06/03/2023
அன்னைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 💔
இன்னும் நினைவிருக்கு
வேதம் னா தெரியும் நாயகம் னா புரியும் ஆனா வேதநாயகம் னா தெரியுமா? அகராதிக்கே தெரியாதா ஒரு விளக்கம். பயம் (வேத நாயகம்னா பயம் ) அதன் எங்க மேடம். ஆசான்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? எல்லோருக்கும் ஒரே நீதி ஒரே நேர்மை.. கடமை என்னவோ 10 வருஷம்தான் எங்க ஸ்கூலுக்கு ,ஆனா அவங்க செயல் ஒன்றொன்றும் சரித்திரம் கண்ட புதுவரவுகள்...
தினம் ஒரு தியானம்
அது முடிச்சதுமே ஒரு குரல் உயரும் ... அடுத்ததாக அதிபரின் உரை .
எங்களை பொறுத்தவரை விரோதி கூறும் குறை.
பகுத்தறிவு இல்லாத பருவம் என்பதால்
அம்மாவை கூட அரக்கர் குல தலைவியாக சித்தரிக்க வைத்தது.
முக்கால் toruser boysனாலும் சரி,
முட்டி தெரியுற girlsனாலும் சரி,
முழி பிதுங்கதா நாளும் இல்ல ,
மூஞ்சு வீங்காத கன்னமும் இல்ல
Ponting ஹீரோஸ் கு cutting போட கத்தரிகோல், யாருக்குமே இல்லாத ஒரு தைரியம்.
கல்வி சாரா ஊழியர்கள் தொடங்கி கணக்கு ஆசிரியர் வரை கால அவகாசம் ஒன்னுதான் 8 மணி தாண்டுன attendance காலி ...Redline ல சிறப்பு வரவேற்பு...PT படமாவே இருந்தாலும் சரி மேடம் entry தெரிஞ்சிட்ட போதும் Entertaiment எல்லாம் escape ஆகிடும். அமைதினா இதுதான்னு அந்த Building கூட வியப்ப பாக்கும்.
குற்றங்களை குறைக்கும் தண்டனையின் விளைவாக character certificate வழங்கப்பட போவதை அறிந்த நொடியில் பயந்து பதுங்கிய வரலாற்று பதிவில் என் பருவமும் அடங்கும் .அது நிறைவேற்றப்படாத ஒரு தொடர்கதை என்பதை அறியாமல்........
சாதுவாக பேசி சாதிப்பவர்கள் மத்தியில் பக்க சார்பற்ற பகிரங்க பேச்சில் வாயடிக்க வந்தவரெலாம் வாயடைத்து போவதே மிச்சம் .பிரியாவிடையிலும் புரியவில்லை பின்விளைவுகள் பற்றி,இழந்த பின்பே அருமை புரியும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த அதிஷ்டசாலிகள் நாங்கள். முன்னுரை எழுதப்படாத முன்னாள் அதிபருக்கு நிறைவுரையல் ஒரு செய்தி ,கல்வி கரையில கருவில் தசாப்தமாய் சுமந்த குருவிக்காக மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும் தட்சணையாய் சமர்ப்பிக்கின்றோம் இந்த பதிவினை..
வரிகள் - விஷ்ணு சங்கீதா