தொகையும் ஆகும்.
இந்நிகழ்வில் உயர்தரம் கற்க இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் முழுமையாக பங்கு பற்றி நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கினர்
இந்நிகழ்வு எமது பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர், உயர் தர பகுதி தலைவர், ஆசிரியர்கள், உயர்தர மாணவர்களின் பங்குபற்றலோடு சிறப்பாக நடைபெற்றது