Tamil Students' Association-University of Kelaniya

Tamil Students' Association-University of Kelaniya களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் - TSA UOK Community Organization

'அ' எனத் தொடங்கிய சிறு பயணத்தில், அயரா உழைப்பும்,ஊக்கமும் பாதை செய்ய -  பல்கலைக்கழகம் எனும் மைல்கல் தொட்டு இந்நாளில் மகு...
17/08/2026

'அ' எனத் தொடங்கிய சிறு பயணத்தில்,
அயரா உழைப்பும்,ஊக்கமும் பாதை செய்ய -
பல்கலைக்கழகம் எனும் மைல்கல் தொட்டு இந்நாளில்
மகுடம் தனை மகிழ்வாய் சூடும் எம் சகோதரர்களே !

இன்னும் நெடிது பயணித்து வெற்றிகள் பல கொண்டு,
கற்றறிந்த நெறியினிலே
தக்கபடி நின்றொழுகி
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க
வாழ்த்துகிறோம் . . !

🎨வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்
✍🏻 வரிகள் : கலையரசி கிருபாரூபன்

கற்ற கல்வியும்எடுத்த முயற்சிகளும்கைகொடுக்க,கனவுகள் நிறைந்தவிழிகளோடு, பரீட்சை நிலையம் நோக்கி விரையும் பாதங்கள்...அச்சம் வ...
10/08/2026

கற்ற கல்வியும்
எடுத்த முயற்சிகளும்
கைகொடுக்க,
கனவுகள் நிறைந்த
விழிகளோடு,
பரீட்சை நிலையம் நோக்கி
விரையும் பாதங்கள்...

அச்சம் விலக்கி,
பதற்றம் தவிர்த்து,
பேனா தனை ஏந்தி
எண்ணிய வெற்றியை
கைகளில் பெற்றிட,
வாழ்த்துகள் நாம்
கூறுகின்றோம்...

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றப்போகும்
உங்கள் அனைவருக்கும் களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் சார்பில்
உளமார்ந்த நல்வாழ்த்துகள்!

✍🏻வரிகள் : கலையரசி கிருபாரூபன்
🎨 வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

இத்தனை காலமும் எமக்கு வழிகாட்டிய நெஞ்சங்களுக்கு பற்பல நினைவுகளுடன் பிரியாவிடை கொடுத்திட...புதிய எதிர்பார்ப்புகளுடன் அடி ...
23/07/2026

இத்தனை காலமும் எமக்கு வழிகாட்டிய நெஞ்சங்களுக்கு பற்பல நினைவுகளுடன் பிரியாவிடை கொடுத்திட...

புதிய எதிர்பார்ப்புகளுடன்
அடி எடுத்து வைக்கும் எம் இளைய சகோதர சகோதரிகளை வரவேற்றிட...

உணர்வுகளின் சங்கமமாய் நடந்தேறிய,
'தடம்' மற்றும் 'வருபுனல்' நிகழ்வுகளின் பதிவுகள்
பாகம்-02

✍🏻வரிகள் : சுப்பிரமணியம் கோகிலன்
📸 ஒளிப்படங்கள் & படத்தொகுப்பு : சற்குணராசா சந்தோஷ்

மைதானம் சாட்சியாய்...இதயங்கள் ஒன்றிணைந்த தருணங்கள்.வெற்றியை நோக்கி ஓடிய கால்கள்,நட்பை நோக்கி நகர்ந்த மனங்கள்.விளையாட்டைத...
10/07/2026

மைதானம் சாட்சியாய்...
இதயங்கள் ஒன்றிணைந்த தருணங்கள்.

வெற்றியை நோக்கி ஓடிய கால்கள்,
நட்பை நோக்கி நகர்ந்த மனங்கள்.

விளையாட்டைத் தாண்டி,
உறவுகளைப் பேணிய

அந்த அழகிய நினைவுகளின் இரண்டாம் பாகம்...
உறுமறி-2026🏏

✍🏻வரிகள் : குகனேஸ்வரசர்மா ஹபிகுகசர்மா

சிரேஷ்ட சகோதரர்களின் ஈடில்லா பிரிவின் வழியனுப்பல்களின் கடைசிப் பக்கங்களாய்... "தடம்"கனிஷ்ட மாணவர்களை அன்புடன் வரவேற்கும்...
07/07/2026

சிரேஷ்ட சகோதரர்களின் ஈடில்லா பிரிவின் வழியனுப்பல்களின் கடைசிப் பக்கங்களாய்... "தடம்"

கனிஷ்ட மாணவர்களை அன்புடன் வரவேற்கும் ஆரம்பப் புள்ளிகளாய்... "வருபுனல்"

நினைவுகளும் நம்பிக்கைகளும் சங்கமிக்கும் இத்தருணத்தில்,

அழகிய நினைவுகளை மீட்டிட மலர்ந்த நிகழ்வின் பதிவுகள் பாகம் - 01

✍🏻வரிகள் : சங்கீர்த்தனா நேசன்
📸 ஒளிப்படங்கள் & படத்தொகுப்பு : சற்குணராசா சந்தோஷ்

களம் கண்ட கணங்கள்...வீரம் பேசிய விழிகள்...வெற்றியை நோக்கி பறந்த கனவுகள்...துடுப்பாட்ட அணிகளின் பேரார்வமும்,இளமை துடிப்பி...
28/06/2026

களம் கண்ட கணங்கள்...
வீரம் பேசிய விழிகள்...
வெற்றியை நோக்கி
பறந்த கனவுகள்...

