CP/W/Vigneshwara T.M.V - Science College - Panwila

CP/W/Vigneshwara T.M.V - Science College - Panwila �����
*To Illumine the World*
கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது..

📸2025.11.04✨🌟ACHIEVER'S DAY- 2025🌟✨வாழும் போதே வாழ்த்துவோம் எனும் தொனிப்பொருளின்‌ கீழ் எமது விக்னேஷ்வரா தமிழ் மகா வித்தி...
05/11/2025

📸2025.11.04
✨🌟ACHIEVER'S DAY- 2025🌟✨
வாழும் போதே வாழ்த்துவோம் எனும் தொனிப்பொருளின்‌ கீழ் எமது விக்னேஷ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் Achiever's Day மூன்றாவது வருடமாக வெற்றிகரமாக நிகழ்ந்தேறியது.. இன்று அடையும் ஒவ்வொரு முன்னேற்றமும், எங்கள் விக்னேஸ்வராவின் ஒற்றுமையும், நம் உழைப்பின் பொன்னான சான்றும் ஆகும்.
வாழ்த்துகளை இன்று பகிர்ந்து, வளர்ச்சியை நாளும் தொடர்வோம்.”

05/11/2025

Roles may change… places may change… but the bond with Our Vigneshwara Tamil Maha Vidyalaya remains the same..

✍️New era begins… new admin continues...

https://www.facebook.com/share/1HwqrGWeom/🎓 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்கான முதல் கருத்தரங்கு வெற்றிகரமாக ஆரம்...
14/07/2025

https://www.facebook.com/share/1HwqrGWeom/

🎓 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்கான முதல் கருத்தரங்கு வெற்றிகரமாக ஆரம்பமானது! 📚

பன்வில விக்னேஸ்வரா விஞ்ஞான கல்லூரியில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் கருத்தரங்கு மாணவர்களுக்கு உற்சாகத்தையும், தேர்வுக்கு தேவையான அறிவு வழிகாட்டுதலையும் வழங்கிய ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்தது.

இந்த நிகழ்வில் 7 பாடசாலைகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முக்கிய வளவாளராக திரு. யுவன் ராஜ் (Melfort Prajashakthi) அவர்கள் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கினார்.

இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்தவர் எங்கள் நிறுவனரும் வழிகாட்டியுமான திரு. ரவிராமநாதன் (Founder - Solution Foundation) அவர்கள்.

🔹 மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக முன்னெடுத்த பாததும்பர பிரஜாசக்தி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்! அவர்களது ஒத்துழைப்பு இன்றி இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த இயலாது என்பதே உண்மை.

இது போல மேலும் பல கருத்தரங்குகள் ஜூலை மாதம் நடைபெற உள்ளன — மாணவர்களின் வெற்றிக்காக எங்கள் பயணம் தொடர்கிறது!

இது போல தொடரும் கருத்தரங்குகள் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக அமையும்!

# Copied From You Care We share

From Dusty Desks to Digital Dreams 💻✨What started as a simple room with limited resources has now transformed into a ful...
11/07/2025

From Dusty Desks to Digital Dreams 💻✨

What started as a simple room with limited resources has now transformed into a fully equipped Computer Lab at Vigneshwara Tamil Maha vidyalaya!
We still remember the old computer room small, struggling, but filled with big dreams.
Today, we celebrate the result of hard work, hope, and dedication. A new space where innovation begins. 🌟

📸2025.07.11இன்றைய தினம் எமது பாடசாலையின் மிகவும் சிறப்புக்குரிய தினமாகும். இன்றைய தினம் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும் ...
11/07/2025

📸2025.07.11
இன்றைய தினம் எமது பாடசாலையின் மிகவும் சிறப்புக்குரிய தினமாகும். இன்றைய தினம் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்கால அபிவிருத்திக்கும் வித்திடும் வகையில் எமது பாடசாலைக்கு தயா ரத்னாயக்க அறக்கட்டளையின் மூலமாக கணினி ஆய்வுக்கூடம் கையளிக்கப்பட்டது. இதனை எமது பாடசாலைக்கு தந்துதவி எமது பாடசாலையின் மாணவர்களின் கல்விக்கும் எதிர்கால நமது சமூக வளர்ச்சிக்கும் வித்திட்ட தயா ரத்னாயக்க அறக்கட்டளையின்
அறங்காவலர் திரு.தயா ரத்னாயக்க ஐயா அவர்களுக்கு எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எம் சமூகத்திற்கு இத்தகைய பெரும் சேவையை நல்கிய தங்களுக்கு இறைவன் என்றென்றும் அருள் புரிவாராக!
A proud and exciting moment for all of us at Vigneshwara Tamil Maha vidyalaya!
Our brand new Computer Lab is officially open and ready to empower students with the tools of tomorrow. Let the digital journey begin – learning, exploring, and growing together with technology!
🖥️👩‍💻

