Al - Adhan Maha Vidyalayam

Al - Adhan Maha Vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al - Adhan Maha Vidyalayam, School, Annal Nagar, Kinniyai.

தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயத்தின் புதிய SDEC செயலாளருக்கு வாழ்த்துகள்! 💐🏫​எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் முக்...
12/04/2026

தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயத்தின் புதிய SDEC செயலாளருக்கு வாழ்த்துகள்! 💐🏫

​எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் (SDEC) புதிய செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாப் MRM. சியாத் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​அவரது புதிய பதவிக்காலம் பாடசாலையின் பௌதீக மற்றும் கல்விசார் வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 🤲

🏫 வரலாற்றுச் சாதனை படைத்த தி/கிண்/அல்-அதான் மகா வித்தியாலயம்! 🏛️​கிண்ணியா அல்-அதான் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர் பாரா...
11/04/2026

🏫 வரலாற்றுச் சாதனை படைத்த தி/கிண்/அல்-அதான் மகா வித்தியாலயம்! 🏛️
​கிண்ணியா அல்-அதான் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர் பாராளுமன்ற அமர்வு மிகப்பிரம்மாண்டமான முறையில் அரங்கேறியது! 🇱🇰

​பாடசாலை அதிபர் U.M. றெலீஸ் அவர்களின் வழிகாட்டலில், ஜனநாயக விழுமியங்களை மாணவர்களிடையே விதைக்கும் நோக்குடன் இந்த நிகழ்வு இனிதே நடைபெற்றது.

​நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
​முக்கிய பிரமுகர்களின் வருகை: வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக பிரதிநிதிகள் என பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​கௌரவ அதிதிகள்: இந்நிகழ்வில் எமது பாடசாலையின் EPSI இணைப்பாளர் J. நாம்தீன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

​ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு: இந்த நிகழ்வின் வெற்றிக்கு பின்னால் எமது ஆசிரியர்களின் 100% ஒத்துழைப்பும், தியாகமும் அளப்பரியது.

​நேர்த்தியான தேர்தல் ஏற்பாடுகள்: பாராளுமன்றத் தேர்தலுக்காக பொறுப்பளிக்கப்பட்ட ஆசிரியர்களின் திட்டமிடலும், மாணவர்களின் ஆர்வமும் அனைவரதும் பாராட்டைப் பெற்றது.
​எமது மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்க கைகோர்த்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🤝✨

🏫 தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயம் - வருடாந்த பொதுக்கூட்டம்​இன்று எமது பாடசாலையில் வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க...
10/04/2026

🏫 தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயம் - வருடாந்த பொதுக்கூட்டம்

​இன்று எமது பாடசாலையில் வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க (SDS) பொதுக்கூட்டமும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) தெரிவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
​பாடசாலையின் அதிபர் U.M. றெலீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு ​J. நாம்தீன் (SLTES) - EPSI இணைப்பாளரும்
​மற்றும்அதிக பெற்றோர்களும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கினர். புதிய கல்வி ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட புதிய நிருவாகக் குழுவினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

🌟 நன்றி கலந்த  பாராட்டுக்கள் சேர்ஒரு சிறந்த வழிகாட்டல் உரை! 🌟​இன்று எமது பாடசாலையின் தரம் 01 மாணவர் அனுமதி நிகழ்வு மிகவு...
30/01/2026

🌟 நன்றி கலந்த பாராட்டுக்கள் சேர்
ஒரு சிறந்த வழிகாட்டல் உரை! 🌟

​இன்று எமது பாடசாலையின் தரம் 01 மாணவர் அனுமதி நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்த M.A.M. MUJEEB (LL.B, Attorney at Law, Executive Director - Barakah Charity-Sri Lanka) அவர்களின் உரை அனைவரது மனங்களையும் கவர்ந்தது.
​ஒரு மாணவனின் ஒழுக்கத்தை வடிவமைப்பதில்:
​பாடசாலையின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும்? 🏫

​வீட்டுச் சூழல் பிள்ளையின் வளர்ச்சிக்கு எப்படித் துணையாக இருக்க வேண்டும்? 🏠

​என்பதை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் தனது உரையில் தெளிவுபடுத்தினார். பக்குவப்பட்ட ஒருவரின் வாயிலிருந்து வெளிவந்த அந்தப் பண்பட்ட வார்த்தைகள், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைந்தன. ✨
​உங்களது பயனுள்ள கருத்துக்களுக்கும் சமூகப் பணிக்கும் மனமார்ந்த நன்றிகள் சேர்
​"நல்லொழுக்கமுள்ள சந்ததியை உருவாக்குவதே காலத்தின் தேவை."
​ஜெஸாக்குமுல்லாஹு ஹைரா!

பாடசாலையில் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட போது.
08/01/2026

பாடசாலையில் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட போது.

14/09/2025
📚✨ பெருமையின் தருணம் – தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயம் ✨📚🗓️ 08/09/2025 திங்கட்கிழமை📍 அதான் பாடசாலை முன்பாகபாடசாலையின்...
08/09/2025

📚✨ பெருமையின் தருணம் – தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயம் ✨📚

🗓️ 08/09/2025 திங்கட்கிழமை
📍 அதான் பாடசாலை முன்பாக

பாடசாலையின் அதிபர் UM. Ralees அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில்,
கிண்ணியா நகர சபையின் உபதவிசாளர் கெளரவ MS. Abdul Azeez அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார்.