துடுப்பாட்ட அணிகளின் பேரார்வமும்,
இளமை துடிப்பின் பேரெழுச்சியும்,
தமிழரின் ஒற்றுமை உணர்வும்,
களமெங்கும் முழங்கிய நாளின்
அழகிய நினைவுகள்..!

'உறுமறி - 2026' நிகழ்வின் மறக்க முடியாத தருணங்கள் பாகம் 01

✍🏻 வரிகள் : மேர்சி அன்றியா டீசில்வா

பத்துத் திங்கள் பின்தொடர் மொத்தத் திங்கள் முழுப்பொறுப்பைபுன்னகைக்குப் பின் முகத்தில் பெற்று நிற்கும் பெரும்பதவி,முதுகெலு...
21/06/2026

பத்துத் திங்கள் பின்தொடர்
மொத்தத் திங்கள் முழுப்பொறுப்பை
புன்னகைக்குப் பின் முகத்தில்
பெற்று நிற்கும் பெரும்பதவி,

முதுகெலும்பு முழு இரும்பாக்கி
தன் பிள்ளைகள் நல்வழிகாட்டி
முடிவிலி வரை உன் மூடா விழிக்கு
முடிவென உந்தன் சேயே சாட்சி.

அளவற்று உள்ள வெளிக்காட்டா அன்பும், அர்ப்பணிப்புமே அன்றாட பண்பெனக் கொண்டு வாழ் அத்தனை தந்தையர்க்கும் இன்றைய நாள் அன்பு வாழ்த்துக்கள் சமர்ப்பணம்.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்❤️

✍🏻 வரிகள் : ராகுலன் பிரியங்கன்
🎨 வடிவமைப்பு : நிர்த்திகா சுரேஷ்

களனியின் ஆடுகளம் நாளை அதிரும் வண்ணம் 'உறுமறி' எனப் பெயர் கொண்டு களம் காணும் துடுப்பாட்டச் சுற்றினிலே,வென்றிடும் வேட்கையி...
12/06/2026

களனியின் ஆடுகளம் நாளை அதிரும் வண்ணம் 'உறுமறி' எனப் பெயர் கொண்டு களம் காணும் துடுப்பாட்டச் சுற்றினிலே,
வென்றிடும் வேட்கையின் வீச்சத்தினை வீசும் பந்துகளின் வேகம் புலப்படுத்திட,
பதினொரு அணிகளாய்த் திரண்டு,
கைகளில் துடுப்பேந்தி களத்தினுள் கால் பதிக்கப் போகும் நம் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் துடிப்புமிகு தமிழ்ப் பெருங்குடியின் வீர விழுதுகள் இவர்கள் தாம்...

✍🏻 வரிகள் : கலையரசி கிருபாரூபன்
🎨 வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

12/06/2026

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்படும் “உறுமறி -2026” நிகழ்வானது சிறப்பாக நடைபெற அனுசரணையாளராக இணைந்து கொள்ளும் அன்னை முத்துமாரி எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு எம் மனமார்ந்த நன்றிகள்!

Annai Muththumari Express

12/06/2026

களனியின் களமெங்கும் வீரத்தின் முழக்கம் ஒலிக்க,
விண்ணை அதிரவைக்கும் துடுப்பாட்ட சாகசங்களும், அனல் பறக்கும் கபடி மோதல்களும்
உற்சாகத்தில் திளைக்க வைக்கும் கொண்டாட்ட தருணங்களும்
நட்பு மற்றும் வீரியம் என கொண்டாட்டம் ஒன்றாய் சங்கமிக்கும் அந்த தருணம்
உறுமறி — களனி காணப்போகும் இனியதொரு மாபெரும் காட்சி..!

📆 திகதி : 13.06.2026 சனிக்கிழமை
🕗நேரம் : மு.ப 8.00 மணி முதல்
📍 இடம் : Cybe மைதானம்

✍🏻வரிகள் : சதானந்தன் கௌசியன்
🎨வடிவமைப்பு : நிருத்திகன் முருகேசபிள்ளை

Address

Kelaniya
11600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Students' Association-University of Kelaniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamil Students' Association-University of Kelaniya:

Shortcuts

Share