31/03/2026
#வளர்பிறை #சஞ்சிகை #வெளியீடு
==============================
எமது பாடசாலையின் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களின் இலக்கியத் திறனை வெளிப்படுத்தும் விதமான ஆக்கங்களை சுமந்து வரும் முதல் சஞ்சிகையாக "வளர்பிறை" சஞ்சிகை 2026.03.26 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அதிபர் திரு. A.G.A . ஹபீழ் அவர்களின் தலைமையின் சஞ்சிகை வெளியீட்டு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் விமரிசையாக இடம்பெற்றது.
தெல்தோட்டை மனால் ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. M.L.M.நதீர் அவர்கள் சஞ்சிகை வெளியீட்டிற்கான பிரதான அனுசரணை வழங்கியதோடு நிகழ்வின் பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஆசிரிய கல்வியியலாளர் மற்றும் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திரு. M.A.C.M. நவ்சாத் அவர்கள் சஞ்சிகை வெளியீட்டுக்கான வாழ்த்துரை நிகழ்த்தியிருந்தார். வாழ்த்துரையில் எமது பாடசாலையின் ஆரம்ப கால சஞ்சிகையான " #சுனை" சஞ்சிகை கையெழுத்துப்பிரதியாக வெளியிடப்பட்ட வரலாற்றுத் தடங்களை மீட்டியமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் கண்டி வலயக்கல்வி காரியாலயம் சார்பாக ஆரம்பப்பிரிவு வளவாளர் திரு. S.சபாரத்தினம் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சஞ்சிகை வெளியீட்டின் வெற்றியில் ஆணி வேராய் மறைந்திருக்கும் பாடசாலையின் சகல ஆசிரியர்களதும் அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் தமது கடமை நேரத்தையும் விஞ்சிய பணிகள் இவ்விடம் விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியவை.
இப்பணியை சிறக்கச் செய்த ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கான பாடசாலை நிழற்படத்தினை வடிவமைத்த பாடசாலை முந்நாள் ஆசிரியை திருமதி S.F.ஸர்மிளா ஆசிரியை அவர்களுக்கு சஞ்சிகை குழு சார்பாக நன்றி தெரிவிக்கின்றோம்.
சஞ்சிகை வெளியீட்டிற்கு சகல வழிகளிலும் பங்களிப்பு வழங்கிய பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சகலரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
எதிர்வரும் காலங்களில் வளர்பிறை சஞ்சிகை மென்மேலும் சிறப்புடன் தொடர்சஞ்சிகையாக வெளிவரவும், எமது மாணவர்களின் இலக்கிய ஆற்றல் வெளிப்படும் சிறந்த ஒரு தளமாக அமையவும் வாழ்த்துக்கள்.