03/04/2020
இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே... எப்போது முடியும் இந்த கொரோனாவும், வரையறையற்ற ஊரடங்கு சட்டமும்?
தயவு செய்து இந்த பதிவினை உங்கள் பொண்ணான நேரத்தினை செலவு செய்து வாசிக்கவும்.
உலகளாவிய ரீதியில் தற்போது பேசப்பட்டு வரும் விடயம் தான் இந்த கொரோனா என்னும் கொடிய நோய். நான் ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டிய அவசியம் அல்ல. நாங்கள் சமூக வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில் என்று பல ஊடகங்கள் ஊடக அறிந்த விடயமே.
தற்போது இலங்கையில் இதன் பாதிப்பு உட்சத்தை எட்டிய நிலையில் இருந்தாலும், இதனை முற்று முழுதாக இல்லாமல் ஒழிக்க வைத்தியர்களும், பாதுகாப்பு படையினரும், சில தனியார் நிறுவனங்களும் முழு மூச்சாக பல தியாகங்கள் செய்து நம் நாட்டு மக்களின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
நம் இலங்கை நாட்டினை பொறுத்த வரையில் ஒரு சிறிய கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என நாம் அறிவோம். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் என பல மதத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கொரோனா எனும் உயிர் கொல்லி நோய் நம் நாட்டு மக்கள் அனைவருக்குமே ஒரு மிகப் பெரிய சவாலாக தான் காணப்படுகின்றதே ஒழிய ஒரு தனி நபருக்கு மட்டும் சவாலாக அமையவில்லை. இதனை முற்றுமுழுதாக இல்லாமல் செய்து நாம் அனைவரும் வழமை போன்று நம் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதே அனைவரினதும் துஆ ஆக இருக்கின்றது.
நான் இக்கட்டுரையில் கூற வந்த விடயம் என்னவென்றால், இந்த நோயினை எவ்வாறு முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய முடியும் என்ற, என் மனதில் தோன்றிய சிறிய கருத்தை உங்களோடு பகிரவே இக்கட்டுரையை நான் எழுதுகின்றேன்.
நாம் அன்றாடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சாவல்களை எதிர்கொள்கின்றோம். பல அன்றாட தேவைகளை நிறைவு செய்ய பல வழிகளில் போராடுகின்றோம். ஆனால் நாம் வாழும் தாய் நாட்டிற்கே பிரச்சினை என்ற பொழுது நாம் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றோம். நம் நாடு வல்லரசு இல்லை தான். ஆனால் கல்வியில், வசதியில் ஏதோ நாம் பல நம்மை விட பின்தங்கிய நாட்டைவிட நம் முன்னணியிலே தான் இருக்கின்றோம். இதுவே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
இந்த கொரோனா நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அதன் விளைவினால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வந்த பல குடும்பங்களின் அழுகுரல்கள் இன்னும் சில நம் செவிகளுக்கு கேட்கப்படமலேயே உள்ளன. இந்த கால வரையறையற்ற ஊரடங்கு சட்டத்தினால் என்ன பயன்? என்ன செய்கிறார்கள்? என்ற பல விதமான கேள்விகளும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமே.
ஆம், உண்மையில் நாம் அனைவரும் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்? எல்லோருக்கும் ஒரு தடவையாவது கேள்வி எழுந்ததுண்டா? இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன? எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு முடங்கி கிடப்பது? இன்று சோற்றுக்கு என்ன செய்வது? பிள்ளைகளின் பசியினை எவ்வாறு போக்கப்போகின்றோம்? இப்படியான பதிலே இல்லாத கேள்விகள் அனைத்தும் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு ஏழையினதும் மனதில் அன்றாடம் எழும் கேள்வியாகும்.
நான் இந்த ஊரடங்கு சட்டம் பிழையான செயல் என்று கூறவில்லை. இந்த வரையறையற்ற ஊரடங்கு சட்டத்தினால் கொரோனாவினால் மக்கள் இறக்காவிட்டலும் பசியினால் பல உயிர்களை இழந்து விடுவமோ என்னும் அச்சத்தில் நானும் பல ஏழைகளும் உள்ளோம். இதற்கு என்ன தான் தீர்வு என்பதை தான் எனது அபிப்பிராயத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். முதலில் இந்த நோயினை இல்லாதொழிக்க எல்லோரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.
நாங்கள் பாடசாலையில் கற்ற அதே விடயத்தை தான் இங்கே பிரயோகிக்க இருக்கின்றோம். ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் பின்பற்றும் 4 செயற்பாடுகள் ஆகும். (பிரச்சினையை இனங்காணல், கருதுகோளை உருவாக்குதல், கருதுகோளை பரிசோதித்தல், முடிவுக்கு வரல்) என்னும் 4 முக்கிய செயற்பாடுகளை தான் இங்கே செய்ய போகின்றோம்.
முதலாவது பிரச்சினையை இனங்காணுதல். இந்த செயற்பாடு தான் ஆரம்ப கட்டமாக செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயமாக இருந்தாலும் பல சிக்கல்களை சந்திக்க நேரும் முதற்படி ஆகும். முதலில் இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்கு நான் யோசித்த உத்தியாக உதாரணத்திற்கு நம் நாட்டில் தேர்தல் நடைபெறும் போது கையாளும் உத்தியாக தமது பிரதேசித்தில் Blood Checking Booth களை நிறுவுதல். தமது கிராம சேவகர் பிரிவுகளாக பிரித்து, வைத்தியர், தாதிமார், இரத்த பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் உதவியினைக் கொண்டு அந்த பிரதேசத்தில் வாழும் அனைவரினதும் இரத்த மாதிரிகளை பரிசோதித்து அந்த பிரதேசத்தில் ஒரு Blood Checking Lab ஒன்றினை நிறுவி இரத்த மாதிரிகளை பரிசோதித்தல். இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும். ஒரு குடும்பத்தில் காணப்படும் அனைவைரின் நலனிற்காகவும், இந்த நாட்டின் நன்மைக்காகவும் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று அனைவருக்கும் இந்த செயற்திட்டத்தினை விளக்க வேண்டும். இதற்கு ஊடகங்களும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் கனிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அடுத்த கட்டமாக இரத்த மாதிரிகளின் ஊடாக நோயாளிகளை இலகுவாக இனம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்துதல்.
அவ்வாறு பரிசோதனை நடைபெறும் காலகட்டத்தில் முற்று முழுதாக அந்த ஊரினை முடக்கி வைத்திருத்தல், பரிசோதனையின் பிற்பாடு அந்த ஊரிட்குள் நுழைய முன்பாக இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அந்த ஊரிட்குள் அனுமதிக்கப்படுவார் என்ற தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த செயற்பாடுகள் இந்த நாட்டில் வாழும் அனைரின் உதவியை கொண்டு செயட்படுவோமாக இருந்தால் இந்த கொரோனா எனும் உயிர் கொல்லி நோயினை முற்று முழுதாக விரட்டியடித்து நம் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடர முடியும் என்று பிரார்த்திக்கிறேன் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.
இந்த பதிவினை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் மனதில் இது சம்பந்தமாக கேள்விகள் இருக்கும் எனில் இதனை விட வேறு உத்தியினால் இந்த நோயினை முற்றுமுழுதாக விரட்டியடிக்க உங்களால் முடிந்த கருத்துக்களை பகிரவும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தை அதிகம் Share செய்து உயர் மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு எனது கட்டுரையை முடித்துக்கொள்கின்றேன்.
இந்த செய்தி Forward செய்யப்பட்ட கருத்து அல்ல, என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றிகள்.