Shaping Lives

Shaping Lives

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaping Lives, Educational consultant, Kandy.

04/02/2026

Happy 78th Independence Day

This land , this flag , this freedom - we celebrate it with love , unity , and pride.

~
Shaping Lives
Center for Life Skills

27/01/2026

Shaping Lives: Centre for Life Skills வழங்கும்,

🌟 Certificate in Psychology Exclusive Course for After OL's, AL's and School Leavers

🔖 3 மாத கால விசேட பாடநெறி | அறிமுக நிகழ்வு

✴️ உளவியல் உலகில் நீங்களும் சாதிக்க விருப்பமா? அதற்கான முதல் படி இது! உங்கள் கனவுக்கு ஒரு கைகொடுப்பு...

🗣️ வளவாளர்:
Ms. Shazna Shadiqeen
(B.A (Hons)., M.Sc (Rd)., Psychological Counselor, Motivational Speaker)

🗓️ காலம் : சனிக்கிழமை (31.01.2026)
🕰️ நேரம் : மாலை 4.00 மணிக்கு
📲 மூலம் : நிகழ்நிலை வழி (Zoom App)

🔅 மூன்று மாத கால உளவியற் நெறியானது 10 பெறுமதி வாய்ந்த தலைப்புக்களின் கீழ் நடைபெறும்.
அவையாவன:

1. Introduction to Psychology
2. Child Psychology
3. Counselling Psychology
4. Social Psychology
5. Educational Psychology
6. Personality
7. Abnormal Psychology
8. Hypnosis
9. Clinical Psychology
10. Symptoms Classification & Diagnosis

✴️ உளவியற் துறையில் சாதிக்க உங்களுக்கு ஒரு அருய சந்தர்ப்பம் இது! வாய்ப்பை தவறவிடாதீர்கள்...

📞 முன்பதிவுகளுக்கு:
077 211 9992 — Ms. Amna Amani (Course Coordinator)

🥏 Shaping Lives WhatsApp குழுமத்தில் இணைய:
https://chat.whatsapp.com/BQmuOb5QanU2H4refefxgw?mode=wwt

✴️ உளவியல் அறிவு என்பது சமகாலத்தில் அனைவருக்கும் அவசியமானது. தரமான விரிவுரை மூலம் அதனை தெளிவாக பயில இன்றே எம்மோடு கைகோருங்கள்.

~
Shaping Lives
Centre for Life Skills

27/01/2026

மனம் மீளும் நேரம் - தொடர் 11
=============
✒️ அம்னா அஸ்வர் (ஊக்குவிப்புப் பயிற்றுநர்: சேப்பிங் லைவ்ஸ், வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனம்)

இறைவன் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே.
நாம் ஒவ்வொருவரும் இறைவனால் படைக்கப்பட்ட தனித்துவமான படைப்புக்கள் என்ற உண்மையை நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களை மதிப்பதென்பது பெரியதொரு காரியம் அல்ல. ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கான அடிப்படையே மரியாதை செலுத்துவதாகும். நாம் ஒருவரை எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் எமது நற்பண்பும் மனப்பக்குவமும் வெளிப்படுகிறது. அன்புடன் பேசும் வார்த்தைகள், மரியாதையுடன் செய்யும் செயல்கள் தான் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றுவதற்கு காரணமாக அமைகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான ஒரு நிலை காணப்படுகிறது. அந்த நிலையைப் புரிந்து கொண்டு உரிய மரியாதையை வழங்குவது தான் உண்மையான மனிதநேயமாகும். குறிப்பாக மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பது என்பது மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் ஒரு பண்பாக காணப்படுகிறது. மரியாதை இருக்கும் இடத்தில் தான் அறிவு மலர்கிறது; ஒழுக்கம் வளர்கிறது; வெற்றி உருவாகிறது.

ஒருவருக்கு மரியாதை அளிப்பதென்பது கடினமானதொரு விடயமல்ல. ஆனால் மரியாதை இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கையை கடினமாக்குகிறது. மனிதன் சமூகத்தில் உயர்ந்து நிற்பதற்கு அவனுடைய பதவியோ, செல்வமோ காரணமல்ல.அவன் காட்டும் மரியாதை உணர்வே அவனை உயர்த்துகிறது.
பகுத்தறிவுடன் சிந்திக்கும் மனிதன் மரியாதையுடன் நடப்பது மிகவும் அவசியம். நாம் ஒவ்வொருவரும் அன்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கு பழகிக் கொள்வோம்.அதுவே நம்மையும் நம் வாழ்க்கையையும் உயர்த்தும் அழகான பாதையாகும்.

