T/Kin/Al-Akthab Vidyalayam

T/Kin/Al-Akthab Vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T/Kin/Al-Akthab Vidyalayam, School, Rahumaniya Street, Kinniyai.

நோன்பு பெருநாள் கொண்டாட்டம் - 2024""""""""""""""""""""""""""""""""'''"""'''''''''''''''''''''''''''''''''''''''''''''இன்...
26/04/2024

நோன்பு பெருநாள் கொண்டாட்டம் - 2024
""""""""""""""""""""""""""""""""'''"""'''''''''''''''''''''''''''''''''''''''''''''
இன்று 26.04.2024 எமது பாடசாலை புதிய அதிபர் Mr.B.M.Amjath சேரின் தலைமையில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் வெகுவிமர்சையாக மாணவர் மற்றும் பெற்றோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பாராட்டு நிகழ்வு:கடந்த 06.08.2023 ஆம் திகதி நடைபெற்ற கிண்ணியா வலயமட்ட ஆங்கில தினப் போட்டியில் தி/கிண்/அல்-அக்தாப் வித்தி...
07/08/2023

பாராட்டு நிகழ்வு:

கடந்த 06.08.2023 ஆம் திகதி நடைபெற்ற கிண்ணியா வலயமட்ட ஆங்கில தினப் போட்டியில் தி/கிண்/அல்-அக்தாப் வித்தியாலய தரம் 03 மாணவி எம்.ஆர். பாத்திமா தாளியா கவிதை முன்வைக்கும் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றார். இம் மாணவி மற்றும் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. பா. ஆகிஸா பானு ஆகியோர் பாடசாலை அதிபர் திரு. ஏ.எல்.எம். நளீப் அவர்களினால் பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு இன்று 07.08.2023 ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.

"தரம் 01 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு - 2023"எமது பாடசாலை தரம் 01 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு அதிபர் ஏ.எல்.எம். நளீப்...
27/04/2023

"தரம் 01 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு - 2023"

எமது பாடசாலை தரம் 01 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு அதிபர் ஏ.எல்.எம். நளீப் அவர்களின் தலைமையில் இன்று வெகு விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கிண்ணியா பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சிறாஜ் (DDE) மற்றும் கிண்ணியா வைத்தியசாலையின் மனநள பிரிவுப் பொறுப்பாளர் Dr. A.K.M. நஸ்மி (MBBS) ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாடசாலைக்கு பொறுப்பான EPSI மர்யம் வீவீ ISA மற்றும் தாஜுதீன் ISA ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

"தரம் 01 புதிய மாணவர் அனுமதி - 2023"இன்று எமது பாடசாலை  தி/கிண் /அல் - அக்தாப் வித்தியாலயத்தில் நடைபெற்ற 2023 தரம் 01 பு...
04/03/2023

"தரம் 01 புதிய மாணவர் அனுமதி - 2023"

இன்று எமது பாடசாலை தி/கிண் /அல் - அக்தாப் வித்தியாலயத்தில் நடைபெற்ற 2023 தரம் 01 புதிய மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கற்றல் ஆரம்பம் 16 செயற்பாடுகளின் முதல் நிகழ்வு "வீடு கட்டி மகிழ்வோம்". இந் நிகழ்வுக்கு அதீதிகளாக பிரதி கல்விப் பணிப்பாளர் எம். சீ. எம். நஸார் (SLEAS), பாடசாலை இணைப்பாளர் திருமதி சரீனா பாறூக் (EPSI) ஆகியோர் அதிபர் ஏ. எல். எம். நளீப் அவர்களுடன் இணைந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வை வகுப்பாசிரியர் ஏ. எம். சியானா மற்றும் பெற்றார்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்.

