08/06/2022
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஒவ்வொரு மாணவனும் பாடசாலை கழகங்களில் அங்கத்தவராதல் திட்டமும், பாடசாலை மாணவர் அமைப்புகள், கழகங்களுக்கான கூட்டமைப்பும் அங்குரார்ப்பணம்.
கல்முனை சாஹிரா கல்லூரியில் மாணவர்களின் மென், வன் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் ஒவ்வொரு பாடசாலை மாணவனும் பாடசாலை கழகங்களில், அமைப்புகளில் அங்கத்தவராதல் திட்டம் இன்று 8-6-2022 பாடசாலை அதிபர் MI. ஜாபிர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பாடசாலையில் ஏற்கனவே இயங்கும் மற்றும் புதிதாக அமைக்கப்படும் மாணவர் கழகங்களை முறைப்படுத்துவதற்காக பாடசாலை கழகங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பு (School Clubs and Societies Consortium )ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. மேற்படி கூட்டமைப்பில் பாடசாலையின் அதிபர் தலைமை தாங்குவதோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதி அதிபர் MH. அபூபக்கர், ஆசிரியர்களான ஷஃபி எச் இஸ்மாயில், AHM. ரிசான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மாணவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவர்களது ஓய்வு நேரங்களை சிறப்பாக பயனுள்ள வழிகளில் கழிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் பின்வரும் கழகங்கள், அமைப்புகள் பாடசாலையில் இக்கல்வியாண்டில் உருவாக்கப்படும் என பாடசாலை கழகங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பின் அங்குரார்ப்பண கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Art circle
Aesthetic Association
Agriculture society
Chemistry club
Computer society
Environment society
Debator's council
English literary association
History club
Library reader association
Young inventor club
Mathematics society
Student parliament
Non addict movement
Photographic and broadcasting association
Sinhala literary association
Tamil literary association
Science society
Young writers club