Jamaliya Muslim Maha Vidyalaya Batagolladeniya

Jamaliya Muslim Maha Vidyalaya Batagolladeniya LEAD THE CHILDREN TO LEADE THE NATION
சிறுவர்களை நெறிப்படுத்தி நாட்டை நெறிப்படுத்துவோம்.

கல்ஹின்னை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் சகோதர பாடசாலையான கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் கெளரவ அதிபர் AMM Safarulkhan ...
04/11/2025

கல்ஹின்னை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் சகோதர பாடசாலையான கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் கெளரவ அதிபர் AMM Safarulkhan அவர்கள் இருபாடசாலைகளுக்குமிடையில் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் செவ்வாய் கிழமை (04.11.2025) எமது பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது பாடசாலை நிர்வாகம் அவருடன் விஷேட கலந்துரையாடலை நடாத்தியது டன்
காலை ஆராதனை நிகழ்வில் மாணவர்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார்.

மேலும் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் மாணவத் தலைவர்களுக்கு தலைமைத்துவம் தொடர்பாக வழிகாட்டினார்.

இந்நிகழ்வில் Y-Galhinna அமைப்பின் தலைவர் ஜனாப் km Mafas அவர்களும் கலந்து கொண்டார்.

இச்சந்திப்பை ஏற்படுத்தி தந்த Y-Galhinna அமைப்பிற்கும் அல்மனார் தேசிய பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார போட்டியில் தேசிய மட்டத்தில் கிராஅத் நிகழ்ச்சியில் 2ம் இடத்தைப் பெற்ற...
01/11/2025

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார போட்டியில் தேசிய மட்டத்தில்

கிராஅத் நிகழ்ச்சியில் 2ம் இடத்தைப் பெற்று மத்திய மாகாணம்,கண்டி மாவட்டம் மற்றும் கட்டுகஸ்தோட்ட வலயத்திற்கு மட்டுமல்ல பாடசாலையின் நற்பெயருக்கு பெருமை சேர்த்த மாணவி Fathima shifan அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

இவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Jazakallahu hairan.......................................

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்..........................2024/2025ம் கல்விய...
24/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்..........................

2024/2025ம் கல்வியாண்டில் சாதனையாளர்ளையும் வெற்றி மகுடம் சூடிய மாணவ மாணவிகள் ஆசிரியர்களை கெளரவிக்கும் மாபெரும் பரிசளிப்பு விழா கல்லூரியின் கெளரவ அதிபர் AAM Ikram தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்..............

புலமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள்
க.பொ.த (சா/த) தரம் மற்றும் (உ/த) பரீட்சையின் வெற்றியாளர்கள்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி அனுமதி பெற்ற மாணவர்கள்.
வலய மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பாடசாலைக்கு புகழ் தேடித் தந்த மாணவர்கள்
பாடங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்த ஆசிரியர்கள்.

பாடசாலை மட்டத்தில் சாதனை படைத்தவர்கள் என பலர் கெளரவிக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் எங்களில் ஒருவர் பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஹுசைன் சேர் அவர்களின் புதல்வர் கலாநிதி Rishard Hussain அவர்கள்.

மேலும் அன்றைய நாள் சாதனை மகுடம் சூடிய மாணவர்கள் பிரதம அதிதி ஆகியோர் பேன்ட் வாத்திய மரியாதை அணிவகுப்பு மூலமாக பாடசாலை முன்றலில் இருந்து பாடசாலை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிகழ்வில் வெற்றி மகுடம் சூடிய மாணவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலை சமூகம்.............

With Kekunagolla National School – I just got recognised as one of their top fans! 🎉
23/10/2025

With Kekunagolla National School – I just got recognised as one of their top fans! 🎉

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்..........................2025ம் கல்வியாண்டி...
23/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்..........................

2025ம் கல்வியாண்டில் சாதனையாளர்ளையும் வெற்றி மகுடம் சூடிய மாணவ மாணவிகள் ஆசிரியர்களை கெளரவிக்கும் மாபெரும் பரிசளிப்பு விழா.

இந்நிகழ்வில்..............

புலமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள்
க.பொ.த (சா/த) தரம் மற்றும் (உ/த) பரீட்சையின் வெற்றியாளர்கள்.
வலய மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பாடசாலைக்கு புகழ் தேடித் தந்த மாணவர்கள்
பாடங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்த ஆசிரியர்கள்.

பாடசாலை மட்டத்தில் சாதனை படைத்தவர்கள் என பலர் கெளரவிக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார் எங்களில் ஒருவர் பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஹுசைன் சேர் அவர்களின் புதல்வர் கலாநிதி Rishard Hussain அவர்கள்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்பாய் அழைக்கின்றோம்.

பாடசாலை சமூகம்.............

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்.....................மத்திய மாகாண இஸ்லாமிய க...
13/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்.....................

மத்திய மாகாண இஸ்லாமிய கலாச்சார போட்டியில் கிராஅத் நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவி செல்வி Fathima Shifan முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்........................................

12/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்...............

எமது கல்லூரியின் 2025ம் வருட ஆசிரியர் தின நிகழ்வுகளில் பேண்ட் வாத்திய முழக்கத்துடன் ஆசிரியர்கள் விழா மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி

47வருட கல்லூரியின் வரலாற்றில் அர்ப்பணிப்புடனும் தூய எண்ணத்துடனும் ஆசிரியர் பணியை செய்த சகல அதிபர் ஆசிரிய நல்லுள்ளங்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

யா அல்லாஹ் அவர்களுக்கு ஈருலகிலும் மேலான நற்பாக்கியங்களை வழங்குவாயாக.

ஆமீன்............................

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில் 2025 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வு...
12/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில் 2025 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வுகள்.

எமது கல்லூரியின் மாணவத்தலைவர்களினால் தொடர்ச்சியாக 26வது வருடமாகவும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த 09.10.2025 வியாழக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்களின் பேன்ட் வாத்திய மரியாதை அணிவகுப்பு மூலமாக பிரதான மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெற்று மாணவர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இதனை ஏற்பாடு செய்த மாணவத்தலைவர்கள் குழுவிற்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்...............................................
08/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்............................................

கட்டுகஸ்தோட்டை வலய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற 13 நிகழ்ச்சிகளில் 4 முதலிடங்களைப் பெற்று மத்திய மாகாணப் போட்டிகளில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவச்செல்வங்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்.......................அண்மையில் நடைபெற்ற மத...
02/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவின் வெற்றிப் பயணத்தில்.......................

அண்மையில் நடைபெற்ற மத்திய மாகாண மீலாத் தின போட்டிகளில் எமது கல்லூரியை சேர்ந்த மாணவிசெல்வி Fathima shifan ஹிப்லுழ் குர்ஆன் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மாணவன் செல்வன் Umar Safarullah ஹிப்லுழ் குர்ஆன் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இருவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Congratulations for Provincial Meelad un Nabi Competition winners🏆2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. கல்வி அமைச்சின் வழ...
02/10/2025

பொன் விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஜமாலியாவில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைவாக மாணவர்களின் உலக சிறுவர் தின நிகழ்வுகள் ' உலகினை வழிநடாத்த அன்பால் போசியுங்கள் ' எனும் தொனிப் பொருளில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Junior JPL Cricket Tournament Season - 04 🏏🏏🏏🏏🏏🏏🏏🏏எமது கல்லூரியின் ஆண் மாணவர்களுக்கான  கிரிக்கெட் சுற்றுப் போட்டி JJPL -...
24/09/2025

Junior JPL Cricket Tournament
Season - 04
🏏🏏🏏🏏🏏🏏🏏🏏

எமது கல்லூரியின் ஆண் மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி JJPL - Jamaliya junior premier league (Season -04) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக வேண்டி ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🎾🥎🎾🥎🎾🥎🎾🥎

Address

Batagolladeniya Galhinna
Kandy
20154

Opening Hours

Monday 19:00 - 15:00
Tuesday 19:00 - 15:00
Wednesday 19:00 - 15:00
Thursday 19:00 - 15:00
Friday 19:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaliya Muslim Maha Vidyalaya Batagolladeniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category