Km/Al-Misbah Maha Vidyalaya Kalmunai

Km/Al-Misbah Maha Vidyalaya Kalmunai Unity = Faith = brotherhood

பிரஜா சக்தி சிரமதான நிகழ்வு          *****************************************                       கல்முனை பிரதேச செயல...
27/06/2026

பிரஜா சக்தி சிரமதான நிகழ்வு ***************************************** கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை 12,13 ஆம் பிரிவின் பிரஜா சக்தி பயனாளிகளின் சிரமதான நிகழ்வு எமது பாடசாலையின் உயர்தரப் பிரிவு முன்றலில் இடம்பெற்றது நிகழ்வில் பிரஜா சக்தி பயனாளிகள், உறுப்பினர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்****************************************கமு/கமு  அல் மிஸ்பாஹ் மகா...
27/06/2026

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
****************************************

கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் ஆலோசனை மற்றும் கல்வி வழிகாட்டல் பிரிவின் ஆசிரியர் எம். எஸ். லிஸாம் ஸாலி அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் எம். ஐ அப்துல் றஸ்ஸாக் அவர்களின் தலைமையில், பிரதி அதிபர் எம் .வை. எம் சாதிக் , உதவி அதிபர் இஸட் .ரி. ஸியாம் ஆகியோரின் மேற்பார்வையில் 26/06/2026 ஆம் திகதி நேற்று சர்வதேச போதை பொருள் பாவனை எதிர்ப்பு தின ஊர்வலமும் போதைப் பொருளுக்கு எதிரான அல் மிஸ்பாஹ்வின் பிரகடனமும் பாடசாலையில் நுழைவாயிலில் இருந்து கல்முனை கடற்கரை வீதியின் ஊடாக விழிப்புணர்வு ஊர்வலமாக இடம்பெற்றது

இந்நிகழ்வில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு கோஷங்களுடன் பவனி வந்தனர். நிகழ்வில் பாடசாலை ஒழுக்கற்று குழுப் பொறுப்பாசிரியர் எம். எஸ். சியாத், மற்றும் ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர்களான எம். ஏ. அம்சார், எம் எம் ஜாவித் எம் ஜே. எம். முபீத் ஆகியோரும்
கலந்து சிறப்பித்ததுடன் கல்முனை போலீஸ் நிலையத்தின் போலீஸ் உத்தியோகத்தரும் கலந்து மாணவர்களுக்கான பாதுகாப்பை வழங்கினர். ஊர்வலத்தில் பாடசாலை பெற்றோர்கள், பொதுமக்கள் சமூகசேவை அமைப்புக்கள் நலன் விரும்பிகள் என நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

எம். லிஸாம் ஸாலி, பொறுப்பாசிரியர்
(பசுமைமாறார் நட்புக்குகழகம்)

2025 /2026 கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்  பரீட்சையில்  சாதனை******************************************2025 ஆண்டுக்கான  ...
21/06/2026

2025 /2026 கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சாதனை
******************************************

2025 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த வருடத்தை விட இம்முறை உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினை 75% கூடுதலான மாணவர்ள் பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும் இப்பெறுபேறுகளுக்கு முன்னின்று உழைத்த கல்லூரியின் அதிபர் எம் ஐ அப்துல் றஸாக் பிரதி அதிபர் எம் வை எம் சாதீக் உதவி அதிபர் இஷட் ரி ஸியாம் பகுதித்தலைவர் ஏ ஸிகாவுல் இஸாம். உதவிப் பகுதித்தலைவர் ஏ அப்துல் றஹ்மான் மற்றும் பாட ஆசிரியர்கள் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

தகவல்
கல்லூரியின் ஊடகப்பிரிவு.

ஆசிரியர் வாண்மைவிருத்திச் செயலமர்வு              ******************************************                             ...
20/06/2026

ஆசிரியர் வாண்மைவிருத்திச் செயலமர்வு ****************************************** கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு இன்று ( 20.06.2026 ) கல்லூரியின் அதிபர் எம் ஐ அப்துல் றஸாக் தலைமையில் பாடசாலையின் தொழிநுட்ப அறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மூதூர் கல்வி வலயத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் ஆசிரிய ஆலோசகரும் இலங்கை கல்வியியலாளர் சேவை அதிகாரியுமான எஸ் ஹூசைன் அவர்கள் ஆசிரியர் வாண்மை விருத்தியில் AI தொழிநுட்டத்தின் தாக்கம் தொடர்பான செயற்பாடுகளை நடைமுறைக்குள் பிரயோகம் செய்தார். செயலமர்வில் கல்லூரியின் பிரதி அதிபர் எம் வை எம் சாதிக் அவர்களும் உதவி அதிபர் இஷட் ரி ஸியாம் மற்றும் பகுதித்தலைவர்கள் பாட இணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து பயன் பெற்றனர்.

தகவல்
கல்லூரியின் ஊடகப்பிரிவு

அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வுச் செயலமர்வு    ******************************************                             ...
20/06/2026

அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வுச் செயலமர்வு ****************************************** கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நிகழ்வு கடந்தத 18/06/2026 ஆம் திகதி பாடசாலை அனர்த்த முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் ஒத்திகை செய்யப்பட்டது. அனர்த்த நிலையின் போது தம்மை எவ்வாறு முகாமை செய்து என்றும் ஏனைய உறுப்பினர்களையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்றும் நடைமுறையில் காண்பிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம். ஐ.அப்துல் ரஸ்ஸாக் அவர்களும், பிரதி அதிபர் எம் .வை. சாதிக் அவர்களும் உதவி அதிபர் இஷட் .ரி ஸியாம் அவர்களும் ஒழுக்காற்றுச்சபைத் தலைவர் எஸ் சியாத் மற்றும் பகுதி தலைவர் சிஹாவுல் இஸாம் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் நிகழ்வினை கல்முனை பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஏ. எல். ஹசன் ஹில்மி, திருமதி எம் என். பஸ்மிலா ஆகியோறரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர்.

