24/03/2023
பிரியாவிடை பாடல்வரிகள்
பிரிவின் வலியால் கண்ணீரில் நனைந்த ஹகீமிய்யா...
https://youtu.be/KHRcOQnK7IY
https://youtu.be/KHRcOQnK7IY
ஒவ்வொரு வருடமும் எமது கல்லூரியில் இருந்து எம் பாசம் நிரைந்த பண்பான மாணவர்கள்
பட்டம் பெற்று நம்மைவிட்டு பிரிந்து செல்லும்போது....
ஒரு தாய் பாசமான தன் அன்பு க்குழந்தையை பிரியும் போது என்ன வலிகளை அவள் உணர்கிறாளோ அதே போன்ற வலிகளை உஸ்தாத்மார்களான நாங்களும் உணர்கின்றோம். அல்லாஹ்வுக்காக வேண்டி பெற்றோர்களை பிரிந்து அவனது தூய தீனை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எம் கரம் பிடித்த மாணவர்களின் பிரிவுத்துயர் எங்கள் அனைவரினதும் நெஞ்சை நெருடுகின்றது.
மாணவர்களாக வந்து ஆலிம்களாக ஹாபிழ்களாக பட்டம் பெற்று விடைபெறும் வேலையில் அவர்கள் மனமுறுகி கூறும் பிரியாவிடை வார்த்தைகளும் ,கண்கலங்கும் கவிதை வரிகளும் மனதை வாட்டுகின்றது. உண்மையில் பணிவோடு பண்போடு ஒழுக்கத்தை கடைபிடித்து தீனின் ஒளியை தம் நெஞ்சில் சுமந்தவர்களாக பாரில் பணிபுரிய தம்மை ஆயத்தப்படுத்தும் உன்னத காலமே கல்லூரிக்காலம். வாலிப வயது, மாணவப் பருவம், வாலிபக் கனவுகள், அதே வயதில் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும் அவர்களுடைய நண்பர்கள், உறவுகள், என ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் அவர்கள் அல்லாஹ்வுக்காக வேண்டி பொறுமையுடன் புனித அல்குர்ஆனின் நிழலில் கற்று வெளியாகுவது மிகப்பெரும் ஒரு சாதனையாகும்.
பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்கள் சிறுவயதில்
கல்லூரியில் இணையும் பொழுது பெற்றோர்களைஆரத்தழுவி கண்ணீர் வடித்தார்கள். தாய் தந்தையும் அழுது கொண்டே எம்மிடம் விட்டுசென்றார்கள்.பட்டம பெற்று
பிரியும் பொழுதும் அம்மாணவர்கள் மரியாதைக்குறிய எம் பாசம் நிரைந்த ஆசான்களை விட்டுபிரிகிறோம் என கண்ணீர் சிந்துகிறார்கள். ஆசான்களும் அழுதவர்களாகவே பிரியாவிடை கொடுக்கின்றார்கள்.
இவைகள் உண்மையான உறவின் அடையாளங்கள். அல்லாஹுவுக்காக சேர்ந்தோம் அல்லாஹ்வுக்காக பிரிகிறோம்.
தாய் தந்தையரின் அரவணைப்பை விட்டும் தூரமாகி ஆசான்களின் கரம் பிடித்த மாணவர்கள் ஆலிம்களாக செல்லும் பொழுது பெற்றவர்களும் மற்றவர்களும் ஆனந்தக் கண்ணீரோடு பூரிப்பு அடைவது எமது அடைவுகளில் ஒன்றாகும்.
அல்ஹம்துலில்லாஹ்
யா அல்லாஹ் எமது மாணவப்பிள்ளைகளால் கண் குளிர்ச்சியை தருவாயாக. எமது முயற்சிகளை கபூல் செய்து அவர்களைப் பணிவுள்ள இறையச்சம் கொண்ட சிறந்த ஆலிம்களாக இப்பாரில் பணிபுரிய அருள் புரிவாயாக.
ஆமீன்
இஸ்லாமிய ஊழியன்
ஹிதாயதுல்லாஹ் ரzஸீன்
2023/03/23