வலயமட்ட இனணப்பாடவிதான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 12.12.2022 பாடசாலை அதிபர் ஏ....
12/12/2022

வலயமட்ட இனணப்பாடவிதான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 12.12.2022 பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.நளீப் அவர்களின் தலைமையில் பிர பாடசாலை ஆசிரியர் ஏ.எச்.எம்.மௌஜுத் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

"சர்வதேச சிறுவர் மற்றும் ஆசிரியர் தின கலை விழா - 2022"மேற்படி எமது பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கெளரவிக்கும் இந...
06/10/2022

"சர்வதேச சிறுவர் மற்றும் ஆசிரியர் தின கலை விழா - 2022"

மேற்படி எமது பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கெளரவிக்கும் இந் நிகழ்வானது “A Better Future for Every Child” & “The Transformation of Education Begins With Teachers” எனும் தொனிப்பொருளில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் ஏ.எல்.எம். நளீப் அவர்களின் தலைமையில் கிண்ணியா வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளான திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் திரு. T.M.S. அஹமட் (SLEAS), ஆசிரியர் வள நிலைய பொறுப்பதிகாரி திரு. ஜே. நாம்தீன் (SLTES), ஆசிரியர்கள் ஆலோசகர் திருமதி. சரீனா பாரூக் (EPSI),
ஆசிரியர்கள் ஆலோசகர் திரு. ஏ.எல்.எம்.நஜாத் (ISA) ஆகியோரின் பங்பற்றுதலுடன் மாணவர்களின் அழகிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

"முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்வு - 2022"எமது பாடசாலையின் இவ்வருடத்தற்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வ...
06/05/2022

"முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்வு - 2022"

எமது பாடசாலையின் இவ்வருடத்தற்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 05.05.2022 எமது பாடசாலையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு பாடசாலை அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் விஷேட அதிதியாக EPSI சரீனா பாரூக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எமது பாடசாலையின் தரம் 1 புதிய மாணவர் அனுமதி - 2022 வீடு கட்டி மகிழ்வோம் செயற்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.
17/03/2022

எமது பாடசாலையின் தரம் 1 புதிய மாணவர் அனுமதி - 2022 வீடு கட்டி மகிழ்வோம் செயற்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.

எமது பாடசாலையில் 2022 தரம் 1 க்கு புதிய மாணவர் அனுமதித்தல் தொடர்பான கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு அதிபர் தலைமையில் நடை...
11/03/2022

எமது பாடசாலையில் 2022 தரம் 1 க்கு புதிய மாணவர் அனுமதித்தல் தொடர்பான கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு அதிபர் தலைமையில் நடைபெற்றது.

10/03/2022

இன்று 10.03.2022 எமது பாடசாலையின் தரம் 1 - தரம் 5 மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி மற்றும் முன்பள்ளி மாணவர்களின் மாதிரிச் சந்தை ஆகியன பாடசாலை அதிபர் திரு. ஏ.எல்.எம்.நளீப் தலைமையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து திரு. என். நாம்தீன் சேர் (SLTES) மற்றும் எமது பாடசாலை இணைப்பாளர் திருமதி. ஐ. சரீனா பாரூக் (EPSI) அவர்களுடன் ஏனைய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், RDS, SDS வருகை தந்து சிறப்பித்தனர்.

10/03/2022

"கைப்பணிக் கண்காட்சி மற்றும் மாதிரிச் சந்தை - 2022"

"கைப்பணிக் கண்காட்சி மற்றும் மாதிரிச் சந்தை - 2022"இன்று 10.03.2022 எமது பாடசாலையின் தரம் 1 - தரம் 5 மாணவர்களின் கைப்பணி...
10/03/2022

"கைப்பணிக் கண்காட்சி மற்றும் மாதிரிச் சந்தை - 2022"

இன்று 10.03.2022 எமது பாடசாலையின் தரம் 1 - தரம் 5 மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி மற்றும் முன்பள்ளி மாணவர்களின் மாதிரிச் சந்தை ஆகியன பாடசாலை அதிபர் திரு. ஏ.எல்.எம். நளீப் தலைமையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து திரு. என். நாம்தீன் சேர் (SLTES) மற்றும் எமது பாடசாலை இணைப்பாளர் திருமதி. ஐ. சரீனா பாரூக் (EPSI) அவர்களுடன் ஏனைய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

Address

Rahumaniya Street
Kinniyai
31100

Opening Hours

Monday 07:00 - 14:30
Tuesday 07:00 - 14:30
Wednesday 07:00 - 14:30
Thursday 07:00 - 14:30
Friday 07:00 - 12:00

Telephone

+94775380143

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/Kin/Al-Akthab Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category