03/01/2024
ஆடிய ஆட்டம் என்ன.. வெயிட் பண்ணி வெடி வச்ச சுந்தர் பிச்சை.. Google Gemini அறிமுகம்.. ChatGPT 4 கதை க்ளோஸ்? [IST] கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை, "நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்டா" என்று கூறும்படியான.. ஸ்பெஷல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். கூகுள் நிறுவனம் ஜெமினி (Gemini) என்று அழைக்கப்படும் அதன் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை (Super Smart AI Model) அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக கூகுள் ஜெமினியானது மூன்று வெர்ஷன்களில் வருகிறது: அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano). இந்த மூன்று வெர்ஷன்களும் எவ்வாறு வேறுபடும்? கூகுள் ஜெமினியை வைத்து என்னென்ன வேலைகளை செய்ய முடியும்? இது உண்மையிலேயே சாட்ஜிபிடி 4-ஐ காலி செய்யுமா? இதோ விவரங்கள். அல்ட்ரா VS ப்ரோ VS நானோ: இந்த மூன்று வெர்ஷன்களுமே குறிப்பிட்ட விஷயங்களை திறமையாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது அல்ட்ராவானது சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது; ப்ரோவானது பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது; நானோவானது உங்கள் டிவைஸ்க்கான பணிகளை செய்யும். கூகுள் ஜெமினியின் சிறப்பம்சங்கள்: இது டெக்ஸ்ட் (Text), கோட் (Code), ஆடியோ (Audio), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos) என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொள்ளும். எனவே தான் கூகுள் நிறுவனம் ஜெமினியை "மல்டி மாடல்" (Multi Model) என்று அழைக்கிறது. மேலும் கூகுள் நிறுவனம் தனது ஜெமினியை, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் உலகின் ஒரு சூப்பர் ஹீரோ (Superhero in the AI world) என்றும் குறிப்பிடுகிறது, ஏனென்றால் இதனால் புகைப்படங்கள் மற்றும் ஆடியோவை புரிந்துகொள்வது முதல் சிக்கலான கணிதம் வரையிலான பல்வேறு பணிகளை செய்ய முடியும். 90 சதவீத மதிப்பெண்களுடன்.. கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் மற்றும் நெறிமுறைகள் போன்ற 57 பாடங்களின் கலவையை பயன்படுத்தும் எம்எம்எல்யு-வில் (மாசிவ் மல்டிடாஸ்க் லாங்குவேஜ் அன்டெண்டிங்கில்) மனித நிபுணர்களை விட சிறந்த மாடலாக.. முதல் மாடலாக ஜெமினி அல்ட்ரா உள்ளது. இதற்கு உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறுகிறது. மேலும், இதனால் கோடிங் (Coding) எழுதவும் முடியும். கூகுள் ஜெமினியால் பைதான் (Python), ஜாவா (Java), சி++ (Java, C++) மற்றும் கோ (Go) போன்ற லேங்குவேஜ்களை புரிந்துகொள்ளும். கூகுள் நிறுவனம் டென்சர் ப்ராசசிங் யூனிட்ஸ் எனப்படும் ஸ்பெஷல் எஞ்சின்களை பயன்படுத்தி ஜெமினிக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் கிளவுட் டிபியு வி5பி என்று அழைக்கப்படும் புதிய எஞ்சினையும் அறிமுகம் செய்துள்ளது. இது சூப்பர்-அட்வான்ஸ்டு ஏஐ-ஐ பயிற்றுவிப்பதற்கான மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். சேர்ச் (Search), ஆட்ஸ் (Ads), க்ரோம் (Chrome), டூயட் (Duet) போன்றவைகளில் ஜெமினியை கொண்டு வருவதே கூகுளின் திட்டமாகும். எனவே, இது வெறுமனே ஏஐ தொடர்பான ஒரு விஷயமல்ல; இது எல்லா இடங்களுக்குமான விஷயமாக மாறி வருகிறது. ஒட்டுமொத்தமாக கூகுள், சரியான நேரத்தில் தனது தொழில்நுட்ப விளையாட்டை முடுக்கி விட்டுள்ளது! சாட்ஜிபிடி 4-ஐ விட கூகுள் ஜெமினி சிறந்ததா? ஜெமினி அறிமுகமான வேகத்தில், இந்த கேள்விக்கான பதிலை சொல்வது சற்று கடினம் தான். இருப்பினும் ஜெமினி ஆனது சாட்ஜிபிடி 4-ஐ விட நெகிழ்வானதாக தெரிகிறது. மேலும் வீடியோவில் வேலை செய்யும் மற்றும் இண்டர்நெட் இல்லாத டிவைஸ்களில் வேலை செய்யும் இதன் திறன், சாட்ஜிபிடி 4-ஐ பின்னுக்கு தள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம். எல்லாவற்றை விடவும் மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால், கூகுள் ஜெமினி இப்போது இலவசமாக அணுக கிடைக்கிறது. இது கூகுள் பார்ட் (Bard) மற்றும் பிக்சல் ப்ரோ (Pixel Pro) மாடல்களில் அணுக கிடைக்கிறது. மறுகையில் உள்ள சாட்ஜிபிடி 4 ஆனது பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.
Read more at:
Google Gemini Super smart AI Model Launched Why Better than ChatGPT 4 | கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை, நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்டா ...