03/09/2025
வெற்றியைக் கொண்டாடுவோம்!
நடைபெற்று முடிந்த தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில், எமது ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி மகளிர் அணி முதலிடம் (Champion) பெற்று, பெருமைமிகு வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இது, கல்லூரியின் வரலாற்றில் உடற்பயிற்சி அணி தேசிய மட்டத்தில் சாதனை படைத்த முதலாவது தருணம் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
இந்த சிறப்பான வெற்றியை ஏற்படுத்திய அனைத்து மாணவியருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் என் உளம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், குறிப்பாக கல்லூரியின் முதன்மைப் பயிற்றுவிப்பாளராகிய திரு. குபேசன் அவர்களுக்கும், எங்கள் கல்லூரி அதிபர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
இச் சாதனையாளர்களை வாழ்த்தி, பாராட்டிக் கௌரவிப்பது எமது கடமையாகும். எனவே நாளை 04.09.2025 வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு, சாதனையாளர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு கல்லூரிச் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், வசதியுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி
31/08/2025
2025 ஆம் ஆண்டிற்கான உடற்பயிற்சி போட்டியில் எமது பாடசாலை பெண்கள் அணியினர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று வெற்றியை தமதாக்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொண்டதுடன் சிறந்த அணித்தலைவியாக றஞ்சிகா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் உடற்பயிற்சி அணி தேசியமட்டம் செல்வது இதுவே முதற்தடவை ஆகும். அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் முதல்வர் Sinnathampy Thirikaran அவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய குபேசன் ஆசிரியர்க்கும் அவரோடு துணை நின்று உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பங்கு பற்றிய மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Copy
30/09/2024
எமது பாடசாலையின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்.
15/04/2024
2024 ஆம் ஆண்டின் பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை 8.30 க்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
15/08/2023
மரண அறிவித்தல்...!
ஓய்வு பெற்ற உடற்கல்வி மற்றும் ஆங்கில ஆசிரியர்
கந்தையா சாம்பமூர்த்தி
தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சாம்ப மூர்த்தி ஓய்வு பெற்ற உடற்கல்வி மற்றும் ஆங்கில ஆசிரியர் (புத்தூர்ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரி) அவர்கள் 15.08.2023 இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமாகி விட்டார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17.08.2023 வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் மதியம்12 மணியளவில் ஈமைக் கிரிகைகள் நடைபெற்று புத்தூர் கிந்துசிட்டி மயாணத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
14/04/2023
நாளை மறுதினம் சங்க பொதுக்கூட்டம்.
9 மணிக்கு ஆரம்பமாகி 10.30 மணிக்கு நிறைவுபெறும்.
10.30 மணிக்கு பழைய மாணவர்கள் பங்கு பெறும் துடுப்பாட்ட போட்டி இடம்பெறும்.
12மணிக்கு மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவுறும்.
பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது பங்குபற்றுவதுடன் புதிய உறுப்பினர்களாக ஆகக்குறைந்தது ஐவரையாவது அழைத்து வரவும்.
12/04/2023
பழைய மாணவர் சங்க செயற்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக பழைய மாணவர்களின் தரவுகளை இற்றைப்படுத்தும் நோக்கில் இவ் படிவம்(google form) தயாரிக்கப்பட்டுள்ளது.
https://forms.gle/QVqSqhDByLT4g8oe8
இந்த படிவம் நிரப்பி சமர்ப்பிப்பதுடன் பழைய மாணவர் சங்க 1099474 என்ற இலங்கை வங்கி கணக்கிற்கு ஆக குறைந்தது 500ரூபா செலுத்துவதன் மூலம் நீங்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினராக உள்ளீர்க்கப்படுவீர்கள் (பற்றுச்சீட்டை 0774040146 what's appஎன்ற இலக்கத்துக்கு-பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிட்டு அனுப்பவும்).
பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 16.04.2023 காலை 9.00மணிக்கு இடம்பெறும்
அனைத்து பழைய மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.