Human Ecology Research Organization

Human Ecology Research Organization

Share

மாற்றம் எனக்குள்ளேயிருந்து...................

உங்கள் மனதில் கணந்தோறும் எழும் எண்ணங்களை உற்று அவதானியுங்கள். அவற்றை நிதானமாக, மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வகைப்படுத்தி முறையாக, தெளிவான வடிவமாக வெளிப்படுத்தும் ஆற்றலே உங்களை வெற்றியாளராக்குகிறது. இது உங்களுக்குள் மறைந்திருக்கும் தலைவனை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது.

நீங்கள், உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கும் உலகையும் ஆய்வு செய்து உணர்ந்து, ஒரு நிதானமான, தெளிவான வடிவமாக வெளிப்படு

26/12/2021

அனைத்துமே ………….
அணுவளவும் தப்பாத மகச்சரியான ..
இயல்பான இயக்கம்!
ஆண்டவன் ஆட்சியில் - ஏது
அதர்மம்?

இதை ………
ஓம்கார தவமியற்றி - அக
மூலத்தில் விதைத்திட்டால்
பேரானந்தபிரம்ம அனுபவமே வசமாகிடும்!!

S.நாதன்.

05/09/2021

Happy

05/04/2021

அனைத்தும் அணுவளவும் தப்பாத மிகச் சரியான இயக்கம். இங்கு நான் மாற்றிட எதுவுமில்லலை.

இந்த புரிதலை தியானமாக்கவதே தவம்!

வானில் மேகங்கள் கடந்து செல்வதுபோல - மனதில்
எண்ணங்கள் கடந்திட...

வாழ்க்கை ஒரு ஆனந்த யோகமாகிறது!

இங்கு எல்லாமே இருக்கின்றன. ஆனால்
எல்லாமே ஒரு மாயவலையால் மூடப்பட்டிருக்குன்றன!
சிக்கிவிடுவோமோ என்கிற பயத்தினால் நாம்
எதையும் அனுபவிப்பதில்லை!

மனதின் அந்த மாய வலையில் சிக்காது அனைத்தையும் அனுபவிக்கும் கலையே யோகம்!

எஸ் . நாதன்.

25/12/2020

தேவனுடைய இராச்சியம் உங்களுக்குள் இருக்கிறது. சுமைகளைவிட்டு தேவனுக்குள் மகிழ்ந்திருங்கள்!

27/11/2020

பிரம்ம வித்தை!

எதை அறிவது -
பேரானந்தம் தருமோ - அதை
அறிந்திருப்பதுதான் .....
பிரம்ம வித்தை!

2500 வருடங்கள்.....
அவரும்.. இவரும்.. சொன்னாரகள் - அந்த
தத்துவ மூடைகளின் சுமைகளின் ..
அழுத்தங்களிருந்தும் - அவற்றின்
சிறைகளை உடைத்தும் - எது
விடுதலையாக்குகிறதோ - அது
பிரம்ம வித்தை!

ஓர் உயிர் ........
ஓர் ஆன்மா ......
ஓர் இயக்கம் - அது
பலவாகியும் .... ஒன்றாகியுமான
உயிர்ப்புள்ள இயந்திரங்களின் ..
உணர்வு மையங்களை இயக்கியே
செயல்களை நடத்திடுகிறது. - அதன்
பூரணம் அறிந்திடுவதே விழிப்பு! -அந்த
திட நம்பிக்கை, விழிப்புடன்
உயிர்மையத்தின் விடுதலை உணர்வை
புரிந்திடுவதே பிரம்மவித்தை!

மீண்டும் வாசியுங்கள்!
கருத்து பகிருங்கள்!
பகிருங்கள்!

08/04/2020

உயிர்.......!

உடலானது .....
பிரபஞ்ச இயக்க உயிர்த்துடிப்பை
உணர ஆரம்பித்தலே
ஒரு உயிரியின் பிறப்பாகிறது.

அந்த உணர்வே - உலக
அடையாளங்களில் மனமாகிறது.

அடையாளங்களை வளர்த்து,
பாதுகாக்கும் - அந்த
அறிவின் தேடலிலே
போராட்டமே வாழ்க்கையாகிறது.

உலக வாழ்விற்கு
அறிவுக்கண்ணாடி அவசியந்தான்.

ஆனால்.....
ஆனந்தவாழ்க்கைக்கு அந்த அறவுக்கண்ணாடியை அவ்வப்போது
கழற்றிவிடுவதைத்தவிர வேறு வழியிருப்பதில்லை!

உடலானது .....
பிரபஞ்ச இயக்க உயிர்த்துடிப்பை
உணரமுடியாது சேதமடையும்போது
அது அவ் உயிரியின் மரணம்!

மரணத்தில் உயிர் எங்கும் செல்வதில்லை!
உயிர் உயிரப்பாக என்றுமே....!

மீண்டும் வாசியுங்கள்.
கருத்து பகிருங்கள்!

எஸ்.நாதன்.

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


85 Clock Tower Road, 36/4, Ponnagar Road, Hatton
Jaffna
40000