15/01/2026
இன்று கல்முனையில் நடைபெற்ற விஞ்ஞான பாட கருத்தரங்கு 2026.01.15
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hija College 2.0, Education Website, Natpiddimunai, Kalmunai.
15/01/2026
இன்று கல்முனையில் நடைபெற்ற விஞ்ஞான பாட கருத்தரங்கு 2026.01.15
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் விஞ்ஞான கருத்தரங்கில்...
.
உன்னைப்பற்றி குறை நினைப்பவர்களுக்கு
விளக்கமளிக்க நினைக்காதே.
காரணம் புரியும்போது அவர்களே விளங்கிக்கொள்வார்கள்.
22/12/2025
📌👉தனது எதிர்கால கல்விக்கு என்ன நடக்கும் என்று கடுகளவேனும் சிந்திக்காமல் ஒட்டுமொத்த பாடசாலை நிர்வாகத்தையே புரட்டிபோட்டு அநீதிக்கு எதிராக நின்ற
Gen Z தலைமுறையின் சூப்பர் கேர்ள் பற்றிய தேடல் தான் இது.
இலட்சியங்கள் சமூகமயப்படுத்தபடும்
அதே நேரத்தில் முரைகேடுகளும் துர்நடத்தைகளும் சமூகமயமாக்கப்பட்டால், அந்த சமூகம் பழமைவாதத்துக்கு
இன்னும் ஆழமாக தள்ளப்படுகிறது என்று பொருள் படும்.
இந்த படுபாத செயல்கள் ஒரு நாட்டின் உயரிய சபை பாராளுமன்றத்தை மாத்திரமல்ல இன்று கல்வி போதிக்கும் பாடசாலைகளை கூட விட்டு வைக்கவில்லை.
உண்மையில் பிள்ளைகளின் உணர்வு, புரிதல், சுய கெளரவம், சிந்தனை,உள்ளம், செயல் என அனைத்தையும் சலவை செய்து அவர்களுக்கு அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கூறி முன்னுதாரணமாக இருந்து குறிக்கோள் உள்ள ஒரு பிள்ளையை உருவாக்க வேண்டிய பாடசாலை கட்டமைப்பு உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் (Emotionally and physiologically affected )பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையை சமூகமயப்படுத்தி விடுகிறது.
பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாடசாலை கட்டமைப்புக்குள் பாரிய அநீதி இழைக்கபடுகிறது.
ஆனால் தமக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் தெரிந்தும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பயத்தால் வாய் திறப்பதில்லை.
ஆனால் இந்த Gen Z தலைமுறை என்பது வேறு. படு பயங்கரமானது. இதனால் தான் இந்த தலைமுறை பிள்ளைக்கு பின்னால் இருந்த அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் தாம் அசிங்கப்பட போகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடந்த கலர்ஸ் நைட் நிகழ்வு தான் இது.
பிள்ளையின் பெயர் சனித்மா சினாலி.
கடந்த 2023 இல் பாடசாலையின் விளையாட்டு தலைவியாக இருந்து இருக்கிறார்.
அவர் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இறுதிப் போட்டி வரை சென்று இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக பாடசாலைக்கு புகழை ஈட்டிகொடுத்து இருக்கிறார். இனி இல்லையென்று திறமையான மாணவி என்று அவரது கடந்த காலம் சொல்கிறது.
கலர்ஸ் நைட் அன்று காலை Rehearsal க்கு செல்லாமையால் சனித்மாவுக்குரிய விருது பிறிதொரு மாணவிக்கு சென்றிருக்கிறது.
காலையில் பரீட்சை ஒன்றிருக்கிறது தன்னால் Rehearsal க்கு வர முடியாது என சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அறிவித்தும் அநியாயம் நடந்து இருக்கிறது சனித்மாவுக்கு.
ஆனால் அதனை பாடசாலை நிர்வாகம் வேண்டுமென்றே புறகணித்து இருக்கிறது. ஏன் ஒரு திறமையான மாணவி பாடசாலை நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்?