(மனம் மீளும்...)

27/01/2026

Shaping Lives வழங்கும்,
🌟 *English Express | 6 Months Certificate Course*
(After O/L & After A/L Students)

🛑 O/L & A/L முடித்த மாணவர்கள் கவனத்திற்கு!

✴️ உங்கள் உயர் கல்விக்கான ஆங்கிலத் திறனையும், தொழில் வாய்ப்பிற்கான தொடர்பு திறனையும் மிகச் சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பு!

✴️ பல்கலைக்கழக சேர்க்கை, கல்லூரிக் கல்வி, வேலைவாய்ப்பு, நேர்காணல் எதற்காகவும் தேவையான நம்பிக்கையான ஆங்கிலத்தை படிப்படியாக கற்றுக்கொடுக்கும் முழுமையான 6 மாத பயிற்சி.

✴️ எளிமையான கற்பித்தல் முறை + தினசரி பேசும் திறன் பயிற்சி = சரளமான ஆங்கில பேச்சுத் திறன்

🔖 ஆங்கில திறனைக் கட்டியெழுப்புவதற்கான சரியான தேர்வு —
Shaping Lives இன் English Express

👨‍🎓 Course Instructor:
*Mr. SHAHEED AQEEL*
English Guide, Al Aalim
Director — Easy English Institute

📞🪀 முன்பதிவுகளுக்கு: *074 013 4695*

ஆங்கிலம் உங்கள் கனவுகளை நனவாக்க கைகொடுக்கும்!

~
Shaping Lives
Centre for Life Skills

18/01/2026

இதய யாத்ரா – தொடர் 7
============
✒️ சபியா நிஹார்
(பொறுப்பாளர்: மொழிக் கற்கைகள் பிரிவு, சேப்பிங் லைவ்ஸ் – வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனம்)

இந்த ஏமாற்றத்தின் தாக்கத்திலிருந்து, நம் இதயத்தை முழுமையாகப் பாதுகாக்க முடியுமா? என்றால் பதில் எளிதல்ல. ஆனால், அந்த வலிக்குள் நம்மை முழுமையாக இழக்காமல் இருப்பதே நம் இதயத்தின் பயணம்.

முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று: ஏமாற்றம் நம் பலவீனம் அல்ல; அது ஒரு மனிதன் கடந்து வரும் பாதையில் ஒரு பகுதி. எல்லாவற்றையும் உள்ளுக்குள் அடக்கிக் கொள்வது வலிமை அல்ல; சில நேரங்களில், அந்த வலியை ஒப்புக்கொள்வதே உண்மையான துணிவு. 'ஆம், நான் ஏமாற்றமடைந்தேன்' என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வது, குணமடைவதற்கான முதல் படி.

அடுத்து, எல்லா எதிர்பார்ப்புகளும் நியாயமானவையா? என்று நம்மை நாமே கேட்க வேண்டும். நாம் நம்பிய மனிதர் தவறானவரா? அல்லது நாம் வைத்த எதிர்பார்ப்பு அதிகமா? இந்த கேள்விக்கு பதில் தேடுவது, மற்றவர்களை குற்றம் சொல்லுவதற்காக அல்ல; நம்மை நாமே தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக. ஏமாற்றம், பல நேரங்களில் நம் எல்லைகளை நமக்கே கற்றுத் தருகிறது.

மௌனமும் ஒரு மருந்தாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமாக இருந்தால், விஷமாக மாறும். மனதில் தங்கிய ஏமாற்றத்தை நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பகிர்ந்து கொள்வது அல்லது எழுதிப் பார்ப்பது இதயத்தின் சுமையை சற்றே குறைக்கிறது. வார்த்தைகளாக வெளியே வந்த வலி, மெதுவாக தன் கூர்மையை இழக்கத் தொடங்குகிறது.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், மீண்டும் நம்புவதற்கு அவசரப்பட வேண்டாம். உடைந்த கண்ணாடியை உடனே ஒட்ட முயன்றால், கைகளை கிழித்துக் கொள்வோம். அதேபோல், காயமடைந்த இதயத்திற்கு ஓய்வு தேவை. அந்த ஓய்வில் தான் நாம் நம்மை மீண்டும் சந்திக்கிறோம். நம் மதிப்பை மீண்டும் உணர்கிறோம்.
ஏமாற்றம் நம்மை கடினமாக மாற்ற வேண்டியதில்லை. அது நம்மை ஆழமாக மாற்றலாம். அதிகம் புரிந்து கொள்ளும் மனிதராக, அளவோடு எதிர்பார்க்கும் மனிதராக, ஆனால் இன்னும் மனிதர்களை நேசிக்கத் தெரிந்த ஒருவராக.

