06/12/2024
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான்: 185)
எமது நண்பர்கள் குழுவில் இருந்து யூனானி வைத்தியர் Dr MFM சில்மி அவர்கள் கடந்த 2023.12.06ம் திகதி தனது MD (Unani)medicine கற்கை நெறிக்காக இந்தியாவில் உள்ள பெங்களூர் நகரத்தை நோக்கி பயணமானார்.
அவர் அடுத்த 3 வருடங்களில் தனது மேற்படிப்பை
NIUM, University of Raju gandhi, Bangalore ல் மேற்கொண்டு நாடு திரும்புவார் என எதிரார்த்திருந்தோம்.
தனது MD (Unani)medicine கற்கையை சிறப்பாக பூர்த்தி செய்து மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து அவரது மருத்துவ பணியை தொடர வேண்டும் என எதிர்பார்த்திருந்தோம்.
எம்மோடு ஒன்றாக பாடசாலை நாட்களில் கல்வி கற்று, கலந்து பேசி, விளையாடி, பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்று, மணவாழ்வில் இணைந்து பொறுப்புள்ள ஓர் கணவனாக, தந்தையாக, தாஇயாக, சமூக செயற்பாட்டாளராக வாழ்ந்த எமது நண்பன் Dr MFM சில்மி அவர்களின் மரணச் செய்தி நம் அனைவரையும் நேற்றிரவு தொடக்கம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டது.
நாம் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்பதை நமக்கு அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் அன்னாரது மறுமை வாழ்வை “ஜன்னதுல் பிர்தெளஸ்” எனும் சுவனத்தில் நிரந்தரமாக்கி வைப்பானாக.
அவரது மனைவி குழந்தைகளுக்கு பொறுமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக
ஆமீன்
கடந்த 2023 டிசம்பர் 4ம் திகதி எமது நண்பர்கள் குழாம் Dr MFM சில்மி அவர்களது வீட்டுக்கு சென்று, இந்தியாவின் பெங்களூர் நகருக்கு உயர்கல்வி கற்பதற்கு வழியனுப்பி வைத்த நிகழ்வும், குழுவாக எடுத்து கொண்ட போட்டோவும் நினவுகளுடனும், சோகத்துடனும் இன்றைய தினம் பகிர்ந்து கொள்கின்றோம். 😢