தகுந்த காரணம் இருந்தும் தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டு பிறிதொருவருக்கு வழங்குவது எவ்வளவு பெரிய அநியாயம்?
நானோ நீங்களோ சும்மா இருப்போமா இல்லை தானே.
இங்கு தான் இருக்கிறது ட்விஸ்ட்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சனித்மா மைக்கை எடுத்து வெளி உலகுக்கு சொல்வாள் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உரத்து சொன்னால் சனித்மா. அவளது கையில் இருக்கும் மைக்கை ஓஃப் செய்யுங்கள் என்று அதிபர் கூறும் வரை. அது மட்டுமா இது இப்போது எட்டுதிக்கும் காட்டுத்தீயை விட அசுர வேகத்தில் பரவி இருக்கிறது.
இனியாவது பாடசாலைகளில் இடம்பெறும் ஊழல், மோசடி என்பவற்றுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாடசாலை கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முனையும் எவரையும் விட்டு வைக்க கூடாது.
அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் சனித்மாவின் இந்த முயற்சி பிரயோசனமற்றதாக மாறி விடும்.
எது எப்படியோ அநீதி ஆட்சி செய்யும் உலகில்,
நீதிக்காக தனித்து எழுந்து நின்ற சானித்மாசினாலியும் இந்த நாட்டிற்கு ஒரு சொத்து அவ்வளவு தான்.
ஹெட்ஸ் ஒஃப் சனித்மா. ❤️🫡
Copy
🛑 #புதிய கல்விச் சீர்திருத்தங்கள் - 2026
🛑இச்சீர்திருத்தமானது 5 தூண்களின் ( Pillars) கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
1. பாடங்களின் கலைத்திட்ட மறுசீரமைப்பும் அபிவிருத்தியும்
2. வளவாளர் பயிற்சியும் ஆசிரிய பயிற்சியும்
3. நிருவாக மறுசீரமைப்பும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும்
4. கணிப்பீடும் மதிப்பீடும்
5. சமூக விழிப்பூட்டலும் பிரசாரமும்
என்பன அந்த 5 தூண்களும் ஆகும்.
ஆரம்ப கல்வியின் பாடங்கள்
*********************************
I. தமிழ் (வாசிப்பு நூலும் செயல் நூலும்)
II. ஆங்கிலம்
Iii. இரண்டாம் தேசிய மொழி
Iv. கணிதம்
V. சமயமும் விழுமிய கல்வியும்
Vi. அடிப்படை விஞ்ஞானமும் சுற்றாடல் சார்ந்த செயல்பாடும்.
Vii. ஒன்றிணைந்த அழகியல்
Viii. சுகாதாரமும் உடற்கல்வி யும்.
IX. இணைப்பாட விதான செயற்பாடுகள்
ஆரம்ப பிரிவுகள் தற்போது உள்ளது போலவே முதன்மை நிலைகள் கொண்டிருக்கும்.
இடைநிலைக் கல்வி
************************
மொடியூல் முறையும் GPA முறையும் தரம் 6 தொடக்கம் தடைமுறைக்கு வருகிறது.
35 CREDITS
************
தரம் 6-9 வரை 14 பாடங்கள் காணப்படும்.
அத்தியாவசிய (Essential subjects) பாடங்கள் 14க்கும் விளையாட்டு மற்றும் மாணவர் சங்கங்கள் மற்றும் கழகங்களின் பங்குபற்றலுக்குமாக 30 கிறெடிட்கள் (30 credits) வழங்கப்படும்.
தொடருறு கல்விக்கு வழிப்படுத்தும் மொடியூல் செயற்பாட்டுக்காக ஒவ்வொரு தவணைக்கும் 3 கிறெடிட்கள் (03 credits) கிடைக்கும்.
வாழ்க்கைத் தேர்ச்சியுடன் கூடிய பன்முனைத்திறன்களுக்காக (Transversal skills) 2 கிறெடிட்கள் (2 credits) கிடைக்கும்.
க. பொ.த (சா/த) பரீட்சைக்கு வரலாறு கட்டாய பாடமில்லை. ஆனால் தெரிவுப் பாடமாக (Elective subject) வருகிறது.
