15/06/2022
பாலு மகேந்திரா நூலகமானது இவ் வருடத்திற்கான ஒளிப்பதிவு தொடர்பான இலவச குறுங்கால பயிற்சிப்பட்டறையினை வார இறுதி நாட்களில் நடாத்த இருக்கிறது.
இப் பயிற்சிப்பட்டறையானது புனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டம் (Three Years PG Diploma In Cinematography) பெற்ற ஈழத்து ஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற உள்ளது.
வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக பத்து வாரங்கள் (02.07.2022 - 04.09.2022) நடைபெறவுள்ள இந்த கற்கைநெறிக்கான விண்ணப்பப்படிவ உள்வாங்கலானது ஜூன் மாதம் இருபத்திநான்காம் திகதி (24.06.2022) நள்ளிரவுடன் முடிவடையும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் இருபத்தேழாம் திகதிக்கு (27.06.2022) முன்னர் மின்னஞ்சல் ஊடாக மேலதிக விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இப் பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் நேரடியாக பாலு மகேந்திரா நூலகத்திற்கு வருகை தந்து பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ளல் வேண்டும். கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச தங்குமிட வசதி செய்துதரப்படும்.
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:
https://bml.world/dop
மேலதிக தொடர்புகளுக்கு:
www.balumahendralibrary.org
[email protected]