PPA Meera Balika National school Kattankudy

PPA Meera Balika National school Kattankudy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PPA Meera Balika National school Kattankudy, School, Main Street, Kattankudi.

16/09/2025

📌 அழைப்பிதழ்

*பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 2025*

பொதுச் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின்
பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் பின்வரும் விபரப்படி நடைபெற உள்ளது

●நேரம் :பி.ப 4.00
●காலம் :29.09.2025 திங்கட்கிழமை
●இடம் :கல்லூரியின் ஆராதனை மண்டபம
•தலைமை : அஷ் ஷேக் UL மன்சூர்
(ஷர்கி )- அதிபர்
🔹
நிகழ்ச்சி நிரல்
1. கிராஅத்
2. தலைமையுரை
3. சென்ற வருட கூட்டறிக்கை வாசிப்பு
4. கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

5. புதிய நிருவாகம் தெரிவு
6. நன்றியுரை

● எனவே, எங்கள் சங்கத்தின் அனைத்து பழைய மாணவர்களும்
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இவ்வண்ணம்,
தலைவர் – செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
கா.குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி

13/09/2025

📌 அழைப்பிதழ்

வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 29.09.2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின்
பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் 29.09.2025 திங்கட்கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு
கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

🔹 எனவே, சங்கத்தின் அனைத்து பழைய மாணவர்களும்
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இவ்வண்ணம்,
தலைவர் – செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
கா.குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி

Photos from PPA Meera Balika National school Kattankudy's post 01/11/2024

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் இணைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் 31.10.2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வு உப தலைவர் ஆசிரியை திருமதி ஜுஸ்லா ஹசீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திருமதி றிப்கா ஹனீஸ் ppa ன் செயற்பாடுகள் தொடர்பாக தனது கருத்துக்களை முன்வைத்தார். அதனை தொடர்ந்து ப.மா.சங்கத்தின் ஆலோசகர்கள் மனித உரிமை ஆணைக் குழுவின் கல்முனை பிராந்திய ஆணையாளர் அப்துல் அஸீஸ், பாடசாலையின் பிரதி அதிபர் ULMN முபீன் அவர்களும் எதிர்கால திட்டங்கள் பற்றி உரையாற்றினர்.

30/10/2024

ஜனாதிபதி பதக்கத்தினை வென்றது மட்/மம/ காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை

சுற்றால் முன்னோடி ஜனாதிபதி பதக்க பரீட்சையில் மட்/மம/ காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இருந்து ஐந்து மாணவிகள் சித்தியடைந்துள்ளார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.

நடைபெற்ற ஜனாதிபதி பதக்கத்திற்கான நேர்முகப் பரீட்சையில் எமது கல்லூரி மாணவிகள் 05 பேர் சித்தியடைந்து ஜனாதிபதி பதக்கத்தினை வென்றுள்ளனர்.

இவர்களுக்கு கல்லூரி சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 06 வருட காலமாக அவர்கள் எடுத்து வந்த பல்வேறு செயற்திட்டங்கள், ஆராய்ச்சிகள், சமர்ப்பணங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் மூலம் இந்த இமாலய அடைவினைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு உறுதுணையாகச் செயற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் மூலம் வழிப்படுத்திய சுற்றாடல் படையணியின் ஆசிரியர்களுக்கும் மேலும் பாடசாலைக்கு வெளியிலிருந்து பல்வேறு ஒத்துழைப்புகளையும், செயற்திட்டங்களையும் வழங்கி களமமைத்துக் கொடுத்த "Gogreen" - சுற்றாடல் தொண்டு நிருவனத்திற்கும் இந்த அடைவிற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட மத்திய சுற்றாடல் சபையின் அதிகாரி (காத்தான்குடி பிரதேச செயலகம்) திருமதி பாஸ்கரன் அவர்களுக்கும் கல்லூரி சார்பாகவும் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் இந்த பதக்கத்தை பெறுவதற்கு மகரகம பயிற்சி பாசறைக்கு அழைத்துச்சென்ற சொப்னா Tr, இவர்களது project ஐ முற்று முழுதாக முடிப்பதற்கு சகல வழிகளிலும் உதவிய ராகினி Tr மற்றும் ரஜனி பாஸ்கரன் ( மத்திய சுற்றாடல் அதிகார சபை,பாடசாலைக்கு பொறுப்பானவர்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை சுற்றாடல் படையணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்

இப் பாடசாலை அதிபர் அவர்களுக்கும் பொறுப்பான ஆசிரியைகளுக்கும் எமது வலயம் சார்பான நன்றிகளையும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
மட்/மம/ காத்தான்குடி மீரா பலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி.

