30/06/2026
2027ஆம் ஆண்டிற்கான தரம் - 01 புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்......................................
எமது அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 2027ஆம் கல்வியாண்டில் தரம் - 01 வகுப்பிற்குப் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
எனவே, தங்களது பிள்ளைகளை எமது பாடசாலையில் தரம் - 01 வகுப்பில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள்
01/07/2026 எமது பாடசாலையின் பிரதி அதிபர் காரியாலயத்தில் அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சீராகப் பூர்த்தி செய்து, உரிய திகதிக்குள் பாடசாலையில் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் தேதி: 30.07.2026
அதிபர்