இதய யாத்ரா என்பது வலியிலிருந்து ஓடிப்போகும் பயணம் அல்ல; வலியுடனே நடந்து, அதைக் கடந்து செல்லும் பயணம்; இந்தப் பாதையில், ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு பாடம்; ஒவ்வொரு காயமும், ஒரு புதிய தெளிவு.

(யாத்ரா தொடரும்...)

18/01/2026

உயர்திரு உறவு - தொடர் 6
==============
✒️ றிஸ்லா ஹம்ஸா (வழிகாட்டல் பொறுப்பாளர், சேப்பிங் லைவ்ஸ் - வாழ்க்கை திறன்கள் நிலையம்)

ஒரு இலையின் ஆயுட்காலம் அது உதிரும் வரை தான், ஒரு ஆன்மத்தின் ஆயுட்காலம் சீரான மூச்சு இருக்கும் வரை தான், ஒரு வாழ்வின் ஆயுட்காலம் அந்த வாழ்வை எந்த சூழ்நிலையிலும் உன்னால் கடந்து வரமுடியும் என்று உணரும் வரை தான்.

சூழ்நிலைகள் காலத்திற்கு தகுந்தாற்போல அதனதன் போக்கில் மனிதர்களின் எண்ணப்போக்கை மாற்றி அவர்களின் வாழ்வின் அந்திமப் பொழுதுகளை நிர்ணயிக்கத்தக்கது. வாழ்வு தரும் எண்ணப்போக்கை தாண்டி வாழ்வின் சூட்சுமங்களை ஆராய்ந்தறிந்து அதன் வனப்புக்களை இறுகப்பற்றிக் கொள்ளும் போது உன்னையறியாமலே நீ உன்னத வாழ்வின் தொடக்கப் புள்ளியில் வேரூன்றுகிறாய்.

நினையாத புறத்தில் இருந்து வாழ்வு தரும் அத்தனையும் பேரழகு தான். எண்ணங்களின் போக்கு தூய்மையின் புறத்தில் இருந்து தோற்றம் பெரும் போது.

(தொடரும்...)

18/01/2026

மீண்டும் மலர்வேன் - தொடர் 11
===============
✒️ முபீதா அமீன் (முகாமையாளர்: சேப்பிங் லைவ்ஸ் - வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனம்)

வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதனை திட்டமிடாமல் பயணித்தால் சென்றடையப் போகும் சரியான இடத்தை அடைய முடியாமலே போய்விடும். உடலுக்கு உயிர் எப்படி மிக முக்கியமோ அதேபோல் இந்த உயிர் வாழும் காலத்தைப் பயனுள்ள விதத்தில் சிந்தித்துச் செயற்படுகின்றோமா ? என்று ஒவ்வொருவரும் சுய விசாரணை செய்ய வேண்டும். அப்போது தான் வாழ்வதற்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். வாழ்நாட்களை எப்படியும் கழிக்கலாம் என்றில்லாமல் இப்படித் தான் கழிக்க வேண்டும் என்று இறைவன் சொன்ன விதத்தில் கழித்துப் பாருங்கள். ஆறுதலும் நிம்மதியும் எம்மனதினை ஒட்டிக் கொள்ளும்.

உயிரின் மதிப்பை உணர்ந்து வாழுங்கள். அதில் மரணத்திற்கு முன்னரான வாழ்வும் மரணத்திற்குப் பின்னரான வாழ்வும் சிறப்படையும் விதமாக அமையுமளவில் எமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். உடலளவிலோ அல்லது மனதளவிலோ சோர்ந்து போகும் போதெல்லாம் இறைவனிடத்தில் அத்தனை மனப்பாரங்களையும் கொட்டித் தீர்த்து விடுங்கள்.நிச்சயமாக அவற்றிற்கு பொருத்தமான விதத்தில் பதிலளிப்பான். குறித்த பிரச்சினை பற்றிய உங்கள் சிந்தனை உங்களைத் தோல்விக் கடலிலே மூழ்கடிக்கும்.எனவே முடிந்தளவில் உங்களை நீங்களே முதலில் ஆறுதல் படுத்தி , வழிப்படுத்திக் கொண்டு வாழப் பழகுங்கள்.

நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களின் மீது நீங்கள் காட்டும் பங்களிப்பே மிக முக்கியமானது. வெற்றியின் வழியை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றால் உங்களின் ஒவ்வொரு விடயங்களைப் பற்றியும் உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இறைவனையும், வாழும் இந்த வாழ்வையும் நேசித்து வாழ்ந்தாலே வெற்றியின் வாசலை அடைய முடியும். இன்று நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை பல பேரின் ஏக்கமான கனவாகக் கூட இருக்கலாம். இந்தளவில் எம்மை வாழ வழி செய்திருக்கும் இறைவனுக்கு முதற்கண் நன்றி செலுத்தி மனத்திருப்தியோடு வாழ்வோம். வாழ்க்கை என்றும் மலரும்.

(மீண்டும் மலரும்...)

18/01/2026

மனம் மீளும் நேரம் - தொடர் 9
=============
✒️ அம்னா அஸ்வர் (ஊக்குவிப்புப் பயிற்றுநர்: சேப்பிங் லைவ்ஸ், வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனம்)

மனஉறுதியானது ஈருலக வெற்றிக்கான அடித்தளமாக காணப்படுகிறது. பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆம், நாம் அனைவரும் இம்மை,மறுமை ஆகிய ஈருலகிலும் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். ஆனால், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் போதுமா? இல்லை. வெற்றி என்ற இலக்கை அடைவதற்கு அதற்கான சரியான பாதையை முறையாகத் தேர்ந்தெடுத்து அதில் நிலைத்திருந்து பயணிக்க வேண்டும். பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால் பயணம் இலகுவாகிவிடுமா? இல்லை. பயணம் தொடங்கிய பின்னர் தான் பல்வேறு சோதனைகளும், எதிர்மறை எண்ணங்களும்,தடைகளும், மனச் சோர்வுகளும் நம்மை எதிர்கொள்கின்றன. அத்தகைய நேரங்களில் எமது மனதை திடப்படுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும் .

இதற்கான முதற்கட்டமாக இறைவனிடம் முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை புரிவது மிக அவசியமாகும். 'யா அல்லாஹ்! எனது நெஞ்சை விரிவாக்கி, திடப்படுத்துவாயாக!' என்ற இந்த துஆவை தினமும் பிரார்த்தனைகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வு, பயம் போன்ற அனைத்தையும் நீக்கி சிந்தனையில் தெளிவையும், செயல் துணிவையும் அளிப்பது அல்லாஹ்வின் உதவியினால் மாத்திரமே சாத்தியம் ஆகும். அடுத்து, நம்மை நாமே புரிந்துகொள்ள நேரம் ஒதுக்கிக்கொள்ளல். சுய விசாரணை (முஹாசபா) செய்து கொள்வது ஒரு முஃமினின் (நம்பிக்கையாளரின்) முக்கிய பண்பாகும். எமது செயல்கள், நோக்கங்கள், தவறுகள் ஆகியவற்றை சிந்தித்துப் பார்ப்பது இறைவனுடனான நெருக்கத்தை அதிகரிக்கவும், ஈருலக வாழ்வில் வெற்றி பெறவும் பெரிதும் துணைபுரிகிறது.

உடல் வலிமை குறைந்தவர்கள் கூட மனவலிமையின் காரணமாக மாபெரும் வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள். மன வலிமை உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'என்னால் முடியும்' என்ற உறுதியான நம்பிக்கை மனதில் உருவாகும் போது உடல் தானாகவே அதற்கான முயற்சியை ஆரம்பிக்கிறது. அந்த இயக்கம் மிகவும் வலிமையானதாகவும் தொடர்ச்சியானதாகவும் மாறிவிடுகிறது.
பண பலமும், உடற் பலமும் கூட மனபலத்துடன் போட்டியிடும்போது தோல்வியடைவதைக் காண்கிறோம் அல்லவா?

