13/01/2025
சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை
சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை 2017 இல் ஆரம்பிக்கப்பட்டு சிதம்பரா கணிதப் போட்டி எனும் பெயரில் நடைபெறும் சிதம்பரா கணிதப் பெருவிழா இன்று கனடா முதல் ஐரோப்பா தொடங்கி இலங்கையைத் தழுவி அவுஸ்திரேலியா, நியூசிலாந்துவரை கொடிகட்டி பறக்கிறது.
கணித மேதை ராமனுஜர் போல நம்மிடையேயும் கணித மேதைகள் மறைந்திருக்கலாம் அவர்களை வெளிக் கொண்டுவரும் உன்னதத் தேடலாக இந்தப் பரீட்சை (சிதம்பரா) நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.
இந்த விதை முதன் முதலில் தூவப்பட்டது இங்கிலாந்தில் என்பது கவனிக்கத்தக்கது அங்கு ஆரம்பித்து பல்லாயிரம் மாணவர்களை ஒன்றிணைத்து உலகத்தை திரும்பிப்பார்க்க வைத்த இந்தப் போட்டிப் பரீட்சை இப்போது கணிதத்தின் பெருக்கல் விதியாம் வர்க்கமூலம் போல உலகம் முழுவதும் பெருகிச்செல்கிறது.
இலங்கையில் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்று சுமார் 32 மேற்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் இந்த (சிதம்பரா) போட்டிப் பரீட்சைக்காக இப்போது குழுமியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்வரும் YOUTUBE LINK இனை CLICK செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.
https://youtu.be/_2zb2j5b6gY