04/12/2016
*நான் கண்ட ஸைஹுல் பலாஹ் - தொடர் 10*
*===%%%===%%%===*
இறுதியாக எடுக்கப்பட்ட முடிவின் படி அடுத்த நாள் காலையில் சுமார் ஏழு மணியளவில் முதலாம் குறிச்சி ஸாவியா பள்ளி வாயலில் சந்திப்பதர்காக எங்கள் குழு ஸைஹுல் பலாஹ் தலமையில் அதற்கு முதல் நாள் புலிகளை சந்திக்கச்சென்ற அனைவருடனும் இன்னும் பலரும் சென்று இருந்தோம்.
அதன் பின்னர் பரிவாரங்களுடன் பாதுசா அவர்களும் அவரது மெய்பாதுகாப்பாளர்களோடு வந்து சேர்ந்தார், முதல் நாள் நடந்த சம்பவம்களை தெழிவாக விளக்கி கூறப்பட்டது, அவர்கள் ( பாதுசா குழுவினர் ) எந்த வகையிலும் எந்த ஒரு முடிவிற்கும் வரவில்லை பல மணி நேரம் பேசினோம் காலை உணவும் இல்லை பகல் உணவும் இல்லை தேனீர் உடன் பொறுமை காத்தோம் இறுதியில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் சுமார் மூன்று மணியளவில் வெழியேறி ஜாமியதுல் பலாஹ் சென்றோம்.
மீண்டும் மசூறா ஆரம்பமானது அதில் இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு அனைத்து பொறுப்பையும் அல்லாஹ்வின் மீது வைத்து விட்டு அனைவரும் வீடு செல்வோம் புலிகளின் காலக்கெடு முடிந்ததும் அவர்கள் எதை செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் அதுதான் எண்று பொருந்திக்கொள்வோம், மறுநாள் காலையில் யார் யார் உயிர் தப்பி இருக்கின்றார்களோ அவர்கள் விரும்பினால் எதையாவது செய்யட்டும் எண்று வழமைக்கு மாற்றமாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் எமது கூட்டத்தை கலைத்துவிட முடிவு செய்தோம்.
அதற்கு முன்னர் நீண்டதொரு துஆ பிரார்தனை செய்யப்பட்டது ஒருவரை ஒருவர் இதுதான் நாம் சந்திக்கும் இறுதி தருணம் இன் ஸா அல்லாஹ் அவன் நாடினால் கியாமத் நாளில் சந்திப்போம் எண்று பிரியாவிடை பெற்று சென்றோம், வழமை போன்று சேர்மன் அஹ்மது லெப்பை அவர்களை எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று அவரின் வீட்டில் விட்டு விட்டு எனது வீடு திரும்பினேன்.
அப்போது மஃரிபு தொழுகைக்கான நேரம் நானும் வீட்டில் வுழு செய்து கொண்டு குலபா உற்றாஸிதீன் பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவதர்காக கடைசி வரிசயில் தக்பிர் கட்டுவதற்கு கையை உயர்தும்போது ஒருவர் திடீர் என எனது கையை பிடித்து இழுத்தார் நெஞ்சில் சிலீர் எண்று இருந்தது, திரும்பினேன் நன்பர் அமீனுல்லாஹ் அவசரம் சற்று வெழியில் வாருங்கள் என்றார் வாசல் வரை வந்தேன் நீங்கள் அவசரமாக மீண்டும் சேர்மன் அஹ்மது லெப்பை அவர்களை ஏற்றிக்கொண்டு மதரசாவிர்கு வாருங்கள் நாம் மீண்டும் அவசரமாக கூட வேண்டியுள்ளது, புலிகள் நமக்கு மன்னிப்பு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது எண்று கூறினார்.
நானும் தொழுதுவிட்டு சேர்மனின் வீட்டிற்கு சென்ரு அவரை மீண்டும் பைக்கில் ஏற்றிக்கொண்டு மதரசாவிர்கு வந்தேன் அந்த நேரம் நன்பர் அமீனுல்லாஹ் அவர்கள் பலரின் உதவியோடு மீண்டும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார், இறுதியில் மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுப்பதாக தீர்மானித்து அல்லாஹ்வின் உதவியால் இன்று புலிகளின் அச்சுறுத்தல் நீங்கி விட்டது மக்கள் கவலையின்றி நிம்மதியாக தூங்கலாம் என்பதுவே அந்த அறிவித்தல்.
இப்போது பலரும் பேசிக்கொண்டோம் புலிகள் ஏதோ நம் மீது இரக்கம் காட்டிவிட்டார்கள் எண்று ஆனால் அந்த எண்ணம் தவறானது என்பதை புரிவதற்கு கன காலம் தேவைப்படவில்லை, அரசங்கத்தின் புலனாய்வுப்பிரிவும், புலிகளின் புலனாய்வுப் பிரிவும் ஒண்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பத புரிந்து கொள்ள முடிந்தது, அதிகாலை சுப்ஹு தொழுகைக்கு எழும்பும் போதே ஹெலிகளின் சப்தம் கேட்டது சுமார் ஐந்து ஆறு ஹெலிகள் ஆற்றை சுற்றியும் கடல் பகுதியை சுற்றியும் பறந்து கொண்டு இருந்தது.