📸2025.07.09🌿 Clean Sri Lanka Month – Clean Steps, Safe Space @ Vigneshwara Tamil Maha Vidyalaya, Panwila Clean Sri Lanka...
09/07/2025

📸2025.07.09
🌿 Clean Sri Lanka Month – Clean Steps, Safe Space @ Vigneshwara Tamil Maha Vidyalaya, Panwila
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எங்கள் பாடசாலையில் Clean Steps, Safe Space வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. புதிய வழிகாட்டல் கையேட்டின் அடிப்படையில், மாணவர்கள் பாடசாலை மற்றும் சமூக சூழலில் காணப்படும் சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்வுகளை முன்வைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இது ஒரு பொறுப்புள்ள மற்றும் சூழலியலோடு உணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகிறது. Clean Steps, Safe Space ஒரு நாள் வேலைத்திட்டத்தின் இன்றைய பதிவுகள்..
🌍 From awareness to action – we clean, we care, we change.

பாடசாலை  சுற்றாடலும் நமது பொறுப்பும்!🌿🧹🌱🚫🦟எமது பாடசாலை வளாகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சுற்றாடல் தூய்மைப்பணி மற்றும் ட...
10/06/2025

பாடசாலை சுற்றாடலும் நமது பொறுப்பும்!
🌿🧹🌱🚫🦟
எமது பாடசாலை வளாகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சுற்றாடல் தூய்மைப்பணி மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்..
🛑 டெங்கு நோயற்ற எதிர்காலத்திற்காக செயற்படுவோம்!
🌎 சுத்தமான சுற்றாடல், ஆரோக்கியமான வாழ்க்கை!
#சுற்றாடல்சுத்தம்
#டெங்குஒழிப்பு #சுற்றாடல்சுத்தம்

📸2025.06.06🌍♻️ 2025 உலக சுற்றாடல் தினம்🌱🌿கருப்பொருள்: பிளாஸ்டிக் பாவனையை இல்லாதொழிப்போம்! 🚯🛍️2025.06.05 உலக சுற்றாடல் தி...
06/06/2025

📸2025.06.06
🌍♻️ 2025 உலக சுற்றாடல் தினம்🌱🌿
கருப்பொருள்: பிளாஸ்டிக் பாவனையை இல்லாதொழிப்போம்! 🚯🛍️

2025.06.05 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு, எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இணைந்து பசுமையான செயல்முறைகளை முன்னெடுத்தனர். பசுமை காக்கும் இந்தப் பயணத்தில், “பிளாஸ்டிக்கில்லா எதிர்காலம்” என்பது நம் இலக்காகும்!
இன்றைய தின எமது விழிப்புணர்வு முயற்சிகளின் சிறப்பான தருணங்கள்.

#மரநடுகை
#பசுமைபாடசாலை

📸2025.04.10எமது பாடசாலையில் 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ...
01/05/2025

📸2025.04.10
எமது பாடசாலையில் 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வின் பதிவுகள்

📸2025.04.25சூரியன் FM இன் ஊடக அனுசரணையுடன் நடைபெற்ற எமது பாடசாலையின் சித்திரைக் கொண்டாட்டப் பதிவுகள்
01/05/2025

📸2025.04.25
சூரியன் FM இன் ஊடக அனுசரணையுடன் நடைபெற்ற எமது பாடசாலையின் சித்திரைக் கொண்டாட்டப் பதிவுகள்

Address

Panwila
Kandy
20830

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when CP/W/Vigneshwara T.M.V - Science College - Panwila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CP/W/Vigneshwara T.M.V - Science College - Panwila:

Shortcuts

Share

Category