Jamiullafireen Vidyalaya Kattankudi

Jamiullafireen Vidyalaya Kattankudi Primary School

மட்/மம/ ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம் ZONAL LEVEL GRADE 05  BOYS CHAMPIONSHIP 2025--------------------------------------...
19/09/2025

மட்/மம/ ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம் ZONAL LEVEL GRADE 05 BOYS CHAMPIONSHIP 2025
-----------------------------------------------------------------

18.09.2025 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி - 2025 நிகழ்ச்சிகளில் வலய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது

அல்ஹம்துலில்லாஹ்,

தரம் 05 Boys- 1ம் இடம் (Provincial selected)

இவ்வெற்றியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் இவ்வெற்றிக்கு வழி வகுத்த அதிபர், ஆசிரியைகள் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

நடைபெற்று முடிந்த Kids  Athletic 2025 காத்தான்குடி பிரதேச மட்ட போட்டியில்தரம் 3 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும்,தரம் 5 மாண...
17/09/2025

நடைபெற்று முடிந்த Kids Athletic 2025 காத்தான்குடி பிரதேச மட்ட போட்டியில்
தரம் 3 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும்,
தரம் 5 மாணவர்கள் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதற்கு பயிற்சியளித்த அதிபர்,ஆசிரியைகள் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

அதிபர்,
மட்/மம/ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம்,
காத்தான்குடி.

20.08.2025 இல் நடைபெற்ற தாரிகுன் நபி போட்டி நிகழ்வுகளில் ஆரம்பப்பிரிவுக்கான அல்குர்ஆன் மனனப்போட்டியில் M.F.Zaith Ahamad ...
15/09/2025

20.08.2025 இல் நடைபெற்ற தாரிகுன் நபி போட்டி நிகழ்வுகளில் ஆரம்பப்பிரிவுக்கான அல்குர்ஆன் மனனப்போட்டியில் M.F.Zaith Ahamad இரண்டாம் இடத்தினைப் பெற்றார்.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு "மறுமலர்ச்சி நகரம்" எனும் தொனிப்பொருளில் நடாத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக நூதனசாலையை இலவ...
15/09/2025

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு "மறுமலர்ச்சி நகரம்" எனும் தொனிப்பொருளில் நடாத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக நூதனசாலையை இலவசமாக பார்வையிட 15.09.2025 இன்று திங்கட்கிழமை மட்/மம/ ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் சென்று பயன்பெற்றனர்.

மிகச்சிறந்த ஆளுமை காத்தான்குடி ஜாமீயுள்ளாபிறீன் வித்தியாலய ஆசிரியை சபீனா ஆயிஷா டீச்சர் ஓய்வு பெறுகின்றார்.==============...
09/09/2025

மிகச்சிறந்த ஆளுமை காத்தான்குடி
ஜாமீயுள்ளாபிறீன் வித்தியாலய ஆசிரியை சபீனா ஆயிஷா டீச்சர் ஓய்வு பெறுகின்றார்.
=============================
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் சமூகம், மாணவ சமூகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்வி சமூகத்தின் அன்புக்கு பாத்திரமான திருமதி சபீனா ஆயிஷா பதுர்தீன் ஆசிரியை அவர்கள் தனது 37 வருட ஆசிரியை எனும் மகத்தான சேவையிலிருந்து 10.09.2025 திகதியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

1988.08.22 இல் தனது முதல் நியமனம் கிடைத்து காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் ஒரு துடிப்புள்ள ஆசிரியையாக 1988 முதல் தனது கற்பித்தல் ஆற்றலினை சுமார் 14 ஆண்டுகள் திறம்பட சேவை செய்துள்ளார்.

அதன் பிற்பாடு இடமாற்றம் பெற்று காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில் 9 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

மீண்டும் அவர் காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்திற்கு
இடமாற்றம் பெற்று அங்கு 8 வருடங்கள் சேவையாற்றி வந்த நிலையில் இறுதியாக காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன்
வித்தியாலயத்தில் 6 வருடமும் 1 மாதமும் சிறப்பாக பணி செய்து அனைவரினதும் பாராட்டுக்களுடனும்,துஆ பிரார்த்தனையுடனும் தனது 37 வருடமும் 1 மாதம் என்ற காலத்தினை நிறைவு செய்து
SLTS-1 என்ற உயர்வுடன் தனது 60 வது வயதில் ஓய்வு பெறுகின்றார்.

முன்னாள் காத்தான்குடி கோட்டக் கல்விப் பனிப்பாளர் மர்ஹூம் அல்ஹாஜ் MACM.பதுர்தீன் sir அவர் களுடைய அன்பு மனைவியான இவர் நான்கு பிள்ளைகளின் தாயாவார்.

இவரின் இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருவர் வைத்தியர் என்பதுடன் மற்றயவர் இயன் மருத்துவருமாவார்.

ஆண் பிள்ளைகளில் ஒருவர் குடிசார் எந்திரவியல் துறையிலும் மற்றயவர் கல்விப் பொ.த.உ. தரம் கற்று வருகின்றார்.

மேலும் தனது 37 வருட சேவைக் காலத்தில் இவர் விடுமுறை பெறாது 20 வருடங்கள் பணியாற்றியுள்ளார் என அதிபர் தெரிவித்தார்.

அரசினால் வழங்கப்பட்டு வரும் "குரு பிரதீபா விருது" வழங்கி
கெளரவிக்கப்பட்ட ஒருவர் என்பதும் விசேட அம்சமாகும்.

