Kuli/Giri Al-Badhur Muslim Vidyalaya

Kuli/Giri Al-Badhur Muslim Vidyalaya Official page of Al-Badhr Muslim Vidyalaya - Metiwelegedera

29/01/2026
29/01/2026
அல்-பதுர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புது முகங்களை வரவேற்றல்! 🌟 கல்விப் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாள். 2026-ஆம் கல்வி ...
29/01/2026

அல்-பதுர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புது முகங்களை வரவேற்றல்! 🌟

கல்விப் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாள். 2026-ஆம் கல்வி ஆண்டிற்காக தரம் 1 இற்காக அல் - பதுர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக இணைந்துள்ள எமது செல்லக் குழந்தைகளை நாம் மிகுந்த அன்புடனும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

இக் கால்கோள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் கௌரவ அதிபர் திரு. M. R. M.ரிஷாட் #அவர்கள், எமது பாடசாலை அதிபர், மற்றும் எமது ஆரம்ப, இடைநிலைப்பிரிவு ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மழலைகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.

புதிய சிறகுகளை விரிக்கும் இந்த மாணவர்களின் கல்விப் பயணம் சிறக்க எமது வாழ்த்துக்கள்.
புதிய தொடக்கம். புதிய முகங்கள். புதிய கனவுகள் .இனிதே உம் கல்விப் பயணம் தொடர பிரார்த்தனைகள்

உங்களை வருக வருக என வரவேற்கிறோம்!Date: 29.01.2026Time: 8:30 AM
28/01/2026

உங்களை வருக வருக என வரவேற்கிறோம்!

Date: 29.01.2026
Time: 8:30 AM

2026.01.27இன்று எமது கல்லூரியின் இல்ல விளையாட்டுப்  போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் அதிபர் தலைமையில் அபிவிருத்திக் குழு ...
27/01/2026

2026.01.27
இன்று எமது கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் அதிபர் தலைமையில் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2026 ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர்களை வரவேற்றல் நிகழ்வு அதிபர் தலைமையில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
21/01/2026

2026 ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர்களை வரவேற்றல் நிகழ்வு அதிபர் தலைமையில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

07/01/2026

விடைபெறும் ஓர் அன்புச் சுடர் – MM
Al-Badur பாடசாலையின்
அன்பு நிறைந்த வளாகத்தில்,
புன்னகையுடன் பணிகளைச் சுமந்த
பாசமிகு ஆசான் – எங்கள் MM.
அலுவல் கடுமையிலும்
சிரிப்பை இழக்காத மனம்,
எந்நேரமும் பாடசாலைக்கென
தன்னை அர்ப்பணித்த உயர்ந்த குணம்.
இலவசப் புத்தகங்கள், சீருடைகள்,
காலணி வவுச்சர்கள் என
ஒவ்வொரு பொறுப்பையும்
நேர்த்தியாக நிறைவேற்றிய நெஞ்சம்.
ஒப்படைத்த பணியெதுவாயினும்
குறையின்றி செய்து முடிக்கும் ஒழுக்கம்,
பரீட்சைக் குழுவில் பொறுப்புணர்வுடன்
நியாயம் காத்த சேவை மனம்.
போட்டிகளுக்குப் பிள்ளைகளைப் பயிற்றுவித்து
திறமையை வெளிக்கொணர்ந்த வழிகாட்டி,
வெற்றியின் விதைகளை விதைத்த
அன்புத் தாய்போன்ற ஆசான்.
சுவைமிக்க சமையலிலும்
சிறந்த கைப்பக்குவம்,
யாருக்கும் தொந்தரவு தராத
மென்மையான மனப்பான்மை.
இன்று Al-Badur இலிருந்து
பிரிவு வந்தாலும்,
MM என்ற பெயரும்
உங்கள் பணிச்சுவடும் எங்கள் நினைவில் நிலைக்கும்.
புதிய பாடசாலையிலும்
உங்கள் சேவை மலரட்டும்,
நலமும் வெற்றியும்
உங்கள் பாதையை அலங்கரிக்கட்டும்.
With ever love Rin

06/01/2026

2026.01.06
இன்றைய தினம் எமது பாடசாலையில் சுமார் 12 வருடங்கள் சேவையாற்றிய
M.Rafiu Sir,
9 வருடங்கள் சேவையாற்றிய
M.M.Risana Teacher
இவர்கள் இருவரும் வருடாந்த இடமாற்றம் மூலம் தமது பாடசாலையை விட்டு வேவ் வேறு பாடசாலைகளுக்கு சேவையாற்ற சென்றுள்ளனர். இவர்கள் எம் கலையகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியது. இவர்களது இழப்பு எவர்களாலும் ஈடு செய்ய முடியாது. மேலும் இவர்களது பணி மேலும் சிறப்பாய் அமைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

Address

Metiwelegedara, Horombawa
Kuliyapitiya
60181

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuli/Giri Al-Badhur Muslim Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category