29/07/2026
(28/07/2026) எமது பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிந்து வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் MR.S.நந்தகுமார் ஆசிரியரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு தற்போது பாடசாலை கடமைகளை பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் MR.A.சுமன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது அவர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பாடசாலைக்கு ஆற்றிய சேவையினை பாராட்டி நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.