யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி Jaffna Hindu College.
இந்துக் கல்லூரி சம்பந்தமான அனைத்து தகவல்களும். இலங்கையின் முன்னணி ஆண்கள் கல்லூரி .

Big Match 2023 இன் T-Shirtஐ பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே உள்ள Google forms ஐ நிரப்பவும்…[பணம் செலுத்தி பற்றுச்சீட்டை ...
18/06/2023

Big Match 2023 இன் T-Shirtஐ பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே உள்ள Google forms ஐ நிரப்பவும்…

[பணம் செலுத்தி பற்றுச்சீட்டை Google forms இல் upload செய்யுங்கள்]
Material - Polo

தொடர்புகளிற்கு
சாரங்கன் 0779727975

https://forms.gle/MDSTDbDC7ozxQoNJA

பல ஆண்டுகளிற்கு பின் சேர்ந்த அண்ணன்கள்; மைதானம் வர மனைவியிடம் சொன்ன பொய்கள்!! || Ushanthan View
19/04/2023

பல ஆண்டுகளிற்கு பின் சேர்ந்த அண்ணன்கள்; மைதானம் வர மனைவியிடம் சொன்ன பொய்கள்!! || Ushanthan View

#தமிழ் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் தொடர்பான காணொளி. இத் தள...

வெறும் வாயை மெல்வோருக்கு,வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது பாடசாலைகளின், அதிபரின், ஆசிரியர்களின் கடமை. அதை பயன்பட...
18/08/2022

வெறும் வாயை மெல்வோருக்கு,

வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது பாடசாலைகளின், அதிபரின், ஆசிரியர்களின் கடமை. அதை பயன்படுத்திக்கொள்வது அவரவர் உரிமை. இங்கே எவரும் எதையும் திணித்துவிட முடியாது என்பது இந்துவில் கற்ற ஒவ்வொருவருக்கும் தெரியும்.

இந்துக்கல்லூரியில் படித்த ஒவ்வொருவனும் படிப்பில் மட்டுமில்லை தனக்கேற்ற பிற துறையொன்றினூடாக சமூகத்தில் தன்னை என்றும் நிரூபித்துக்கொண்டுதான் இருப்பான். பிறமொழிக்கற்கையும் அதற்கான வாய்ப்புகளும் அப்படித்தான். இதையும் பயன்படுத்தி சாதிக்க சிலர்/பலர் இருக்கத்தான் செய்யவார்கள்.

இடையில் குத்திமுறிபவர்கள் வேண்டுமானால் காணாமல் போகலாம். ஆனால் இந்து அன்னை தன் பாதையில் வீறு நடைபோடுவாள். மைந்தர்களும் அப்படியே.

இந்துவின் மைந்தனாக என்றும் நான் பெருமைப்படுகின்றேன் 🤍💙

SLSCA U-19 Cricket Tournament 2021-2022 ( Div III )Jaffna Hindu College (U19) won by 3 wickets against St Patricks Colle...
09/03/2022

SLSCA U-19 Cricket Tournament 2021-2022 ( Div III )

Jaffna Hindu College (U19) won by 3 wickets against St Patricks College!

இந்து அன்னையின் பொங்கல் 💙🤍
13/01/2022

இந்து அன்னையின் பொங்கல் 💙🤍

சைவத்தினையும் தமிழையும் இரு கண்களாய் வளர்த்த எங்கள் ஆசான் நல்லையா தங்கவேல் அவர்கள் இன்று எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதங்...
09/01/2022

சைவத்தினையும் தமிழையும் இரு கண்களாய் வளர்த்த எங்கள் ஆசான் நல்லையா தங்கவேல் அவர்கள் இன்று எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதங்களில் இளைப்பாறச் சென்றார்.

இறுதிக்கிரிகைகள் நாளை 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.

யாழ் இந்துக்கல்லூரியில் சாரணீய பொறுப்பாசிரியராக பல வருடங்கள் பணியாற்றி இன்று மீளாத்துயில் கொள்ளும் கணித ஆசான் பா.முத்துக...
19/12/2021

யாழ் இந்துக்கல்லூரியில் சாரணீய பொறுப்பாசிரியராக பல வருடங்கள் பணியாற்றி இன்று மீளாத்துயில் கொள்ளும் கணித ஆசான் பா.முத்துக்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

ஆத்மா சாந்தியடைய சிவஞான வைரவரை வேண்டுவோம்.

