Ramachandra Kurukkal Sanskrit Research Center & Library
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ramachandra Kurukkal Sanskrit Research Center & Library, Education, Jaffna.
>> சிவமூலிகைகளின் சிகரம் வில்வம் - வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! > வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.
பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.
>> வில்வத்தின் விஞ்ஞான குணம்:
ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos. ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை. வில்வ இலைகளை, குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.
வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம். செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.
நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன. காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.
>> மருத்துவ குணம்:
வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால்..வில்வ இலையை அரைத்து சிறிதளவு உண்ணக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
>> வில்வ மரத்தின் மருத்துவ பயன்கள்:
இது எளிதில் குணமடையாத நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாகச் செயல்படுகிறது. வில்வ இலைகளை உண்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
காரத்தன்மையுள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பிழிந்து அதன் சாற்றுடன் பசும்பால் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் தன்மைகொண்டது. வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாணமுருங்கைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால், சர்க்கரை நோய் குணமாகும்.
வில்வப்பழத்தை பிழிந்து சர்பத் போன்ற பானங்கள் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும்,
வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் , மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன.
பழத்தின் ஓட்டிலிருந்து தைலம் தயாரிக்கலாம். இது `வில்வ தைலம்’ எனப்படும்.
>> வில்வ இலைகளைப் பறிக்கும்போது கவனிக்கவேண்டியவை:
வில்வ இலைகளை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத் தனித்தனியாக பறிக்கக் கூடாது. பல்வேறு ஆலயங்களில் வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது.
சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும் வில்வ இலையால் பூஜை செய்யப்படுகிறது.கும்பகோணம் சக்கரபாணிக் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
வில்வம் இறைவன் நமக்களித்த செல்வம்.சிவனுக்குப் பிரியமாகவும். ஆரோக்கியத்துக்கு அரணாகவும் திகழ்கிறது.
தீர்க சுமங்கலி பவா
===============
🌼 தீர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.
#இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.
🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்
🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது
TKS to Rangan SRINIVASAN
05/11/2017
அம்பிகையின் 64 உபசாரங்கள்
1.பாத்யம் - - திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2.ஆவராணாவரோபணம் --- -நகைகளை கழற்றுதல்.
3.ஸுகந்திதைலாப்யங்கம் -- வாஸனை எண்ணை தேய்த்தல்.
4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல்.
5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல்
6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில்
தேய்த்தல்.
7. உஷ்ணோதகஸ்நானம் - வென்னீரில் குளித்தல்.
8. கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்- தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்
10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல்.
11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.
14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.
15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்
16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா: - மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள்.
17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்
18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.
19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.
20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை.
21.ஸீமந்தஸிந்தூரம் -வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம் - நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.
23. காலாஞ்ஜனம் - கறுப்பு மை.
24. வாளீயுகளம் - காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது)
25. மணிகுண்டலயுகளம் - ரத்ன குண்டலங்கள்.
26. நாஸாபரணம் - மூக்குத்தி - புல்லாக்கு.
27. அதரயாவகம் - உதட்டின் சிவப்புசாயம்
28. ப்ரதமபூஷணம் - மாங்கல்யம்.
29. கனகசிந்தாகம் - தங்கமயமான புளியிலை போன்ற நகை.
30. பதகம் - பதக்கம்
31. மஹாபதகம் - நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று)
32. முக்தாவலி - முத்துமாலை.
33. ஏகாவளி - ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
34. ச்சன்னவீரம் - ஒரு ஆபரண விசேஷம்.
35. கேயூரயுகளசதுஷ்டயம் - ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.
36. வலயாவளி - வளைகள்.
37. ஊர்மிகாவளி - மோதிரங்கள்.
38. காஞ்சீதாம -ஒட்டியாணம்.
39. கடிஸூத்ரம் - அரைஞாண்கயிறு.
40. ஸௌபாக்யாபரணம் -அரை மூடி(அரசிலை).
41. பாதகடகம் -கால்காப்பு.
42. ரத்னநூபுரம் - ரத்னமயமான கொலுசு
43. பாதாங்குளீயகம் - கால்மெட்டி.
44. ஏககரேபாசம் - ஓர்கையில் பாசக்கயிறு.
45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி
46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் - வேறொருகையில் நாமக்கரும்பு.
47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள்.
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.
