Bismi Institute

Bismi Institute Smart Student Through Smart Learning

பாடசாலை பாடவிதானங்கள் மற்றும் இஸ்லாமியத்துறை சார்ந்த பாடங்கள் என்பவற்றுடன் ஆளுமை மற்றும் திறன்விருத்திக்கான பயிற்றுவிப்புக்கள் பாடசாலைப் பாடங்களை பாடமீட்டுவதற்கான முழுமையான வழிகாட்டல்கள், பாடசாலைப் பரீட்சைகளுக்கான விஷேட தயார்படுத்தல்கள், ஆன்மீக ரீதியான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்றுவிப்புகள் என்பவற்றோடு இப்பாடசாலையினை நாம் வடிவமைத்துள்ளோம்.

2027 ஆம் ஆண்டில் தரம் 06 ற்கான புதிய மாணவ மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
28/09/2026

2027 ஆம் ஆண்டில் தரம் 06 ற்கான புதிய மாணவ மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

பிஸ்மி இடைநிலைப் பாடசாலை ஏற்பாடு செய்திருந்த தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி, 2026.09.20 (ஞாயிற்றுக்கிழ...
21/09/2026

பிஸ்மி இடைநிலைப் பாடசாலை ஏற்பாடு செய்திருந்த தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி, 2026.09.20 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பாடசாலை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

மாணவர்களிடம் காணப்படும் கற்பனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வெளிக்கொணரவும், மேலும் அவற்றை மேம்படுத்தவும் என்ற நோக்குடன் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

போட்டியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று, தங்களது தனித்துவமான சிந்தனைகளையும் கலைநயத்தையும் அழகிய ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.

காத்தான்குடி பிஸ்மி இடைநிலைப் பாடசாலையில் மாணவர்களுக்கான தொழுகைப் பயிற்சி வெற்றிகரமாக இடம்பெற்றது.காத்தான்குடி பிஸ்மி இட...
13/09/2026

காத்தான்குடி பிஸ்மி இடைநிலைப் பாடசாலையில் மாணவர்களுக்கான தொழுகைப் பயிற்சி வெற்றிகரமாக இடம்பெற்றது.

காத்தான்குடி பிஸ்மி இடைநிலைப் பாடசாலையின் தரம் 6 தொடக்கம் 9 வரையான மாணவ மாணவிகளுக்கான தொழுகைப் பயிற்சி கடந்த 2026.09.12 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 11 மணி வரை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இன்நிகழ்வில் பேருளை ஜாமிஆ நளீமியா கலாபீட மாணவர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்களுக்கு தொழுகைகளை உரிய முறையில், முறையான விதிகளின்படி நிறைவேற்றுவதற்கான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக சிந்தனையையும் வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பாசறை மிகவும் பயனுள்ள வகையிலும் சிறப்பான முறையிலும் நிறைவுபெற்றது.

13/09/2026
தற்போது முதல் புதிய மாணவர் அனுமதிக்குரிய விண்ணப்பங்களை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்
17/08/2026

தற்போது முதல் புதிய மாணவர் அனுமதிக்குரிய விண்ணப்பங்களை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

எமது பிஸ்மி இடைநிலை பாடசாலையின் தரம் 10, 11 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான வணிகமும் கணக்கீட்டு கல்வியும்...
17/08/2026

எமது பிஸ்மி இடைநிலை பாடசாலையின் தரம் 10, 11 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான வணிகமும் கணக்கீட்டு கல்வியும் பாடத்திற்கான Business Idea உள்ளடக்கிய Presentation போட்டி நிகழ்ச்சி இன்று பிஸ்மி மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள் தங்களுடைய BUSINESS IDEAக்களை Presentation செய்ததுடன் சிறந்த Business Idea மற்றும் Best Presentation ஆகியவற்றுக்கான விருதினை தரம் -11 றில் கல்வி கற்கும் மாணவி MJF. ZAHRA பெற்றுக்கொண்டார்

02/08/2026

காத்தான்குடி பிஸ்மி கிண்டர்காடன் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வித்தியாசமான சிறுவர் நிகழ்வு
தொகுப்பு 08

Address

C 38, Beach Road, New Kattankudy 03
Kattankudi
30100

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 11:30
Saturday 05:00 - 10:00
15:00 - 21:00
Sunday 05:00 - 10:00
15:00 - 21:00

Telephone

+94777300454

Alerts

Be the first to know and let us send you an email when Bismi Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bismi Institute:

Shortcuts

Share

Category