30 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்
***************************************
1.தமிழ் மொழி
2.ஆங்கில மொழி
3.சிங்கள மொழி (இரண்டாம் தேசிய மொழி)
4. கணிதம்
5.விஞ்ஞானம்
6.சுகாதாரமும் உடற்கல்வி யும்
7. ICT
8.வாழ்க்கைக்கான தொழினுட்பம்
9.புவியியல்
10.வரலாறு
11. குடியுரிமை கல்வி
12. சமயமும் விழுமிய கல்வியும்
13. அழகியல் கல்வி
14. முயற்சியாண்மையும் நிதிசார் எழுத்தறிவும்
15. விளையாட்டு மற்றும் சங்கங்கள் கழகங்களில் பங்குபற்றுதல் (participation only)
03 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்
***************************************
தொடருறு கல்வி அல்லது உயர்கல்வி நோக்கிய சரியான துறையை நோக்கி மாணவர்களை வழிகாட்டும் வகையில் தமது பிரதேசத்தில் செய்யக்கூடிய தொழில் சந்தைக்கு பொருந்தும் விதமாக ஒவ்வொரு அத்தியாவசிய பாடத்துடனும் தொடர்புடையதாக ஆனால் தவணைக்கு எனும் அடிப்படையில் இதற்கான மொடியூல் 03 கிறெடிட்களுக்காக அமைகிறது.
02 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்
***************************************
பின்வரும் 09 பாடங்களிலிருந்து விருப்பமான 02 பாடங்களை மட்டும் தெரிவு செய்ய வேண்டும்.
1.இலக்கிய நயம்
2.ஊடக கற்கை (தரம் 8 தொடக்கம் களத்தரிசிப்புக்கள் அவசியம்)
3.சேவைத்துறைக் கல்வி
4.உலகளாவிய போக்கு கல்வி பற்றிய கல்வி
5.சமூக சேவை
6.சுகாதாரமும் விளையாட்டும்
7.அழகியல் நயம்
8.தொழிலுக்கான ஆயத்தப் படுத்தல்
9.எண்ணிம குடியியல்
தரம் 9 ல் மாணவர்களுக்கு தேசிய அளவிலான பரீட்சை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படுவதுடன் மாகாண/ வலய மட்டத்தில் உளப்பாங்கு (Psychometric) பரீட்சையும் நடத்தப்படும்.
இந்த உளப்பாங்குப் பரீட்சை Skill test எனப்படுகிறது.
தரம் 10 (2028) தொடக்கம் - 35 கிறெடிட்கள்
***********************************************
கட்டாய பாடங்கள் 5 (18 credits)
தொடருறு கல்விக்கான பாடங்கள் 2 (14 credits)
வாழக்கைத்திறன்கள் ( 03 credits)
அத்தியாவசிய பாடங்கள்
Essential Subjects (14 credits)
*****************************
1. தமிழ் மொழி
2.ஆங்கில மொழி
3.கணிதம்
4.விஞ்ஞானம்
5.சமயமும் விழுமிய கல்வியும்
( இப்பாடத்துக்கு 2 credits மற்றையவற்றுக்கு தலா 03 credts)
தெரிவும் பாடங்கள் 2
Two Elective Subjects
************************
பின்வரும் பாடஙாகளில் இருந்த 2 பாடங்களை மட்டும் மாணவர் தரம் 10ல் தெரிவு செய்வார்.