50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் - காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.
51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம் - ஆசமனம்.
53. கற்பூர வீடிகா -பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் - ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு
55. மங்களாரார்த்திகம் - தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.
56. சத்ரம் - குடை.
57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள்.
58. தர்பணம் - கண்ணாடி.
59. தாளவ்ருந்தம் -விசிறி.
60. கந்தம் - சந்தணம்.
61. புஷ்பம் - பூ
62. தூபம் -சாம்பிராணிதூபம்
63. தீபம் - நெய்தீபம்.
64. நைவேத்யம் - நிவேதனம்.
இவை மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான ஸ்ரீ பாலாவிற் கேற்பட்டதான உபசாரங்கள்.
ஸ்ரீ பாலா உபாஸகர்
த.செல்வரத்தினம் தீக்ஷிதர்
ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பார்வதி கேட்டார் .
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?
குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,
அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,
ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,
அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.
சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?
என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை
“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “
என வினவினார்.
"அவன் சொன்னான்”
எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.
கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.
நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.
" குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."
"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை
"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""....
#மனதார நம்புங்கள் உங்களின் நம்பிக்கை வெற்றிக்கு வெகு அருகில் உங்களை அழைத்துச் சென்றுவிடும்
14/05/2016
காமாக்ஷி விருத்தம்
மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே -- திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
ஆசிரிய விருத்தம்
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே,
சுக்ர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்,
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்,
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா,
சிவ சிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 1 ]
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 2 ]
கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ,
சதிகாரியென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே,
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக னக் கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே,
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள் வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 3 ]
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்துநான்
பேரான ஸ்தலமு மறியேன்,
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்.
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன்
ஆச்சிநீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 4 ]
பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்தே னம்மா,
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல்
பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா,
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிது நீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ
அதை யெனக்கருள் புரிகுவாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 5 ]
மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையரை யன்மக ளானநீ
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாட்சிநீ,
தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை யீன்ற வளும்நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்த வளும்நீ,
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண் ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 6 ]
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
காதி னில் நுழைந்த தில்லையோ,
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
அது நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 7 ]
முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
இம் மூடன் செய்தா னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணினேனோ,
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா,
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா.
சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாண மாகுதம்மா,
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
அடியேன் முன்வந்து நிற்பாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 8 ]
எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னைரட்சி,
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா,
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 9 ]
பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்,
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்க் காத்திடம்மா,
பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி,
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
னம்மையேகாம்பரி நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 10 ]
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனி ஜெனன் மெடுத் திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே,
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக் காதே யம்மா,
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்,
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்.
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத்தீரு மம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 11 ]
