29/05/2024
மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய கல்வியலாளர்கள் எனும் கருத்திட்டத்தின் கீழ் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை NAMS College of Higher Studies இனால் 2024 மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் NAMS College of Higher Studies கட்டிட கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணிவரை நடை பெற்றது. இதனையடுத்து 27 ஆம் திகதி கிண்ணியா பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எம்.எச். கனி அவர்களின் வழிநடத்தலில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கென தனியான நிகழ்வொன்று ஏற்படு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
NAMS College of Higher Studies நிறைவேற்றுப் பணிப்பாளர் என். நஜிமுதீன் முஸ்தாக் அவர்களுடைய தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதான வளவாளராக அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியலாளரும், துறைசார் ரீதியாக 25 வருடகால அனுபவமிக்க கல்வியலாளரும், The Global Pioneers நிறுவனத்தின் தலைவருமான டாக்டர். கேரி கௌல்ஸ்டன் பங்கேற்றார். மட்டுமன்றி, சர்வதேச மனித வாழ்வாதார கல்விப் பிரதிநிதி செல்வி. பார்க்கவி சாந்தி குமார் மற்றும் ஆசிரியர் ராஜ யோகா என்போரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயன் பெறும் வகையில் முன்கூட்டிய திட்டமிடப்பட்ட பயிற்சி வழிகாட்டல்களின் அடிப்படையில் மனநலப் பயிற்சி ஆலோசணைகள், மன அழுத்த மேலாண்மை, கல்வியில் தொடர்புத் திறன் மற்றும் தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் மக்கள் சார் திறன்கள், இரண்டாம் மொழிக் கருவியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தல், அதற்கான நுட்பங்கள் என பல தலைப்புக்கள் பிரதானமாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பயிற்சிநெறியின் இறுதியில், பயிற்சிநெறியை முழுமையாகப் பூர்த்தி செய்தவர்களுக்கு அமெரிக்க அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.