* இரண்டாம் தேசிய மொழி
* ICT
* வரலாறு
* குடியுரிமை கண்கலங்கி
* சுகாதாரமும் உடற்கல்வியும்
* தொழினுட்பம் (பின்வருவனவற்றுள் ஒன்று: விவசாய முகாமைத்துவ தொழினுட்பம், வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்ப மும், உணவு மற்றும் நுகர்வுக் தொழினுட்பம், சித்திர வேலைப்பாடுகள் உற்பத்தி கைத்தொழில், நீரக உயிர்வளி தொழினுட்பம்)
* புவியியல்
* அழகியல் கல்வி (தற்போதைய அழகியல் பாடங்கள் உள்ளன)
* முயற்சியாண்மையும் நிதிசார் அறிவும்
மேலுள்ள 7 பாடங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும். Essential Subject பாடங்கள் 7க்கு மட்டும் இலங்கை பரீட்சை திணைக்களம் இப்போது நடத்துவது போன்று பரீட்சையை நடத்தும். ஆனால் மேலதிக பாடங்கள் 7 க்கும் பரீட்சை திணைக்களம் பரீட்சையை நடத்தாது. மாகாண/ வலய மட்ட பரீட்சை நடைபெறும். இது மாணவரின் சித்தி வீதத்தை பாதிக்காது. ஆனால் உயர்கல்வி பற்றிய தெரிவு எதுவென்பதை உறுதிப்படுத்தும்.
மேலதிக பாடங்கள் பின்வருமாறு 4 தொகுதிகளாக உள்ளன.
வகை -1. STEM (13 பாடங்களில் 4 ஐ தெரிவு செய்ய வேண்டும்.)
******************************
* பிரயோக கணிதம்
* தூய கணிதம்
* உயிரியல்
* இரசாயனவியல்
* பௌதிகவியல்
* சுகாதாரமும் உடற்கல்வி யும்
* கொம்பியூட்டர் சையன்ஸ்
* டேட்டா சைன்ஸ்
* விவசாய விஞ்ஞானம்
* பொறியியல் தொழினுட்பம்
* உயிர்ப் பொறியியல் தொழினுட்பம்
* உணவு நுகர்வோர் தொழினுட்பம்
* விமானப் போக்குவரத்து கல்வி
வகை 2: மனிதநேயமும.சமூக விஞ்ஞானமும்
**********************************
* மொழியும் இலக்கியமும்
* ஊடகமும் தொடர்பாடலும்
* வெளிநாட்டு மொழிகள்
* செம்மொழி கள்
* குடியுரிமைக்கல்வி
* வரலாறு
* புவியியல்
* சமூக விஞ்ஞானம்
* தர்க்கவியல்
* அழகியல் பாடங்கள் (தற்போதைய)
வகை 3: முகாமைத்துவமும் முயற்சியாண்மையும்
**********************************
* பொருளியல்
* கணிதம்
* ICT
* கணக்கீடு
* வணிக கல்வி
* வணிக புள்ளி வபரவியல்
* முயற்சியால் மையும் நிதிசார் அறிவும்
* வழங்கல் சுழற்சி முகாமைத்துவம்
வகை 4: திறன் பாதை
*************************
* நிர்மாணமும் உட்கட்டமைப்பும்
* புத்தாக்க கைத்தொழில்
* ஆரம்ப கைத்தொழில்
* சமூக சேவை
* உற்பத்தி தொழினுட்பம்
வகை 1ல் விரும்பிய 4 பாடங்களை எல்லோரும் கற்க வேண்டும். வகை 2, வகை 3 ஆகிய வகைகளில் ஏதாவது ஒரு வகைக்குள் மட்டும் சென்று 2 பாடங்களை மட்டும் கற்க வேண்டும். வகை 4ல் ஒரு பாடத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இந்த 7 பாடங்களும் அமையும்.
க.பொ.த (உ/த) 2032
************************
5 பாடத்துறைகள் (5 streams)
3 பாடங்கள்
பொது ஆங்கிலம் & GIT
சக்தியூட்டும் மொடியூல்- தமது பாடத்துறை க்கு வலுச்சேர்க்கும் விதமாக Balance personality ஐ உருவாக்குவதற்காக அப்பாடத்துறையில் அல்லாத மொடியூல்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும்.
உயர்தர பாடத்துறைகள் (Subject streams) பின்வருமாறு அமையும்.
*********************************************
Science stream
Technology stream
Management & Enterpreunership
Humanities & Social Sciences
Vocational Path
50 நிமிட பாடவேளை கொண்ட 7 பாடவேளைகள் ஒரு நாளுக்கு அமையும். இதனால் பாடசாலை நேரம் தற்போதுள்ள தை விட 30 நிமிடங்கள் அதிகரிக்கும்.
இலங்கை செய்திகள்