🎉 தரம் 05 புலமைப்பரிசி பரீட்சையில் வெட்டிப்புள்ளியை தாண்டிய Safeeth Mohamed Ayan 138 புள்ளிகள் மற்றும் Naheem Fathima Sahna 133 புள்ளிகளை பெற்ற இரு மாணவர்கள் பெருமையுடன் கெளரவிக்கப்பட்டார்கள்.

👩‍🏫👨‍🏫 அவர்களுக்கு அறிவுரை வழங்கி வழிநடத்திய ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.

👏 இது எங்கள் பாடசாலைக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு மறக்கமுடியாத சாதனை.

🌟 நமது சிறு நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று பிரகாசிக்க அனைவரும் வாழ்த்துவோம்!

03/09/2025

மாணவர் தூதுவர் எனும் நிகழ்ச்சி தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைச்சினால் மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்டது. இதில் கிண்ணியா வலயம் சார்பாக பங்குபற்றிய அல்-அதான் மகா வித்தியாலயம், அல்-ஹிரா மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களின் பங்கு பற்றல்.

Kinniya Central College Kinniya Zonal Education Office Kinniya Kural Kinniya Kural Moh Kinniya Dharul Uloom MV Kinniya Kinniya Base Hospital Naleem Ramsath Educational Trinco

🌟 பெருமைமிகு செய்தி 🌟எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில்தி/கிண்/அல்-அத...
29/08/2025

🌟 பெருமைமிகு செய்தி 🌟

எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில்
தி/கிண்/அல்-அதான் மகா வித்தியாலயம் சார்பாக மாணவி செல்வி எம். எப். அஸ்ரா அவர்கள்
நீளம் பாய்தல் 🏃‍♀️ மற்றும் 100m ஓட்டப்பந்தயம் 🏅 ஆகிய பிரிவுகளில் பங்கேற்க உள்ளார்.

பொருளாதார சவால்களை சந்தித்தபோதிலும், போட்டிக்கான பாதணி வசதியின்மையால் ஏற்பட்ட இடர்பாட்டினை
எங்கள் பாடசாலையின் அதிபர் Mr. U. M. Ralees, முன்னாள் அதிபர் M. S. Abdul Azeez அவர்களின் தலைமையில், விளையாட்டு பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின்
உதவியால் தீர்க்கப்பட்டமை எங்கள் பாடசாலையின் பெருமை அளிக்கிறது. 🙏

💐 இம் மாணவி மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாக இறைவன் அருள் புரிய
எங்கள் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கல்விசார உழியர்கள் அனைவரும்
உண்மையுடன் பிரார்த்திக்கின்றோம். 🤲✨

அல்-அதான் மகா வித்தியாலயத்தின் பெருமை – எம். எப். அஸ்ரா! 💪🌟

🗓️ 28/07/2025 (செவ்வாய்க்கிழமை)🎯 Clean Sri Lanka – Beautiful Coastline, an Attractive Tourism Destination🪖 இலங்கை இராணுவ...
29/07/2025

🗓️ 28/07/2025 (செவ்வாய்க்கிழமை)
🎯 Clean Sri Lanka – Beautiful Coastline, an Attractive Tourism Destination
🪖 இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Clean Sri Lanka

திறமைமிக்க எங்கள் மாணவர்கள் தி/கிண்/அல்-அதான் மகா வித்தியாலயத்திலிருந்து பங்கேற்றனர் .இந் நிகழ்வு கிண்ணியா பஸ் தரிப்பிடம் தொடக்கம் உப்பாறு பாலம் வரையான கடற்கரையோர பகுதிகளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் துப்புரவு நடவடிக்கை இடம்பெற்றது🇱🇰🌊

🌱 துப்புரவு பணிகளில் செயலில் ஈடுபட்ட மாணவர்கள்
🌍 சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஊக்குவிப்பு
📸 நினைவாக எடுத்துக் கொண்ட சில இனிய தருணங்கள்

இந்நிகழ்வு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கொண்டுவந்து, அவர்களின் சமூக பொறுப்புணர்வை வளர்த்திருக்கிறது.

👏 எங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இதுபோன்ற அருமையான முயற்சிக்கு நன்றிகள்!

📅 28/07/2025 - திங்கட்கிழமை🎉 மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வுஇன்று தி/கிண்/அல்-அதான் மகா வித்தியாலயத்தில், அதிபர் UM. Ralees...
28/07/2025

📅 28/07/2025 - திங்கட்கிழமை

🎉 மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு
இன்று தி/கிண்/அல்-அதான் மகா வித்தியாலயத்தில், அதிபர் UM. Ralees அவர்களின் தலைமையில், Agricultural Union ஏற்பாட்டில் க.பொ.த (சா/தர) பரீட்சையில் தோற்றி, Agriculture and Food Technology பாடத்தில் “A” சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் மற்றும் கெளரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில்,
🎓 கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்
MM. Ibathullah (ISA) மற்றும்
🏛️ எமது பாடசாலையின் முன்னாள் அதிபரும், கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளர்
Hon. MS. Abdul Azeez அவர்களும் பங்கேற்றார்கள்

Address

Annal Nagar
Kinniyai
31100

Opening Hours

Monday 07:00 - 14:30
Tuesday 07:00 - 14:30
Wednesday 07:00 - 14:30
Thursday 07:00 - 14:30
Friday 07:00 - 14:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al - Adhan Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share