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். மனதை அலங்கரிப்பதற்காக எவ்வளவு தியாகம் செய்ய முடியுமோ, அதற்கும் அப்பால் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். அப்போதுதான் வெற்றி பெறுவதற்கான பாதை நமக்கு இலகுவாக மாறுகிறது.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.' (அல்-குர்ஆன் 94:5 )
ஒரு செயல் கடினமான செயலாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் வெற்றிக்கான பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது.

ஆகவே, மனதை திடப்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மனஉறுதியை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய நல்ல உறவுகளுடன் உறவை பலப்படுத்தில் கொள்ளல், நேர்மறையான முறையில் ஊக்குவிக்கும் நபர்களுடன் தொடர்பில் இருத்தல், மன உறுதி கொண்ட நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் பயனுள்ள புத்தகங்களை அதிகமாக வாசிப்பதனுடாகவும்
மனதை திடப்படுத்தி கொண்டு ஈருலக வாழ்வின் வெற்றியை நோக்கி புறப்படுவோம்!

(மனம் மீளும்...)

18/01/2026

இதய யாத்ரா – தொடர் 6
====================
✒️ சபியா நிஹார்
(பொறுப்பாளர்: மொழிக் கற்கைகள் பிரிவு, சேப்பிங் லைவ்ஸ் – வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனம்)

மனிதனின் இதயத்தை மௌனமாக காயப்படுத்தும் உணர்வுகளில் ஒன்றாக ஏமாற்றம் இருக்கிறது. அது சத்தமில்லாமல் வருகிறது; ஆனால் வந்த பின் இதயத்தில் ஆழமாக தங்கி விடுகிறது.
ஒருவரிடம் நாம் வைத்த நம்பிக்கை எதிர்பார்த்தபடி நடக்காதபோது, சொல்லாமல் விட்ட வாக்குறுதிகள் நிறைவேறாதபோது, 'நான் இருக்கிறேன்' என்ற வார்த்தைகள் செயலாக மாறாதபோது, அங்கே ஏமாற்றம் உருவாகிறது. அது உறவுகளிலோ, வேலைவாய்ப்பிலோ, நட்பிலோ, அல்லது வாழ்க்கையின் ஓர் கட்டத்திலோ நம்மைத் தட்டித் தட்டிக் கேட்கிறது: 'நீ நம்பியது சரியா?'

ஏமாற்றம் மனிதனை வெளியில் உடைக்காது; அது உள்ளுக்குள் மெதுவாக சோர்வடையச் செய்கிறது. மீண்டும் நம்பத் தயக்கம், பேசத் தயக்கம், மனதைத் திறக்க ஒரு பயம் என, இவையனைத்தும் ஏமாற்றத்தின் மௌனத் தாக்கங்கள். சில நேரங்களில், நாம் யாரிடமும் கோபப்பட மாட்டோம்; ஆனால் நம்மையே குறை சொல்லத் தொடங்குவோம். 'நான் அதிகம் எதிர்பார்த்தேனா?' என்ற கேள்வி, மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்.

இந்த உணர்வு நீண்ட காலம் மனதில் தங்கியிருந்தால், அது உடலையும் தொடும். தூக்கம் கலைந்து விடும்; சோர்வு கூடிக் கொண்டே போகும். இதயம் கனமாக இருப்பது போலத் தோன்றும். காரணமில்லாத கவலை, மனவழுத்தம், இதயத் துடிப்பதிகரிப்பு இவையனைத்தும் ஏமாற்றம் இதயத்தை எவ்வளவு நெருக்கமாகத் தொடுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

ஏமாற்றம் ஒரு பெரிய சம்பவமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு வார்த்தை, ஒரு மௌனம், ஒரு செயல் இல்லாமை என்பன போதும். ஆனால் அதன் தாக்கம் ஆழமானது. ஏனெனில், ஏமாற்றம் என்பது நிகழ்ந்த ஒன்றைப் பற்றிய வலி அல்ல; நிகழும் என்று நம்பிய ஒன்றின் இழப்பு.
அதனால் தான், ஏமாற்றம் மனதைத் தளரச் செய்து, இதயத்தில் ஒரு மெல்லிய வலியாக நிலைத்திருக்கிறது.

இந்த ஏமாற்றத்தின் தாக்கத்திலிருந்து, நம் இதயத்தை பாதுகாக்க முடியுமா?