துப்பாகிச்சத்தமும் கேட்ட வண்ணம் இருந்தது, காரணம் முதல் நாள் புலிகளுடன் முஸ்லிம்கள் நடாத்திய பேச்சு வார்தையின் பின் அவர்கள் கொடுத்த காலக்கெடுவும் அவர்கள் முஸ்லிம் பகுதியில் இருக்கும் ஆயுதம்களை சேகரிப்பதர்காக ஆரையம்பதியில் தங்கி இருக்கும் தகவல் அரச படைகளுக்கு எட்டி விட்டது ஆகவே ஆற்றையும் கடலையும் சுற்றி இவர்கள் தப்பிச்செல்லமுடியாமல் ஹெலியின் உதவியுடன் முழு தமிழ் பகுதியையும் சுற்றி வழைத்து தேடுதல் நடத்துவது எண்று எடுத்த முடிவு இவர்களுக்கு கிடைத்து விட்டது.
அதனால் தப்பினோம் பிளைத்தோம் எண்று ஓடி தப்புவதற்கு முன்னர் நாங்கள் முஸ்லிம்களை மன்னித்து விட்டோம் எண்று நல்ல பிள்ளைகளாக நடித்து விட்டு இரவோடு இரவாக எல்லோரும் படுவான்கரைக்கு தப்பி விட்டார்கள், அடுத்தநாள் பல நூறுபேருடனும் ஆயிரக்கணக்கில் துப்பாக்கி வேட்டு வைத்தும் நடத்திய தேடுதலில் யாரும் அகப்படவில்லை, ஆனால் நாங்கள் அன்று உருக்கமாக கேட்ட துஆ வை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்பதுதான் சுருக்கமாக இருந்தது.
இப்படியான சூழ் நிகைகளுக்கெல்லாம் முகம் கொடுத்த நாங்கள் முதலாவது தோல்வியாக நமது சேர்மன் அஹ்மது லெப்பை அவர்களை ஊரின் மத்திய பகுதியில் சந்தியில் வைத்து பலி கொடுத்தோம் இந்த படு கொலையில் புலிகள் அறவே சம்பந்தம் இல்லை நமது முஸ்லிம்சகோதர்களே அரசியல் வஞ்சம் தீர்தார்கள் அவர்களது அரசியல் வழர்சிக்கு இந்த அஹ்மது லெப்பையின் எதையும் பிரதி பலனாக எதிர்பாராத செயல் பாடு தடை எண்று கருதினார்கள், மிக குறுகிய காலத்தில் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் அல்லஹ் அழித்து விட்டான், அதில் சந்தேகிக்கப்பட்ட ஒருவரை புலிகள் பிடித்துக்கொண்டு வந்து அந்த மாமனிதர் சுடுபட்ட இடத்தில் வைத்து சுட்டுப்போட்டு இருந்தார்கள்.
ஊருக்காக உழைத்த அந்த மாமனிதனை ஊரின் நடு மத்தியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள், வழமையாக நான் தான் அவரை ஏற்றிச்செல்வேன் அன்று நானும் நன்பர்களான அமீனுல்லாஹ்வும் ஜவாத் ஸேர் அவர்களும்பேசிக்கொண்டு இருந்தோம் வேறு ஒருவர் ஏற்றிச்சென்றார் அவர் இந்த கொலைகாரர்களால் அவர்களுக்கு வேண்டியவர் என்ற ஒரு காரணத்திர்காக விடப்பட்டார், மாற்றமாக நான் சென்று இருந்தால் நிச்சயம் என்னையும் சேர்து சுட்டு இருப்பார்கள்.
ஆகவே இந்த நாளைக்குபின்னரான எனது வாழ்கை போனஸ் வாழ்கை என்றே நான் கருதினேன், பின்னர் 1990 புலிகளால் இரண்டு முறை கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டது இரண்டாவது போனஸ் எண்று கருதினேன் அதனால்தான் நான் எனது வாழ்கையை கொழும்பில் அமைத்துக்கொண்டேன். 1990 ஜனவரி முதல் நான் கொழும்பில் தங்கி விட்டேன் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி நமதூர் பள்ளிவாயல் களில் புலிகள் தங்கள் வீரத்தைக்காட்டினார்கள். 103 பேர் வீர மரணம்.
அந்த மாமனிதர் அஹ்மத் லெப்பை அவர்களின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை இருந்தும் சில இக்கட்டான கட்டத்தில் ஸைஹுல் பலாஹ் அவர்கள் முன் நிண்று வழி நடத்தினார்கள். இப்போது அவர்களும் எம்மை விட்டும் பிரிந்து விட்டார்கள் இந்த நிறப்ப முடியாத வெற்றிடத்தால் நமது ஊர் துடுப்பு இல்லாத தோணிபோல் காற்றடிக்கும் திசை எல்லாம் சுழன்று கொண்டு இருக்கின்றது தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்பதுபோல் ஊர் ஆளப்படுகிறது இந்த நிலையில் போய்கொண்டு இருக்கிறது வாழ்கைச் சக்கரம்.
அல்லாஹ் நமது தூய எண்ணத்தையும் எம்மால் முடிந்த செய்கைகளையும் அங்கீகரிப்பானாக.
By : Al-haj moulavi Sayyath Ahmad ( falahi)