************************************
கண்ணிய பூரணை காணு மிரவிற் கலைமன்டில
நண்ணிய மத்தியில் நின்னை நினைந்து நயப்புடனே
பண்ணிய பூசைப்பின் ஆயிர நாமம் படிக்குமன்பர்
எண்ணிய நூறு வயது மிருப்ப ரிதுதிடமே
16/07/2015
रचन: आदि शङ्कराचार्य
रत्नैः कल्पितमासनं हिमजलैः स्नानं च दिव्याम्बरं
नानारत्न विभूषितं मृगमदा मोदाङ्कितं चन्दनम् ।
जाती चम्पक बिल्वपत्र रचितं पुष्पं च धूपं तथा
दीपं देव दयानिधे पशुपते हृत्कल्पितं गृह्यताम् ॥ 1 ॥
सौवर्णे नवरत्नखण्ड रचिते पात्रे घृतं पायसं
भक्ष्यं पञ्चविधं पयोदधियुतं रम्भाफलं पानकम् ।
शाकानामयुतं जलं रुचिकरं कर्पूर खण्डोज्ज्चलं
ताम्बूलं मनसा मया विरचितं भक्त्या प्रभो स्वीकुरु ॥ 2 ॥
छत्रं चामरयोर्युगं व्यजनकं चादर्शकं निर्मलं
वीणा भेरि मृदङ्ग काहलकला गीतं च नृत्यं तथा ।
साष्टाङ्गं प्रणतिः स्तुति-र्बहुविधा-ह्येतत्-समस्तं मया
सङ्कल्पेन समर्पितं तव विभो पूजां गृहाण प्रभो ॥ 3 ॥
आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोग-रचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥ 4 ॥
कर चरण कृतं वाक्कायजं कर्मजं वा
श्रवण नयनजं वा मानसं वापराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्-क्षमस्व
जय जय करुणाब्धे श्री महादेव शम्भो ॥ 5 ॥
ரசன: ஆதி ஶம்கராசார்ய
ரத்னைஃ கல்பிதமாஸனம் ஹிமஜலைஃ ஸ்னானம் ச திவ்யாம்பரம்
னானாரத்ன விபூஷிதம் ம்றுகமதா மோதாங்கிதம் சன்தனம் |
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயானிதே பஶுபதே ஹ்றுத்கல்பிதம் க்றுஹ்யதாம் || 1 ||
ஸௌவர்ணே னவரத்னகண்ட ரசிதே பாத்ரே க்றுதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பானகம் |
ஶாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூர கம்டோஜ்ஜ்சலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு || 2 ||
சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஶகம் னிர்மலம்
வீணா பேரி ம்றுதங்க காஹலகலா கீதம் ச ன்றுத்யம் ததா |
ஸாஷ்டாங்கம் ப்ரணதிஃ ஸ்துதி-ர்பஹுவிதா-ஹ்யேதத்-ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்பிதம் தவ விபோ பூஜாம் க்றுஹாண ப்ரபோ || 3 ||
ஆத்மா த்வம் கிரிஜா மதிஃ ஸஹசராஃ ப்ராணாஃ ஶரீரம் க்றுஹம்
பூஜா தே விஷயோபபோக-ரசனா னித்ரா ஸமாதிஸ்திதிஃ |
ஸஞ்சாரஃ பதயோஃ ப்ரதக்ஷிணவிதிஃ ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஶம்போ தவாராதனம் || 4 ||
கர சரண க்றுதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஶ்ரவண னயனஜம் வா மானஸம் வாபராதம் |
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத்-க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஶ்ரீ மஹாதேவ ஶம்போ || 5 ||
உண்மையான பக்தன் ஒருவன், பரமேஷ்வரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான்:
“ஈச்வரா! நான் உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது? திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஓர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா?
விசுவாகாரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா! உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் அங்கேயும் தான் நீ இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது?
சரி, பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞனான உன்னிடம் பிரார்த்திபதும் அபசாரமாக அல்லவா ஆகிறது?
பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். நீ ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாக இருக்கத்தானே செய்கிறேன்?
அதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். அது சரி, எல்லாமான உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன்.
நீ அகண்ட ஆனந்த ஸ்வரூபம்; உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது. இருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே? இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே! இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. போக்கினால் நீ தான் எல்லாமும், நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்று ஆகும்.
அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன்!” – இப்படிச் சொல்கிறார் அந்த பக்தர்.
இந்த ரீதியிலேயே ‘சிவ மானஸிக பூஜா’ என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்தித்திருக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.
மஹ்யம் தேஹி ச பகவன்
மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்
‘என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு’ என்கிறார்.
இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம்.
நமக்கு வேண்டியவர்களை விட்டுவிட்டால் தவிக்கிறோமே, நம்மையே விட்டுவிட்டதற்கு எவ்வளவு தவிக்க வேண்டும்? நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்கவேண்டும். பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படிச் சகிக்க முடியாமல் தவிப்பதுதான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர்.
இதற்கு முதல்படியாக வெளிப்பூஜை, கோவில் வழிபாடு எல்லாம் வேண்டியிருக்கிறது. உலக நினைப்பே ஓயாத காரியமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இவைதான் பரமாத்மாவை நினைக்கச் சாதனங்களாகும்.
இந்தக் கட்டத்தில் ஸ்வாமி கோவிலில் மட்டுமின்றி எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார்; நாமும்கூட அவரேதான் என்று நாம் உணராவிட்டாலும் பரவாயில்லை. மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே கையைத் துடைக்காத அளவுக்கு வந்திருக்கிறோமல்லவா?
ஸ்வாமி இல்லவே இல்லை என்று நினைக்காமல் எங்கேயோ ஓரிடத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயபக்தியுடன் ஆரம்பித்தாலே போதும் – சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்தெயிருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும். புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, “என்னையே எனக்குக் கொடு” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருக்க வேண்டும். ஞானாம்பிகை கிருபை செய்வாள்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jaffna
40000