(யாத்ரா தொடரும்…)

18/01/2026

Shaping Lives வழங்கும்,

☢️ Art of Parenting |
இலவச அறிமுக நிகழ்வு — Orientation for 3 Months Art of Parenting (Super Parent) Exclusive Course

✴️ ஒரு சிறந்த பெற்றோராக மாறுவதற்கான வழிகாட்டலுடன் குடும்பக் கட்டமைப்பை சீர்செய்து நல்வாழ்வியல் இலட்சியங்களை அடைவதற்கான சிறந்த ஒரு வாய்ப்பு! — Golden Opportunity for a Free Guidance Session.

🧑‍🎓 நிகழ்வு வளவாளர்:
*திருமதி. ஆதிஃபா அஷ்ரஃப்*
(ஊக்குவிப்புப் பேச்சாளர்,
உளவுத்துணை நிபுணர், சிரேஷ்ட விரிவுரையாளர்: SEC, ஹெம்மாதகமை)

🗓️ காலம்: *09.01.2026 | வெள்ளிக்கிழமை*
⏱️ நேரம்: *இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை*
📲 மூலம்: *நிகழ்நிலை வழி*

📞🪀 நிகழ்வு முன்பதிவுகளுக்கு:
*076 20 260 43* — Shaping Lives Official Number
*076 260 88 36* — Course Coordinator Ms. Mufeedha Ameen

🖱️நிகழ்வு இணைப்பு:
https://us05web.zoom.us/j/82730517922?pwd=aRJfTmVDf7aE7txVYVNX9paVeELDVS.1

🔰 *Join Shaping Lives's Art of Parenting WhatsApp Group:*
https://chat.whatsapp.com/K8fif4RlyewIbar2BMwxLI

✴️ வாழ்வை மேம்படுத்தும் வளமான நிகழ்விற்கு உங்களையும் அன்போடு வரவேற்கின்றோம்.

✴️ பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் முற்றிலும் இலவசமான மற்றும் பெறுமதியான இந்நிகழ்வில் கலந்துகொள்ளத் தவறாதீர்கள்.

▪️சிறந்த பெற்றோரே, சிறந்த முன்னுதாரணம்!

~
Shaping Lives
Centre for Life Skills

07/01/2026

Shaping Lives வழங்கும்,

☢️ Art of Parenting | இலவச அறிமுக நிகழ்வு — Orientation for 3 Months Art of Parenting (Super Parent) Exclusive Course

✴️ ஒரு சிறந்த பெற்றோராக மாறுவதற்கான வழிகாட்டலுடன் குடும்பக் கட்டமைப்பை சீர்செய்து நல்வாழ்வியல் இலட்சியங்களை அடைவதற்கான சிறந்த ஒரு வாய்ப்பு! — Golden Opportunity for a Free Guidance Session.

🧑‍🎓 நிகழ்வு வளவாளர்:
திருமதி. ஆதிஃபா அஷ்ரஃப்
(ஊக்குவிப்புப் பேச்சாளர்,
உளவுத்துணை நிபுணர், சிரேஷ்ட விரிவுரையாளர்: SEC, ஹெம்மாதகமை)

🗓️ காலம்: 09.01.2026 | வெள்ளிக்கிழமை
⏱️ நேரம்: இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை
📲 மூலம்: நிகழ்நிலை வழி

📞🪀 நிகழ்வு முன்பதிவுகளுக்கு:
076 20 260 43 — Shaping Lives Official Number
076 260 88 36 — Course Coordinator Ms. Mufeedha Ameen

🔰 Join Shaping Lives's Art of Parenting WhatsApp Group:
https://chat.whatsapp.com/K8fif4RlyewIbar2BMwxLI

✴️ வாழ்வை மேம்படுத்தும் வளமான நிகழ்விற்கு உங்களையும் அன்போடு வரவேற்கின்றோம்.

✴️ பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் முற்றிலும் இலவசமான மற்றும் பெறுமதியான இந்நிகழ்வில் கலந்துகொள்ளத் தவறாதீர்கள்.

▪️சிறந்த பெற்றோரே, சிறந்த முன்னுதாரணம்!

~
Shaping Lives
Centre for Life Skills

01/01/2026

Wish you a Happy New year

Cheers to health, happiness, and prosperity in 2026!

~
Shaping Lives
Centre for Life Skills

Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


Kandy