பல போராட்ட மறவர்களை உருவாக்கியதமிழர் தலைநிமிர் கழகம் ❤💛  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி💙       #யாழ்  #இந்துக்  #கல்லூரி  #...
27/11/2021

பல போராட்ட மறவர்களை உருவாக்கிய
தமிழர் தலைநிமிர் கழகம் ❤💛

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி💙

#யாழ் #இந்துக் #கல்லூரி #மாவீரர் #நாள்

13/11/2021
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் “திடல்” திட்டத்தினூடு புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்...
12/11/2021

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் “திடல்” திட்டத்தினூடு புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானம் 12/11/2021 உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை வருடங்களாக சுமார் ஐந்தரை கோடி ரூபா செலவில் இம்மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.

கல்லூரி சமுகம் அருகிலுள்ள காணியொன்றை கொள்வனவு செய்ததன் மூலம் புனரமைப்பு காலத்தில் மைதானத்தின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடப்படத்தக்கது.

1. சீரற்ற புற்தரையை கொண்ட மைதானமாக இருந்ததினால் விளையாட்டு வீரர்கள் பல அசௌகரியங்களை கொண்டிருந்தனர்.
அதேவேளையில்,
2. மழைநீர் தேங்குவதால் மைதானத்தை வருட இறுதிகளில் முற்றாக பயன்படுத்த முடியாத சூழலும் இருந்தது.
தவிர,
3. போதியளவான நீர்ப்பாசன வசதியின்றி இருந்தமை உட்பட இதர சில காரணங்களால் புற்தரையினை சீராக பராமரிக்க முடியாமலும் இருந்தது.

மேற்படி காரணங்களுடன்
5. வீரர்களுக்கான மலசலகூட வசதி
6. நேர்த்தியான score board
7. பாதுகாப்பான எல்லை மதில்கள்
போன்ற பல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘திடல்’ திட்டமானது ஏறக்குறைய தன் நோக்கத்தை பூர்த்திசெய்து நிறைவுக்கு வந்துள்ளது.

தற்போதய மைதானம்
1. மைதானங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் புல் வகைகளில் ஒன்றினால் பேணப்படுகின்றது.
2. அப்புற்தரையை பேணுவதற்கு அவசியமான தானியங்கி நிலக்கீழ் நீர்ப்பாசனம் நிறுவப்பட்டுள்ளது.
3. புற்தரையை சரியாக பேணுவதற்காக இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு பயன்பாட்டிலுள்ளது.
4. நேர்த்தியான சுற்றுமதில் அமைக்கப்பட்டு கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
5. அணிகளுக்கான Dressing Room மற்றும் அணிகளுக்கு தேவையானளவு பிரத்தியேக குளியல்/கழிவு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
6. இலத்திரனியல் score board மற்றும் அதற்கான ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளன.
7. துடுப்பாட்டப்பயிற்சிக்கான புற்தரை (Turf nets) அமைக்கப்பட்டுள்ளது.
8. போதிய சரிவுடன் (slope) கூடிய துடுப்பாட்டத்திற்குகந்த மைதான தரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
9. அழகிய மூன்று நுழைவாயில்கள் நிறுவப்பட்டுள்ளன.
10. மழைநீரை (சாதாரண மழைநீரை) உள்ளுறிஞ்சக்கூடிய நான்கு நிலக்கீழ் நீர்த்தொட்டிகள் (sump) நிறுவப்பட்டுள்ளது.
11. மைதானத்தினால் ஏந்தப்படும் மழைநீரை விரைவாக உறிஞ்சி நிலக்கீழ் நீர்த்தொட்டிக்குள் சேகரிக்கக்கூடிய பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

இவையுட்பட பல்வேறு நுணுக்கங்களுடன் இத்திட்டம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது என்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமே.

79th BOP has planned to do a community development project. We have chosen a very underdeveloped village with more than ...
11/11/2021

79th BOP has planned to do a community development project. We have chosen a very underdeveloped village with more than 100 students. We have planned to help them with basic educational equipments and help them psychologically to focus on education. This fund raising project helps us to collect money for it. To get your jersys and keytags please contact the number given or can join us on 12 th november at the clubhouse opening JHC.
Jersey 1500.00
Keytag 120.00

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeNxItP7MOocOtFqFN_yAzz619ILE9NEq5o2I8Yxp0h_rVDaw/viewform?usp=sf_link
You can place the order for the jersey through above link.

We hope you help us.

Address

கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி:

Shortcuts

Share

Category