தகவல் - எம். லிஸாம் ஸாலி ( அனர்த்த முகாமைத்துவ செயலாளர்)

வாழ்த்துகிறோம்******************************************  கமு /கமு அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற முஹம...
20/06/2026

வாழ்த்துகிறோம்
******************************************

கமு /கமு அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற முஹம்மட் பாரூக் முஹம்மட் ஹாபீல் என்ற மாணவன் நேற்று வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் விஷேட சித்திகளைப் பெற்று (9A) கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் அவரை கல்லூரிச் சமூகம் சார்பாக நாமும் வாழ்த்துகிறோம்.

மார்க்க சொற்பொழிவும் விஷேட காலை ஆராதனையும்   *************************************கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்த...
20/06/2026

மார்க்க சொற்பொழிவும் விஷேட காலை ஆராதனையும்
*************************************

கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட விஷேட காலை ஆராதனை 19.06.2026 வெள்ளியன்று கல்லூரி அதிபர் எம் ஐ அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விஷேட மார்க்க சொற்பெழிவினை நிகழ்த்துவதற்கு நகர ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாமும் அல் ஹாதி அரபுக் கல்லூரியின் பிரதி அதிபருமான மௌலவி எம்,எச்.எம் இர்பாத்(ரஷாதி) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கல்லூரியின் பிரதி அதிபர் எம் வை எம் சாதிக் அவர்களும் உதவி அதிபர் இஷட் ரி ஸியாம் அவர்களும் பகுதித்தலைவர்கள் பாட இணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆராதனையில் மாணவருக்கான வினாவிடைபோட்டி நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றதோடு முடிவில் மாணவருக்கு இனிப்புப்பண்டங்களும் வழங்கப்பட்டன நிறைவாக கல்லூரி வளாகத்தில் மரங்களும் நடப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

தகவல் கல்லூரியின் ஊடகப்பிரிவு

விழிப்புணர்வுக் கருத்தரங்கு                 ***********************************                                   கமு/கம...
17/06/2026

விழிப்புணர்வுக் கருத்தரங்கு *********************************** கமு/கமு அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான வீதிப் போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாடசாலையின் முதல்வர் எம் ஐ அப்துல் றஸாக் தலைமையில் இன்று ( 16.06.2026 ) கல்லூரியின் தொழிநுட்பகூடத்தில் இடம்பெற்றது நிகழ்வில் பிரதி அதிபர் எம் வை எம் சாதீக் உதவி அதிபர் இஷட் ரி ஸியாம் ஒழுக்காற்றுச்சபைத் தலைவர் எஸ் எம் சியாத் மற்றும் ஒழுக்காற்றுச்சபை உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கல்முனை வீதிப் போக்குவரத்து பொறுப்பதிகாரி (OIC) HMN விஜயரட்ண அவர்களும் பொலிஸ் அதிகாரி P களுவாராய்ச்சி அவர்களும் கலந்து மாணவத் தலைவர்களுக்கான வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்பூட்டல் ஒழுங்கு விதிகள் பற்றி விளக்கமளித்தனர்.

தகவல் கல்லூரியின் ஊடகப்பிரிவு

ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு          ******************************************                         ...
13/06/2026

ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு ******************************************

கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்களுக்கான வாண்மைவிருத்திச்செயற்பாட்டுக் கருத்தரங்கு இன்று (13.06.2016) கல்லூரியின் தொழிநுட்ப அறையில் பாடசாலையின் அதிபர் எம் ஐ அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்றது மட்டக்களப்பு வலயத்தின் ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் எம் தயானந்தன் அவர்களால் mind relax & positive mind class room management என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் பிரதி அதிபர் எம் வை எம் சாதீக் , உதவி அதிபர் இஷட் ரி ஸியாம் மற்றும் பகுதித்தலைவர்கள் பாட இனைப்பாளர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து பயன்பெற்றனர்.

தகவல் - கல்லூரியின் ஊடகப்பிரிவு

நிர் குளிரூட்டி இயந்திரம் அன்பளிப்பு   *****************************************கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில...
12/06/2026

நிர் குளிரூட்டி இயந்திரம் அன்பளிப்பு
*****************************************
கமு/கமு அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் qatar charity நிறுவனத்தின் அனுசரனையுடன் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் வழங்கப்படும் நீர் குளிரூட்டி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12.06.2026) கல்லூரியின் விஷேட கல்விப்பிரிவில் கல்லூரியின் அதிபர் எம். ஐ அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதி அதிபர் எம். வை. எம் சாதீக் உதவி அதிபர் இஷட். ரி ஸியாம் பகுதித்தலைவி எச் ஆமினா பேகம் , பொறுப்பாசிரியை நதா எம் புர்கான், விஷேட கல்விப்பிரிவின் ஆசிரியர் ஏ,எம் றயீஸ், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் "கட்டார் சரிட்டி" நிறுனத்தின் உறுப்பினர்
எம். எப். எம் கப்ளீன் புஆட் அவர்களிடமிருந்து இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்படுவதனை காணலாம்.

தகவல்- கல்லூரியின் ஊடகப்பிரிவு

Address

ALIYAR Road, KALMUNAI/12
Kalmunai

Telephone

+94672223396

Website

Alerts

Be the first to know and let us send you an email when Km/Al-Misbah Maha Vidyalaya Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category