22/12/2022
பாடசாலை பரிசளிப்பு வைபவம்
எமது பாடசாலையில் கடந்த வாரம் ஆரம்பமான இரண்டாம் தவணை பரீட்சைகள் திங்கட்கிழமை நிறைவடைந்தது. இதில் சிறந்த பெறுபெறுகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசு வழங்கும் வைபவம் இன்று பாடசாலையின் அதிபர் திரு AMM. சப்ருல்கான் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பங்கு பற்றலோடு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நடைபெற்று முடிந்த பரீட்சையில் 75 வீதத்துக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 43 மாணவ, மாணவிகள், மற்றும் வகுப்பு ரீதியாக முதல் 3 நிலைகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இப்பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் முதல் 3 இடங்களை பின்வரும் மாணவிகள் பெற்றனர்.
1. MM.அன்ஹா (89.4)
தரம் 11C
2. MI. ஜுமானியா (89.0)
தரம் 12
3. MR. ரீஹா (88.0)
தரம் 07 C
தகவல்
MM. மபாஹிர் VP
Exams Unit
க/அல் மனார் தேசிய பாடசாலை
கல்ஹின்னை.