P/Kal/Thethapalai R C T Vidyalaya

P/Kal/Thethapalai R C T Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from P/Kal/Thethapalai R C T Vidyalaya, School, Kalmunai.

Said farewell to our Principal Sr.Dilani A.C. 20.03.2024
28/03/2024

Said farewell to our Principal Sr.Dilani A.C. 20.03.2024

28/03/2024
22/03/2024

Said farewell to Sr.Dilani our Principal...... 20.03.2024.

22/03/2024

தேத்தா ஊற்று - மணிவிழா மலர் வெளியீடு

புத்தளம், கல்பிட்டிக் கோட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை, தேத்தாப்பளை ரோமன் கத்தோலிக்கத் தமிழ் வித்தியாலயம் ஆகும். நூற்றாண்டு கண்ட பாடசாலையான இது, ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கியிருந்தது. அதற்கு, பல தரப்பாரும், அப் பாடசாலை அமைந்துள்ள சமூகத்தைக் குறைகூறினர்.

இப்பின்னணியில் 23.10.2018 இல் தேத்தாப்பளை பாடசாலைக்கு, பதுளை பெண்கள் தமிழ் ம.வி. இல் இருந்து, அருட் சகோதரி M. Dilani A C (Apostolic Carmel) அவர்கள் இடமாற்றம் பெற்று வந்து, அதிபர் பதவியையும் பொறுப்பேற்றார். இவர் மட்டக்களப்பு, வந்தாறுமூலையைச் சேர்ந்தவர்.

புதிய அதிபரின் காலத்தில், தேத்தாப்பளை வித்தியாலயம் உச்சநிலையையடைந்தது. பரீட்சைப் பெறுபேறுகளில் மட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி மாகாண, தேசிய மட்டங்களில் சிறந்த சாதனைகளை நிலைநாட்டினர். இப்பாடசாலையுடன் சர்வதேச தொடர்புகளும் ஏற்பட்டன. பெளதீக வளங்கள், சுற்றுச் சூழல் போன்றன புதுப்பொழிவெய்தின. பாடசாலை, சமூக உறவு சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட்டது. இவ்வளவுக்கும், இந்த அதிபர் தனது ஆறு வருட காலப்பகுதியில் உதவி வேண்டி, வலயக் கல்விப்பணிமனைக்கு சென்றது ஐந்து நாட்கள் மட்டுமே.

இப்பாடசாலையின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்த திருகோணமலை, புனித மரியாள் கல்லூரியின் மேனாள் அதிபர் அருட் சகோதரி தெரேஸ் ராணியை இவ்வேளை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. நேற்றுடன் (19.03.2024) அதிபர் அருட் சகோதரி மேரி டிலானி அரச பணியில் இருந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இன்று அவரது அறுபதாவது பிறந்த தினம்.

அதிபரின் பிரியாவிடையை, அப்பாடசாலை சமூகம் மிகச் சிறப்பாக இன்று (20.03.2024) நடத்தியது. பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் மணிவிழாக் கொண்டாட்டமும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என, தனித்தனியாக அவர்கள், தம் அதிபருக்குப் பொன்னாடை போர்த்தி, பரிசில்களை வழங்கி தமது கெளரவத்துடன் கூடிய நன்றியறிதலைத் தெரிவித்தமை அங்கிருந்தோரை நெகிழ்வடையச் செய்தது. அருட் தந்தை, அருட் சகோதரிகள் ஆகியோருடன் கல்விப்புலத்திலுள்ளோர், அயற்பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் எனப் பலரும் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

'தேத்தா ஊற்று' என்ற பெயரில் மணிவிழா மலர் ஒன்றும் இன்று வெளியிட்டுவைக்கப்பட்டது. இப்பாடசாலை வரலாற்றில் வெளிவரும் முதலாவது மலர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய விழாவில் இம்மலரை அறிமுகம் செய்து உரையாற்றக் கிடைத்தமையையிட்டு நான் பேரானந்தமடைகின்றேன்.

தேத்தா ஊற்று, A4 அளவான 66 பக்கங்களைக் கொண்ட ஒரு மலர். இதில் 20 பக்கங்கள் வர்ணப்படங்களால் நிரம்பியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் என்பனவற்றுடன் பாடசாலை வரலாறு, அடைவுமட்டங்கள், இக்கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வுகள் என அனைத்தும் இம்மலரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர், மாணவர் ஆக்கங்களும் கூட இதில் இடம்பெற்றுள்ளன.

ஒளிப்படப் பேழை (Photo Gallery), வர்ணப்படங்களாகப் பல தலைப்புக்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. ஒவ்வொரு தலைப்புக்கும் சிறு விளக்கமொன்று அளித்திருப்பது அருமையாக உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு படமும் ஆயிரம் கதைகளைக் கூறிநிற்கின்றன. அவை கடந்தகாலத்தை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

மாணவர்கள், தமது வகுப்பாசிரியருடன் எடுத்த குழுப் புகைப்படங்களை, இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்படும் மனவெழுச்சியை சொல்லில் வடிக்க முடியாது.

உதாரணத்துக்கு ஒளிப்படப் பேழைத் தலைப்புக்கள் சில:

1. 'Religious Activities' - finding light in our faith
2. 'Oli Vizha Function' - Embracing the true meaning of Christmas
3. 'Competitions' - Rising to the challenge
4. 'English Day Function' _ Celebrating the power of language
5. 'Environment day' - Growing together for a greener tomorrow
6. 'Children's day' - Little moments, big smile
7. 'Classes after School' - Continuous Education
8. 'Election Day at School' - Creating future leaders

ஓய்வுநிலை எய்தும் அதிபர், ஆசிரியர்களை வெகு விமரிசையாக கெளரவித்து, அவர்களுக்கென மலர் வெளியிட்டு ஆவணப்படுத்துவது, சிறந்ததொரு கலாசாரமாகும். அண்மைக்காலத்தில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட கிராமப்புறப் பாடசாலைகளான கனமூலை மு. ம. வி. எழுவன்குளம் மு. ம. வி. போன்றவற்றில் இவை இடம்பெற்றன. இன்று தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் அவ்வரிசையில் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

அரச பணியிலிருந்து ஓய்வுபெறும் அருட் சகோதரி மேரி டிலானி அவர்கள் பூரண சரீர சுகத்துடன், நீடூழி அருட்பணியாற்ற எல்லாம் வல்லோனை வேண்டுவதுடன், இன்றுமுதல் இப்பாடசாலையைப் பொறுப்பேற்று நடத்தும் அருட் சகோதரி டெல்சியா AC அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

© Z.A. Zanhir - 20. 03. 2024

Address

Kalmunai

Telephone

+94775023697

Website

Alerts

Be the first to know and let us send you an email when P/Kal/Thethapalai R C T Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category