இவரது 37 வருடகால சேவையின் பலனாக இவரிடம் கல்வி பயின்ற பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பலர் இன்று உயர் பதவிகளில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபீனா ஆயிஷா டீச்சர் மார்க்கப் பற்று, பேணுதல் உடையவர் என்பதுடன் அன்பு, பொறுமை, , கடமை நேரத்தினில் அமானிதமாக
நடத்தல் என்ற இன்னும் பல அம்சங்களுக்கு அவர்
உரித்தானவர் என பல ஆசிரியைகள் கூறும் சான்றாகும்.

"கற்றுக் கொடுப்பவனாக இரு" என்ற இஸ்லாத்தின் போதனைக்கேற்ப
சேவையிலிருந்து ஓய்வு பெறும் சபீனாஆயிஷா பதுர்தீன் டீச்சரின் கற்பித்தல் மற்றும் இதர செயற்பாடுகள் யாவும்
அதிசிறப்பாக இருந்து வந்ததாக காத்தான்குடி மட்/மம/ஜாமீயுள்ளாபிறீன் வித்தியாலய அதிபர் Mr.ALM.Farook நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும் சபீனா ஆயிஷா டீச்சரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய
பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் இதன் போது தெரிவித்துக் கொன்டார்.

(ஜசாக்குமுல்லாஹு ஹைறா)

(செய்தி :ஏ.ல்.டீன் பைரூஸ்
ஊடவியலாளர்)

http://www.lankanvoice.lk/2025/09/blog-post_19.html

மட்/மம/ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம்இம்முறை 2025 தரம் 5 புலமைப் பரீட்சையில் தகைமை பெற்றோர் விபரம்தரம் ஐந்து புலமைப் பரிச...
07/09/2025

மட்/மம/ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம்
இம்முறை 2025 தரம் 5 புலமைப் பரீட்சையில் தகைமை பெற்றோர் விபரம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை - 2025
முடிவுகள்

வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 13 (27%)

70 புள்ளிக்கு மேல் - 45 ( 92%)

100 புள்ளிகளுக்கு மேல் 29 (60%)

பரீட்சைக்கு தோற்றியோர் - 49
அதி கூடிய புள்ளி - 162

1) K.ABDULLAH AYAAN MISHARY - 162
2) MH.ZEENATHUL HIFSA - 154
3) SAM.YOOSUF- 150
4) MF.AAMIR -149
5)MA.MOHAMED AFHAM -148
6) MH.HAAMITH MUSARRAF -140
7)MS.YOOSUF SHURAIM -140
8) MA.ANEEK AHAMED-140
9) MN.NAHDHI ABDULLAH-139
10) MF.AINA-137
11) AA.SHEHZAD - 135
12) MN.AYSHA ZEENA - 134
13) A.MOHAMED ASMAL-133

கற்பித்த ஆசிரியர்கள்
1. திருமதி. SAM. பதுர்தீன்
2. திருமதி. SHM. நியாஸ்

2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம்  தவணைக்குரிய தேர்ச்சி அறிக்கைகள்  காலைக்கூட்டத்தில் 19.08.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
05/09/2025

2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய தேர்ச்சி அறிக்கைகள் காலைக்கூட்டத்தில் 19.08.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025கடந்த 2024 ஆம் ஆண்டு"புவி வெப்பமடைதலில் இருந்த...
05/09/2025

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025

கடந்த 2024 ஆம் ஆண்டு
"புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் " எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய 114 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முதலாவது நிகழ்வு காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் 01.08.2025 அன்று அதிபர் பாறூக் சேர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்றத்தின் ஸ்தாபக தலைவி ஜாஹிதா ஜலால்தீன் , கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் கலந்து சிறப்பித்தனர்.
Congratulations to all students who participated in the Art competition from Kattakudy Jamiullafreen Vidyalaya in 2024...

எமது பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. முப்லிஹா பிர்தவ்ஸீ அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு (கத்முல் குர்ஆன் வைபவம்) 31.07.202...
05/09/2025

எமது பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. முப்லிஹா பிர்தவ்ஸீ அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு (கத்முல் குர்ஆன் வைபவம்) 31.07.2025 அன்று வியாழக்கிழமை பி.ப 4.00 மணிக்கு பாடசாலை முற்றத்தில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எமது பாடசாலையில் பதினோராவது  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 04.06. 2025 அன்று பாடசாலை அதிபர் திரு. ஏ.எல்.எம் பா...
11/06/2025

எமது பாடசாலையில் பதினோராவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 04.06. 2025 அன்று பாடசாலை அதிபர் திரு. ஏ.எல்.எம் பாறூக் (B. Com) தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

அன்றைய தினம் முழங்கால் ஊன்றி பந்து எறிதல், நின்று நீளம் பாய்தல், கட்டம் பாய்தல், தடை தாண்டல், கயிறடித்தல், 50m× 4 ஓட்டம், 80m ஓட்டம் என்பன மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதற்கு உதவிய அதிபர்கள், பாடசாலை SDEC உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்குரிய தேர்ச்சி அறிக்கைகள்  காலைக்கூட்டத்தில் 23.05.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
09/06/2025

2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்குரிய தேர்ச்சி அறிக்கைகள் காலைக்கூட்டத்தில் 23.05.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

எமது பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் 2024ல் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிவர்களுக்...
31/01/2025

எமது பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் 2024ல் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 30/01/2025 அன்று இடம் பெற்றது.
அவற்றின் நிழற்படங்கள் சில

Address

Kattankudi 5
Kattankudi
30100

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiullafireen Vidyalaya Kattankudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category