24/12/2025
Christmas celebration at Aaruthal office on 24th December 2025.
Aaruthal is a local Non-Governmental Organization.
24/12/2025
Christmas celebration at Aaruthal office on 24th December 2025.
11/04/2025
Aaruthal Human Resource Development Cooperative Society is a unit of Aaruthal.Aaruthal signed a MoU with Palmyrah Development Board and with the technical support of Palmyrah Development Board and financial support of Socio Economic Development Fund,Aaruthal launched the ‘Odiyal cookies’ on 2nd April 2025.
ஆறுதல் மனித வள மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் பனை அபிவிருத்தி சபையுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு பனை அபிவிருத்தி சபையின் தொழில்நுட்ப உதவியுடன் ஒடியல் மா குக்கீஸ் தயாரித்து அதன் அறிமுக நிகழ்வு 2/4/2025 அன்று ஆறுதல் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் பனை அபிவிருத்தி சபையின் அலுவலகர்களும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளரும் சமூக பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதியும் ஆறுதல் நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
08/03/2025
Happy women’s Day
10/10/2024
சர்வதேச ஆசிரியர் தினம் 6/10/2024
இதனை முன்னிட்டு ஆறுதல் நிறவனத்தினால் நடத்தப்படும் பிளசம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு
10/10/2024 அன்று நடைபெற்றது இன் நிகழ்வு
பெற்றோர்களின் பங்களிப்புடன் சிறப்பக நடைபெற்றது
08/10/2024
ஆறுதல் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர். சுந்தரம் டிவகலாலா அவர்களின் 82வது பிறந்த தின நிகழ்வு 05.10.2024 அன்று ஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வின் சில பதிவுகள்.
06/10/2024
19/08/2024
முன்பள்ளி கல்வி டிப்ளமோ பயிற்சியில் சித்தி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 10.8.2024 அன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப் பட்டமளிப்பில் வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வலையங்களை சேர்ந்த 337 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த பட்டமளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகண கௌரவ ஆளுநர் திருமதி P.S.M. சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினர்களாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் பற்றிக் டிரஞ்சன் அவர்களும் கொழும்பு ரோட்டெரியன். தர்ஷன் ஜோன்(Rotary International, District 3220, Srilanka & Maldives) அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்த நிகழ்வுக்கு முன்பள்ளி கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மேலும் இப் பயிற்சியை வழங்கிய வளவாளர்களும் அது மாத்திரமல்லாது அவர்களோடு எங்களுடைய ஆறுதல் நிறுவனத்தினுடைய ஆளுகை குழு உறுப்பினர்களும் ஆறுதல் நிறுவன அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
17/07/2024
ஆறுதல் நிறுவனத்தினால் முன்பள்ளி சிறார்களின் அறிவு மற்றும் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்கான செயல் நூல்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்ற வளவாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு 2006 இலிருந்து வெளியிடப்பட்டு முன்பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் பரவிய COVID - 19 ஐ தொடர்ந்து இந்நூல்களை அச்சிட்டு வெளியிடுவதில் இடர்பாடு ஏற்பட்டது . மீண்டும் 2024 இல் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களின் வேண்டுகோள்களுக்கு அமைவாக
1. எழுதிப் பழகுவோம்
2. நிறந்தீட்டி மகிழ்வோம்
3. ஆரம்ப கணிதம்
4. தமிழ் செயல்நூல்
போன்ற நூல்களை வெளியீடு செய்துள்ளோம். இவற்றை முன்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெற்று பிள்ளைகளுக்கு வழங்கிப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் . ✨🤗❤️
14/05/2024
Convocation for the Diploma holders in Preschool Education.
*Ceremony hold on 4th May 2024 at Miani Hall,Thannamunai,Batticaloa.
*Provincial Director of Education of EP,President Rotary Colombo East,President elect were the guests.
*Prof.S.Mohanadas,Chancellor and Chairman of the examination board delivered the certification of Diploma speech.
*Preschool conferred Diploma in Preschool Education to Preschool teachers.
*The training programme was provided to 197 preschool teachers in five zones in Eastern Province - Trincomalee,Muthur,Batticaloa,Sammanthurai & Ampara
03/05/2024
முன்பள்ளி ஆசிரியர்களிற்கான பட்டமளிப்பு விழா - கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் 2019/2020 கல்வியாண்டில் சித்தியடைந்த முன்பள்ளி ஆசிரியர்களிற்கான பட்டமளிப்பு விழா நிகழ்வானது நாளை (04.05.2024) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வானது ஆறுதல் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா அவர்களின் தலைமையில் , முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் சு.மோகனதாஸ் - வேந்தர் வவுனியாப் பல்கலைக்கழகம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.S.குலேந்திரகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந் நிகழ்வில் மூதூர், சம்மாந்துறை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய வலயங்களில் இருந்து 198 ஆசிரியர்கள் பட்டமளிக்கப்படவுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துவதோடு அவர்களின் சேவை சிறக்க ஆறுதல் நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!
13/04/2024
Happy Sinhala - Tamil New Year Wishes 🎇
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Friday | 09:00 - 16:00 |
| Saturday | 09:00 - 16:00 |