J/Yarlton College - Karainagar

J/Yarlton College - Karainagar தீவக வலயத்தின் முன்ணணிப் பாடசாலை

இது 1AB பாடசாலை ஆகும். தரம் 1முதல் 13 வரையான வகுப்புக்கள் உள்ளது. உயர்தரத்தில் கலை, வர்த்தகம், கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகள் கற்பிக்கப்படுகிறது.

27/05/2026

Application for B Ed Degree at National College of Education on Technology 2026
https://1teachmore.lk/national-college-of-education-on-technology-2026/

2024 ර්වෂයට අදාළ අ.පො.ස.(උ/පෙළ) ප්‍රතිඵල මත ශික්ෂණලාභීන් කුලියාපිටිය, තාක්ෂණවේදී ජාතික අධ්‍යාපන විද්‍යාපීඨයට ඇතුළත් කර ගැනීම - 2026

2024 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரிய பயிலுநர்களை குளியாப்பிட்டிய, தொழில்நுட்பவியலுக்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அனுமதித்தல் -2026

- Total Intake - 210
- Medium - English
- Duration - 4 Years

Closing Date 10.06.2026

27/05/2026

இன்றைய தினம் தரம் 08 - 13 வரையான மாணவர்களும் தரம் 11 - 13 வரையான மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து எமது ஆரம்பப்பிவில் ( கோவிந்தர் பள்ளிக்கூடம்) " எமக்கான சூழலை நாமே சுத்தமாகப்பேணுவோம்" எனும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். எமது பள்ளியின் சின்னஞ்சிறார்களுக்கான பாதுகாப்பானதும் சுத்தமானதுமான சூழலை வழங்குவதற்காக அர்பணிப்புடனும் விருப்புடனும் செயற்பட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்🙏

காரைநகரைச் சேர்ந்த திரு.அருள்முகன் சாய்பாபா அவர்கள் எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் காரை மகா வித்தியாலயத்தின் முன...
27/05/2026

காரைநகரைச் சேர்ந்த திரு.அருள்முகன் சாய்பாபா அவர்கள் எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் காரை மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபரும் தனது தாயாருமாகிய திருமதி. சிவயோகம் விஜயரத்தினம் ஞாபகார்த்தமாக சில்வரிலால் ஆன கொடிக்கம்பம் ஒன்றையும் விளையாட்டு உபகரனங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவருக்கு எமது கல்லூரி சமூகம் சார்பாக நன்றிகள்🙏

எமது பாடசாலையின் தரம் 08,09 மாணவர்களுக்கான வானியல் பாசறை நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00...
25/05/2026

எமது பாடசாலையின் தரம் 08,09 மாணவர்களுக்கான வானியல் பாசறை நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரை நடைபெற்றது. இதில் வளவாளராக கலந்துகொண்டு, சிறப்பான முறையில் மாணவர்களை நெறிப்படுத்திய திரு. இரத்தினசிங்கம் அவர்களுக்கும் நிகழ்வை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தியிருந்த ஆசிரியர்களுக்கும் உதவி புரிந்த உயர்தர கணித,விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கும் நன்றிகள்

சித்திரைச் சதய நன்னாளில் சிவபேறடைந்த சமயகுரவர் திருநாவுக்கரசரது குருபூசை நன்னாளில் கல்லூரியின் அழைப்பை ஏற்று வருகைதந்து ...
14/05/2026

சித்திரைச் சதய நன்னாளில் சிவபேறடைந்த சமயகுரவர் திருநாவுக்கரசரது குருபூசை நன்னாளில் கல்லூரியின் அழைப்பை ஏற்று வருகைதந்து திருநாவுக்கரசு நாயனார் பற்றி சிறப்புரை ஆற்றியிருந்த காரைநகர் சிவகாமி அறநெறிப் பாடசாலை ஆசிரியர் திருமதி. கோ.மகிழினி அவர்களுக்கு எமது நன்றிகள்

கல்லூரியின் பழைய மாணவி திருமதி கலா யோகானந்தன் அவர்கள் தமது பேர்த்திகள் செல்வி. மியா அசந்தி சுப்பிரமணியம், செல்வி. நேகா ந...
14/05/2026

கல்லூரியின் பழைய மாணவி திருமதி கலா யோகானந்தன் அவர்கள் தமது பேர்த்திகள் செல்வி. மியா அசந்தி சுப்பிரமணியம், செல்வி. நேகா நாகேஸ்வரன் ஆகியோர் பிறந்த தினத்தை முன்னிட்டு தரம் 01 மாணவர்களுக்கான தைத்த சீருடைகள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கடந்தகால வினா - விடைத் தொகுப்பு புத்தகங்கள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். அவருக்கு கல்லூரி சமூகம் சார்பாக நன்றிகள்

காரைநகர் கோட்டத்துக்குட்பட்ட தரம் 5 இல் கல்விகற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்களு...
12/05/2026

காரைநகர் கோட்டத்துக்குட்பட்ட தரம் 5 இல் கல்விகற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பு தீவக வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் கடந்த வாரம் இடம்பெற்றது. தீவக வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.A. யோகலிங்கம் அவர்களது தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

எமது பாடசாலையில் செயற்பட்டு வரும் வன்பந்து துடுப்பாட்ட அணிச் செயற்பாடுகளுக்காக வன்பந்துகள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிர...
12/05/2026

எமது பாடசாலையில் செயற்பட்டு வரும் வன்பந்து துடுப்பாட்ட அணிச் செயற்பாடுகளுக்காக வன்பந்துகள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான துடுப்பாட்ட அணிச் சீருடை என்பவற்றை அன்பளிப்புச் செய்த திரு. கஜினி சீலன் அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

எமது பாடசாலையில் இதுவரை காலமும் பணியாற்றி சேவையின் நிமித்தம் மாற்றலாகி வேறுபாடசாலைகளுக்கு சென்றிருக்கின்ற ஆசிரியர்களுக்க...
11/05/2026

எமது பாடசாலையில் இதுவரை காலமும் பணியாற்றி சேவையின் நிமித்தம் மாற்றலாகி வேறுபாடசாலைகளுக்கு சென்றிருக்கின்ற ஆசிரியர்களுக்கான பிரிவுபசார நிகழ்வானது நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றிருந்தது. இதில் கலந்து சிறப்பித்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.

கடல்நீர் சுத்திகரிப்பின் மூலம் யாழ்ப்பாணத்து குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை...
11/05/2026

கடல்நீர் சுத்திகரிப்பின் மூலம் யாழ்ப்பாணத்து குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் இணைப்புகளின் வரிசையில் காரைநகர் பிரதேசத்துக்கான குடிநீர் வழங்கலானது எமது பாடசாலைக்கும் வழங்கிவைக்கப்பட்டது. இதனை விரைந்து செயற்படுத்தியிருந்த காரைநகர் நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களுக்கு எமது நன்றிகள்.

Address

Alady
Karainagar

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

0212225357

Alerts

Be the first to know and let us send you an email when J/Yarlton College - Karainagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J/Yarlton College - Karainagar:

Shortcuts

Share

Category