2019/2022 Batch of KCC

2019/2022 Batch of KCC 2019 O/L & 2022A/L Batch of Kinniya Central College

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூநன்றி நவிலல்---------------------எமது 2019/2022 கிண்ணியா மத்திய கல்லூரி ...
09/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

நன்றி நவிலல்
---------------------
எமது 2019/2022 கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவு மற்றும் நிவாரணப் பொருள் சேகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் உன்னதமான பங்களிப்புடன் தொடர்ந்து மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த உயரிய பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக,

★ இந்நிகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கிய பிரதேச செயலாளர் கனி Sir அவர்களுக்கும்,

★ எங்களுடன் இணைந்து ஆதரவு வழங்கிய நகர சபை தவிசாளர் மஹ்தி sir அவர்களுக்கும்,

★ கூடாரம் மற்றும் Focus Light வழங்கிய *கௌரவ நகர சபை உறுப்பினர் சனாஸ் முகமத் நானா* அவர்களுக்கும்,

★ ஊடக பங்களிப்பை வழங்கிய *சபீர் நானா மற்றும் கிண்ணியா* பாரிஸ் நானா* அவர்களுக்கும்,

★ எப்போதும் ஆலோசனைகளுடன் துணைநின்ற *ஜவுஹரி ஆசிரியர்* அவர்களுக்கும்,

★ மேலும் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து வழங்கிய *பொதுமக்கள்* அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இந்த முயற்சியை சிறப்பாக நெறிப்படுத்திய எங்கள் சக மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்காலத்திலும் எங்களால் இவ்வாறான நற்பணிகள் மேற்கொள்ளப்படும் போது இதே போன்ற ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என நம்புகிறோம்.

*நன்றி*.

*ஏற்பாட்டுக் குழு 2019/2022 பழைய மாணவர்கள் கிண்ணியா மத்திய கல்லூரி*

🗓️ 2025 டிசம்பர் 07 🗓️கிண்ணியா மத்திய கல்லூரி 2019/2022 பழைய மாணவர்களால் சுமார் ரூ. 4,000 பெறுமதியான 34 நிவாரண பொதிகள் ந...
08/12/2025

🗓️ 2025 டிசம்பர் 07 🗓️

கிண்ணியா மத்திய கல்லூரி 2019/2022 பழைய மாணவர்களால் சுமார் ரூ. 4,000 பெறுமதியான 34 நிவாரண பொதிகள் நெடுந்தீவு பகுதியில் வழங்கப்பட்டன.

🔹 14 பொதிகள் நேரடியாக தேவையுடைய குடிமக்களிடம் கையளிக்கப்பட்டன

🔹 20 பொதிகள் நெடுந்தீவு பள்ளியின் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு ஒத்துழைத்த அனைத்து பழைய மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ் 🤲

🗓️ 2025 டிசம்பர் 07 🗓️கிண்ணியா மத்திய கல்லூரி 2019/2022 பழைய மாணவர்களால் சுமார் ரூ. 4,000 பெறுமதியான 30 நிவாரண பொதிகள் ச...
08/12/2025

🗓️ 2025 டிசம்பர் 07 🗓️

கிண்ணியா மத்திய கல்லூரி 2019/2022 பழைய மாணவர்களால் சுமார் ரூ. 4,000 பெறுமதியான 30 நிவாரண பொதிகள் சமாவச்ச தீவு பகுதியில் வழங்கப்பட்டன.
இப்பொதிகள் சமாவச்ச தீவு பள்ளி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு ஒத்துழைத்த அனைத்து பழைய மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ் 🤲

🗓️ 2025 டிசம்பர் 07 🗓️கிண்ணியா மத்திய கல்லூரி 2019/2022 பழைய மாணவர்களால் சுமார் ரூ. 4,000 பெறுமதியான 30 நிவாரண பொதிகள் ப...
08/12/2025

🗓️ 2025 டிசம்பர் 07 🗓️

கிண்ணியா மத்திய கல்லூரி 2019/2022 பழைய மாணவர்களால் சுமார் ரூ. 4,000 பெறுமதியான 30 நிவாரண பொதிகள் பூவரசன் தீவு பகுதியில் வழங்கப்பட்டன.

🔹 10 பொதிகள் நேரடியாக தேவையுடைய குடிமக்களிடம் வழங்கப்பட்டன.

🔹 20 பொதிகள் பூவரசன் தீவு பள்ளியின் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு ஒத்துழைத்த அனைத்து பழைய மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ் 🤲

06/12/2025

நேற்று 2025/ 12/ 05 திகதி, 2019 /2022 கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ள நிவாரண சேகரிப்பு நடவடிக்கையின் போது கிடைத்த பொருட்கள் மற்றும் பழைய மாணவர்கள், பொதுமக்கள் வழங்கிய நிதி உதவியின் மூலம் வாங்கிய பொருட்களின் பொதி செய்யும் நடவடிக்கை நடைபெற்றது.

05/12/2025

பட்டியன் ஊர் ,மஜீத் நகரை சேர்ந்த தரம் இரண்டில் கல்வி பயிலும் H.F அஸ்ஹா என்ற மாணவி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை எமது நிவாரண சேகரிப்பு மையத்துக்கு நன்கொடையாக வழங்கினார் .அவருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருடைய கல்வி அபிவிருத்திக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்🤲

அஸ்ஸலாமு அலைக்கும்.  எமது பாடசாலை(Kinniya central college)பழைய மாணவர்களால் (2019 O/L & 2022 A/L) ஏற்பாடு செய்யப்பட்ட வெள...
05/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும். எமது பாடசாலை(Kinniya central college)பழைய மாணவர்களால் (2019 O/L & 2022 A/L) ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா வாழ் மக்களுக்கான நிவாரண பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை இன்றும் 3 வது நாளாக [வெள்ளிக் கிழமை (05/12/2025) . ] தொடர்கிறது .

இயலுமானவர்கள் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடியுமான உதவிகளை கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-ஏற்பாட்டுக்குழு
(2019 O/l & 2022 A/L)

Address

Main Street
Kinniyai
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2019/2022 Batch of KCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category