22/10/2024

மீரா பாலிகா தேசிய பாடசாலையில் க.பொ .த உயர் தர பரீட்சைக்கு இவ் வருடம் தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றினை உயர்த்தும் நோக்கில் பழைய மாணவர் சங்கத்தினால் விசேட செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வு 29.09.2024 ஆரம்பித்து 5 நாட்கள் இடம்பெற்றது. பிரதான ஐந்து பாடங்களுக்கான இச் செயலமர்வில்
கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலகுவாக விளங்கக் கூடிய வகையில் சிறந்த முறையில் வளவாளர்கள் விரிவுரையாற்றினார்கள்.
இச் செயலமர்வினை நடத்துவதற்கு அனுமதி வழங்கி ஒத்துழைப்பு நல்கிய கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்களுக்கு பழைய மாணவர் சங்கம் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது

22.10.2024
Ppa Meera Balika

Photos from PPA Meera Balika National school Kattankudy's post 17/10/2024

மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத் தராதர சா.த.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 16.10.2024 புதன் கிழமை மீரா பாலிகா தேசிய பாடசாலையில், கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் UL மன்சூர் ஷர்கி SLPS அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் 9A பெறுபேறுகளைப் பெற்ற 26 மாணவிகள், 8A பெறுபேறுகளைப் பெற்ற 13 மாணவிகள், 7A பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவிகள் பெற்றோர்களின் கரங்களால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்

பழைய மாணவர் சங்கம்
மீரா பாலிகா தேசிய பாடசாலை

29/09/2024

Congratulations to our students

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், உயர்தரத்திற்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களையும் மனமுவந்து வாழ்த்துகிறோம் உங்கள் கல்விப் பயணத்தில் மென்மேலும் பல சாதனைகள் அடைவுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்

Ppa Meera Balika

14/09/2024

Dear students,
May Almighty give you strength and courage to do your scholarship exam without any difficulties.

Best of luck for your examination

Ppa Meera Balika

16/06/2024

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்,

தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் தியாக திருநாள் வாழ்த்துக்கள்!!.✨

Eid-ul-Adha Mubarak to all

13/06/2024

பல்கலைக்கழகம் தெரிவிற்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு (2023/2024)

Save For Next Generation Inc. சமூக சேவை நிறுவனம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரியுடன் இணைந்து 2023 உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான UGC handbook மற்றும் Z Score அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பது தொடர்பான இலவச கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

காலம் : 15.06.2024 (சனிக்கிழமை)
நேரம் : காலை 8:30 மணி - 12:30 மணி வரை
இடம் : காத்தான்குடி மத்திய கல்லூரி (பரீட் மண்டபம்)

எனவே இம்முறை உயர்தர பரீட்சை முடிவுகளைப் பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்வதுடன், இவ் வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு வருகை தருவதை உறுதி செய்து கொள்ள பின்வரும் Google form இனை பூரணப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

https://forms.gle/hS8KC77jmuya3J5m6

குறிப்பு:- மாணவர் ஒருவருடன் ஒரு பெற்றாரும் கலந்து கொள்ளலாம்.

Photos from PPA Meera Balika National school Kattankudy's post 07/06/2024

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 07.06.2024 வெள்ளிக் கிழமை மீரா பாலிகா தேசிய பாடசாலையில், கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் UL மன்சூர் ஷர்கி SLPS அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் MA அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் MM ஜவாத் நழீமி SLEAS அவர்களும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர் MHM றமீஸ் SLEAS அவர்களும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM ஹக்கீம் SLEAS அவர்களும் கலந்து கொண்டனர். விசேட அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழுவின் கௌரவ செயலாளர் ஜனாப் M. ஹம்தூன் , பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திருமதி றிப்கா ஹனீஸ் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான அனைத்து மாணவர்களும் பெற்றோர்களின் கரங்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் MA அவர்கள் தனது உரையின் போது , இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவில் மாபெரும் சாதனை படைத்தமைக்காக இப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், மற்றும் மாணவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் MM ஜவாத் நழீமி SLEAS அவர்கள் தனது உரையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டியதோடு
எதிர்வரும் வருடங்களில் இவ்வாறான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பழைய மாணவர் சங்கம்
மீரா பாலிகா தேசிய பாடசாலை

01/06/2024

இம் முறை க.பொ.த. (உ.த)பரீட்சையில் அதி சித்திபெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எமது மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பழைய மாணவர் சங்கம்
மீரா பாலிகா தேசிய பாடசாலை

Want your school to be the top-listed School/college in Kattankudi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Main Street
Kattankudi
30100