Alighar Past Pupils Association

Alighar Past Pupils Association The most complete gift of God is a life based on Knowledge ���

 #25/02/2023 #நிதிக்குழுவினுடைய முதல் கட்ட செயற்பாடு..எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினுடைய நிதிக் குழுவானது கடந்த ...
06/03/2023

#25/02/2023

#நிதிக்குழுவினுடைய முதல் கட்ட செயற்பாடு..

எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினுடைய நிதிக் குழுவானது கடந்த 25/02/2023ம் திகதியன்று பாடசாலையின் இடைநிலை ( secondary) பிரிவின் சுற்றுப்புறச் சூழலினை சுத்தம் செய்கின்ற சிரமதானப் பணி சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த சிரமதான பணியில் எமது நிதிக்குழுவினுடைய அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 #23/02/2023 #கல்விக்குழுவினது முதல் கட்ட செயற்பாடு...எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினுடைய கல்விக் குழுவானது கடந்த...
06/03/2023

#23/02/2023

#கல்விக்குழுவினது முதல் கட்ட செயற்பாடு...

எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினுடைய கல்விக் குழுவானது கடந்த 23/02/2023ம் திகதியன்று பாடசாலையின் அதிபர் அவர்களை நேரடியாக சந்தித்து பாடசாலையில் மாணவர்களுக்கான கல்வி சார்ந்த செயல்பாடுகளை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடல் காலை 10.00 மணி தொடக்கம் பாடசாலையில் இடம் பெற்றது.

குறித்து கலந்துரையாடலில் அதிபர் அவர்களினால் இம்முறை GCE (O/L) பரீட்சை எழுத இருக்கின்ற மாணவர்களுடைய கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேசப்பட்டது.
அதிலும் குறிப்பாக அவர்களுக்கான பரீட்சையானது இவ்வருட ஏப்ரல் மாதத்தில் இடம்பெற இருப்பதினால் அவர்களுக்கு மிக முக்கியமான ஆறு பாடங்களில் சிறப்பான வளவாளர்களைக் கொண்டு கருத்தரங்குகளை மேற்கொள்ளுமாறும் அதனூடாக மாணவர்களின் பெறுபேற்றில் முன்னேற்றத்தினை அடைந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 #19/02/2023 #முதலாவது  #நிர்வாக  #சபைக்   #கூட்டம்...மேற்படி எமது பழைய மாணவர் சங்கத்தினுடைய முதலாவது நிர்வாக சபை கூட்டம...
06/03/2023

#19/02/2023

#முதலாவது #நிர்வாக #சபைக் #கூட்டம்...

மேற்படி எமது பழைய மாணவர் சங்கத்தினுடைய முதலாவது நிர்வாக சபை கூட்டமானது கடந்த 19/02/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பாடசாலை கட்டிடத்தில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் பாடசாலையினுடைய அபிவிருத்திகள் மற்றும் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் சம்பந்தமாகவும் மற்றும் பாடசாலையினுடைய பௌதிக வளங்கள் தொடர்பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் எமது நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் மிக முக்கிய #மூன்று பிரிவுகளின் கீழ் பிரிந்து அத்துறைகளில் எமது பாடசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய வழிமுறைகளை ஒன்றிணைந்து மேற்கொள்ளல் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டு மிக முக்கிய மூன்று பிரிவுகளும் மற்றும் அதன் உறுப்பினர்களும் பின்வருமாறு...

#நிதிக் குழு
1.PTM.MARJAN
2.AAM.FAWAS
3.SMM.MUNAWFAR
4.MBM.HISBULLAH
5.NM.MARSOON

#கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த குழு
1.AHM.AMANULLAH
2.IM.IBRAHIM (SIR)
3 .ALM.FIRTHOUS
4.AL.SAMSU SALAH
5.S.RAMEES
6.AIF.MARSAFA
7.M.ROSA RAHMATH
8.MIF.SABRIYA

#பௌதீக வளம் சார்ந்த குழு
1MMA.MUREETH
2.SMM.MUSTHANSIR
3.M.SIFAN
4.MIM.SIYAM
5.AL.SAINAMBU
6.MA.ASKIYA
7.AM.HILMIYA

 #12/02/2023 #பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் மற்றும் நிர்வாக சபை தெரிவு...மேற்படி எமது மட்/ மம/பாலமுனை அலிகார் மகாவித்தியா...
06/03/2023

#12/02/2023

#பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் மற்றும் நிர்வாக சபை தெரிவு...

மேற்படி எமது மட்/ மம/பாலமுனை அலிகார் மகாவித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய #பழைய மாணவர் சங்க நிர்வாக சபை தெரிவானது கடந்த 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணி அளவில் பாடசாலையின் அதிபர் அவர்களின் தலைமையின் கீழ் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... # #சினேகபூர்வமான சந்திப்பு நிகழ்வு # #எமது மட்/ மம/பாலமுனை அலிகார் ம...
06/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ...

# #சினேகபூர்வமான சந்திப்பு நிகழ்வு # #

எமது மட்/ மம/பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC) மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் (PPA) ஆகிய இரண்டுக்கும் இடையிலான சிநேகபூர்வமான கலந்துரையாடல் நிகழ்வானது இன்று 06/03/2023 திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் எமது பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பாடசாலையின் கல்வி , ஒழுக்கம் மற்றும் பௌதீக வளம் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

Address

Palamunai
Kattankudi

Telephone

+94774757187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alighar Past Pupils Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alighar Past Pupils Association:

Shortcuts

Share

Category